எமது பள்ளிவாயிலுக்குச் சொந்தமான பழைய மையவாடி நீண்ட காலமாக சுத்தம் செய்யப்படாமையினால் காடு நிறைந்து காணப்படுகின்றது. இந்த மையவாடியில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இதனால் மையவாடியை சுத்தம் செய்வதற்கு கனரக வாகனத்தை பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? அல்லது தடைகள் உள்ளதா? என்பது பற்றிய ஷரீஆ விளக்கத்தை எமது நிர்வாகத்திற்குத் தந்துதவுமாறு அன்பாய் வேண்டுகின்றோம். 

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

மையவாடியானது மறுமையின் சிந்தனை மற்றும் அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்தும் ஓர் இடமாகும். நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் “கப்ருகளைத் தரிசியுங்கள். அது உங்களுக்கு மறுமையை நினைவூட்டும் ” என்று கூறியுள்ளார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: زَارَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرَ أُمِّهِ، فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ، فَقَالَ: «اسْتَأْذَنْتُ رَبِّي فِي أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِي، وَاسْتَأْذَنْتُهُ فِي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِي، فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ. (رواه مسلم - كتاب الجنائز- بَابُ اسْتِئْذَانِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَبَّهُ عَزَّ وَجَلَّ فِي زِيَارَةِ قَبْرِ أُمِّهِ - تبويب الإمام النووي رحمه الله)


மையவாடிக்கென ஷரீஅத்தில் தனித்துவமான ஒரு கண்ணியம் இருக்கின்றது. இதனை பின்வரும் ஹதீஸ் சுட்டிக்காட்டுகின்றது.

عَنْ جَابِرٍ قَالَ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ القُبُورُ، وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا، وَأَنْ يُبْنَى عَلَيْهَا، وَأَنْ تُوطَأَ»: حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، (رواه الترمذي - 1052 – أبواب الجنائز - بَابُ مَا جَاءَ فِي كَرَاهِيَةِ تَجْصِيصِ القُبُورِ، وَالكِتَابَةِ عَلَيْهَا)

கப்றுகள் சுண்ணாம்புக் கலவையால் பூசப