பிள்ளை வளர்ப்பு விடயத்தில் தந்தையின் உரிமைகள் சம்பந்தமான மர்க்க தெளிவ்வு

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹ

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

பொதுவாகக் குழந்தையைப் பாதுகாத்து வளர்ப்பதும் பராமரிப்பதும் தாய், தந்தை இருவரினதும் கடமையாகும். அவ்விருவரும் விவாகரத்து மூலம்; பிரிந்துவிட்டால் குழந்தையின் தாயே பராமரிப்புக்குத் தகுதியானவராவார்.

الحضانة حفظ من لا يستقل وتر بيته والإناث أليق بها (فصل: الحضانة، كتاب النفقات، منهاج الطالبين للإمام النووي رحمه الله)

ஏனெனில், தாய்மார் மிகவும் இரக்க சுபாவமுடையவர்கள், பராமரிப்பதில் சிறந்தவர்கள், பொறுமையுள்ளவர்கள், அதிகமாகப் பிள்ளைகளுடன் சேர்ந்து இருப்பவர்கள்.  இதனால் தான் நபி ஸல்லல்லாஹ அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வரும் ஹதீஸில் குறித்த குழந்தையைப் பராமரிப்பதற்குத் தாயே (மறுமணம் செய்யாத பட்சத்தில்) தகுதியானவள் என்று கூறினார்கள்.

الْحَضَانَةُ نَوْعُ وِلَايَةٍ وَسَلْطَنَةٍ، لَكِنَّ (الْإِنَاثَ أَلْيَقُ بِهَا) لِأَنَّهُنَّ أَشْفَقُ وَأَهْدَى إلَى التَّرْبِيَةِ وَأَصْبَرُ عَلَى الْقِيَامِ بِهَا وَأَشَدُّ مُلَازَمَةً لِلْأَطْفَالِ. (فصل: الحضانة، كتاب النفقات، مغنى المحتاج)

“நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண் வந்து “அல்லாஹ்வின் தூதரே எனது வயிறு என்னுடைய இம்மகனை சுமக்கும் உறையாகவும், எனது மார்பு இவன் (பால்) அருந்தும் பையாகவும், எனது மடி இவனது விரிப்பாகவும் இருந்தன, இந்நிலையில் அவனது தகப்பன் என்னை தலாக் சொல்லிவிட்டு என்னிடமிருந்து மகனை எடுத்துச் செல்ல நாடுகிறான்” என்று கூறினாள். அப்பொழுது நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் “மற்றுமொரு திருமணம் முடிக்காத வரை நீயே அவனை வளர்க்க உரித்தானவள்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் றழியல்லாஹ{ அன்ஹ{, நூல்: அபூ தாவூத் : 2276)

أن امرأة قالت يا رسول الله إن ابني هذا كان بطني له وعاء وثديي له سقاء وحجري له حواء وإن أباه طلقني وأراد أن ينتزعه مني فقال لها رسول الله صلى الله عليه وسلم أنت أحق به ما لم تنكحي. (الراوي: عبدالله بن عمرو بن العاص المحدث: أبو داود - المصدر: سنن أبي داود- الكتاب : كتاب الطلاق- الباب : باب من أحق بالولد)

என்றாலும், தாய் மறுமணம் செய்தல், மரணித்தல், பராமரிக்க மறுத்தல், கெட்ட குணமுடையவளாக இருத்தல், சுய நினைவை இழப்பவளாக இருத்தல் போன்ற பண்புகள் இருக்கும் நிலைமைகளில், தாயின் தாய் அல்லது அவளின் தாய் (பாட்டி) ஆகியோர் பராமரிக்கத் தகுதியானவர்களாகக் கருதப்படுவார்கள்;. 

وَلَا حَضَانَةَ لِرَقِيقٍ وَمَجْنُونٍ، وَفَاسِقٍ وَكَافِرٍ عَلَى مُسْلِمٍ وَنَاكِحَةِ غَيْرِ أَبِي الطِّفْلِ إلَّا عَمَّهُ وَابْنَ عَمِّهِ وَابْنَ أَخِيهِ فِي الْأَصَحِّ، (فصل: الحضانة، كتاب النفقات، منهاج الطالبين للنووي رحمه الله)

அவர்கள் இல்லாதவிடத்து, குழந்தையின் தகப்பன் தகுதியானவராகிவிடுவார். அவரும் இல்லாத பட்சத்தில் தந்தையின் தாய் அல்லது அவளது தாய் (பாட்டி) பராமரிப்புக்குத் தகுதியானவராவார்கள். 

وَإِنْ اجْتَمَعَ ذُكُورٌ وَإِنَاثٌ فَالْأُمُّ ثُمَّ أُمَّهَاتُهَا ثُمَّ الْأَبُ، وَقِيلَ تُقَدَّمُ عَلَيْهِ الْخَالَةُ وَالْأُخْتُ مِنْ الْأُمِّ، وَيُقَدَّمُ الْأَصْلُ عَلَى الْحَاشِيَةِ، فَإِنْ فُقِدَ فَالْأَصَحُّ الْأَقْرَبُ، (فصل: الحضانة، كتاب النفقات، منهاج الطالبين للنووي رحمه الله)

என்றாலும், குழந்தை தனது காரியங்களைச் சுயமாகச் செய்யவும், நலவு கெடுதியைப் பிரித்தறியவும் முடியுமான வயதை அடைந்ததன் பின், அக்குழந்தையின் விருப்பத்திற்கேற்ப தந்தையையோ, தாயையோ அல்லது தாய் இல்லாத பட்சத்தில் தாயின் தாயையோ தெரிவுசெய்யும் உரிமை அக்குழந்தைக்கு உண்டு. இதைப் பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது.

நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண் வந்து யா ரஸலல்லாஹ்! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், எனது கணவன் எனது பிள்ளையை என்னிடம் இருந்து எடுத்துச் செல்வதற்கு நாடுகிறார். அப்பிள்ளை எனக்கு அபூ இனபா எனும் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துத் தருகின்றான் என்று கூறினார். அதே நேரத்தில் அவளது கணவனும் அங்கு சமுகமளித்து என்னுடைய பிள்ளையை எடுப்பதற்கு யாரால் முடியும் என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அப்பிள்ளையைப் பார்த்து “சிறுவனே இதோ உனது தாயும் தந்தையும் இருக்கிறார்கள். உனக்கு யார் விருப்பமோ அவரது கையைப் பிடித்துக்கொள்” என்று கூறினார்கள். அதற்கு அப்பிள்ளை தாயின் கரத்தைப் பிடித்துக் கொண்டு சென்றது. (நூல் : அபூ தாவூத் : 2277)

عن هلال بنِ أُسامة أن أبا ميمونة سُلْمى مولىً مِن أهلِ المدينةِ رجلَ صدقٍ، قال: بينما أنا جالسٌ مع أبي هريرة إذ جاءته امرأةٌ فارسية، معها ابنٌ لها، فادَّعَياه، وقد طلّقها زوجُها، فقالت: يا أبا هريرة ورطنت له بالفارسية، زوجي يُريد أن يذهبَ بابني، فقال أبو هريرة: استهما عليه، ورَطَنَ لها بذلك، فجاء زوجُها، فقال: من يُحاقُّني في ولدي؟ فقال أبو هريرة: اللهم إني لا أقولُ هذا، إلا أني سمعتُ امرأةً جاءت إلى رسولِ الله -صلَّى الله عليه وسلم- وأنا قاعد عنده، فقالت: يا رسولَ الله، إن زوجي يريدُ أن يذهبَ بابني، وقد سقاني مِن بئر أبي عِنَبة، وقد نفعني، فقال رسولُ الله -صلَّى الله عليه وسلم-: "استَهِما عليه" فقال زوجُها: من يُحاقُّني في ولدي؟ فقال النبي -صلَّى الله عليه وسلم-: "هذا أبوك، وهذه أُمُّك، فَخُذْ بيدِ أيهما شئتَ" فأخَذَ بيدِ أُمه، فانطلقتْ به. (الراوي: أبو هريرة رضي الله عنها - المحدث: أبو داود - المصدر: سنن أبي داود- الكتاب : كتاب الطلاق- الباب : باب من أحق بالولد)

இவ்வடிப்படையில், உங்களது மனைவி மரணித்தும், மனைவியின் தாய் உயிருடனும் இருப்பதால், உங்கள் குழந்தையைப் பராமரிப்பதற்கு மனைவியின் தாயே தகுதியுடையவராவார். என்றாலும், மரணித்தல், பராமரிக்க மறுத்தல், கெட்ட குணமுடையவளாக இருத்தல், அல்லது சுய நினைவை இழப்பவளாக இருத்தல் போன்ற பராமரிக்கத் தகுதியான பண்புகளை இழக்கும் பட்சத்தில், உங்கள் மனைவியின் தாய் உங்கள் குழந்தையைப் பராமரிக்கும் தகைமையை இழந்துவிடுவார்.  குழந்தைகளின் தந்தையாகிய நீங்கள் பராமரிக்கத் தகுதியாகிவிடுவீர்கள்.

மேலும், உங்கள் குழந்தைகள் தமது காரியங்களைச் சுயமாகச் செய்ய, நலவு கெடுதியைப் பிரித்தறிய முடியுமான வயதை அடைந்ததன் பின், அக்குழந்தைகளிடம் நீங்கள் வளர்வதற்கு யரைத் தெரிவு செய்கின்றீர்கள் என்று கேட்கவேண்டும்.  இச்சந்தர்ப்பத்தில் குழந்தைகள் யாரைத் தெரிவு செய்கின்றார்களோ அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

(وَيُخَيَّرُ) الْمُمَيِّزُ أَيْضًا عِنْدَ فَقْدِ الْأَبِ أَوْ عَدَمِ أَهْلِيَّتِهِ (بَيْنَ أُمٍّ وَجَدٍّ) أَيْ أَبٍ وَإِنْ عَلَا؛ لِأَنَّهُ بِمَنْزِلَةِ الْأَبِ لِوِلَادَتِهِ وَوِلَايَتِهِ، وَالْجَدَّةُ أُمُّ الْأُمِّ عِنْدَ فَقْدِ الْأُمِّ، أَوْ عَدَمِ أَهْلِيَّتِهَا كَالْأُمِّ فَيُخَيَّرُ الْوَلَدُ بَيْنَهَا وَبَيْنَ الْأَبِ "مغنى المحتاج"

அக்குழந்தைகள் தகப்பன் மற்றும் தாயின் தாய் ஆகிய இருவருடனும் இருப்பதாகக் கூறினால், சீட்டுக் குலுக்கல் மூலம் ஒருவர் பொறுப்பேற்பார். யாரையும் தேர்ந்தெடுக்காத சந்தர்ப்பத்தில் பராமரிப்பதற்குத் தாயின் தாயே தகுதி பெறுவார்.   

وَإِنْ اخْتَارَهَا ذَكَرٌ فَعِنْدَهَا لَيْلًا، وَعِنْدَ الْأَبِ نَهَارًا، وَيُؤَدِّبُهُ وَيُسَلِّمُهُ لِمَكْتَبٍ أَوْ حِرْفَةٍ، أَوْ أُنْثَى فَعَنَدَهَا لَيْلًا وَنَهَارًا، وَيَزُورُهَا الْأَبُ عَلَى الْعَادَةِ، وَإِنْ اخْتَارَهُمَا أَقُرِعَ فَإِنْ لَمْ يَخْتَرْ فَالْأُمُّ أَوْلَى (فصل: الحضانة، كتاب النفقات، منهاج الطالبين للنووي رحمه الله)

உங்களது ஆண் பிள்ளை தனது தாயின் தாயைத் தெரிவு செய்யும் பட்சத்தில், இரவு நேரத்தில் அவரிடமே தரிப்பார்;. ஒழுக்கம், கல்வி, தொழில் விடயங்களில் வழிகாட்டலைப் பெறுவதற்குத் தந்தையுடன் (உங்களுடன்) பகல் நேரத்தில் இருப்பார்.

அப்பிள்ளை யாரைத் தெரிவுசெய்தாலும், அவர் மற்றவருக்குப் பிள்ளையைப் பார்ப்பதற்கு அனுமதியளிப்பது அவசியமாகும். அவ்வாறு பார்ப்பதற்கு அனுமதியளிக்காமல் இருப்பது உறவைப்பிரிப்பதாகும். 

عَنْ أَبِي أَيُّوبَ الأنصاري رضي الله عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنْ فَرَّقَ بَيْنَ الوَالِدَةِ وَوَلَدِهَا فَرَّقَ اللَّهُ بَيْنَهُ وَبَيْنَ أَحِبَّتِهِ يَوْمَ القِيَامَةِ. هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ (الباب : بَابُ مَا جَاءَ فِي كَرَاهِيَةِ أَنْ يُفَرِّقَ بَيْنَ الأَخَوَيْنِ أَوْ بَيْنَ الْوَالِدَةِ وَوَلَدِهَا فِي البَيْعِ- الكتاب : أَبْوَابُ الْبُيُوعِ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: المصدر : سنن الترمذي)

இதுபற்றி நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் “தாயையும் குழந்தையையும் யார் பிரிப்பாரோ அல்லாஹ{ தஆலா மறுமையில் அவரை அவரது விருப்பத்துக்குரியவர்களை விட்டும் பிரித்து விடுவான்” (சுனன் அல்-திர்மிதி)  என்றும், இன்னுமொரு ஹதீஸில், “தகப்னையும் அவனது பிள்ளையையும் பிரிப்பவரை அல்லாஹ் சபிக்கின்;றான்” (நூல்: சுனன் இப்னி மாஜஹ்)  என்றும் கூறியுள்ளார்கள்.

عَنْ أَبِي مُوسَى، قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مَنْ فَرَّقَ بَيْنَ الْوَالِد وَوَلَدِه، وَبَيْنَ الْأَخِ وَبَيْنَ أَخِيهِ. (الباب : بَابُ النَّهْيِ عَنْ التَّفْرِيقِ بَيْنَ السَّبْيِ – الكتاب : أَبْوَابُ التِّجَارَاتِ – المصدر سنن ابن ماجه – تحقيق الأرناؤوط – ط : دار الرسالة العلمية.) وقال الشوكاني فى نيل الأوطار : وَحَدِيثُ أَبِي مُوسَى إسْنَادُهُ لَا بَأْسَ بِهِ، فَإِنَّ مُحَمَّدَ بْنَ عُمَرَ بْنِ الْهَيَّاجِ صَدُوقٌ، وَطَلِيقَ بْنَ عِمْرَانَ مَقْبُولٌ. وقال الأرناؤوط : إسناده ضعيف لضعف طُلَيق بن عمران -ويقال: ابن محمَّد بن عمران- ابن حُصين، وإبراهيم بن إسماعيل -وهو ابن مُجمع- على اختلاف في إسناده كما بينه الدارقطني في "العلل" 7/ 217 - 218، وقال ابن القطان في "بيان الوهم والإيهام" 2/ 324: لا يصح، فإن طُليقا لا تُعرفُ حالُه، وهو خُزاعي، ونقل الحافظ الذهبي في "الميزان" عن الدارقطني أنه قال في طُليق هذا: لا يُحتج به، وهو في سؤالات البرقاني للدارقطني.

ஒரு பெண்குழந்தை, தந்தையைத் தெரிவு செய்யும் போது அதன்; பாதுகாப்;பைக் கருதி வெளியில் அனுப்பாமல், தாயின் தாயே அப்பிள்ளையைச் சந்திக்கச் செல்வது மிகவும் ஏற்றமானதாகும்.

தகப்பன் மற்றும் தாயின் தாய் ஆகிய இருவரில், ஒருவர் மற்றவருக்குப் பிள்ளையைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்குதல் வேண்டும். குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை அனுமதி வழங்குவது கட்டாயம் என்றும், வீடு சமீபமாக இருந்தால் ஒவ்வொரு நாளும் சந்தித்துக் கொள்ள அனுமதி வழங்குவது அவசியம் என்றும் மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர். 

(والزيارة مرة في أيام) على العادة لا في كل يوم ولا تطيل المكث  " فصل: الحضانة، كتاب النفقات، تخفة المحتاج "  (قوله: لا في كل يوم) بل في يومين وأكثر نعم إن كان منزلها قريبا فلا بأس أن تدخل في كل يوم "حاشية الشرواني لتحفة المحتاج"

இச்சந்திப்பை இருதரப்பும் பேசி பொருத்தமான ஓர் இடத்தில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.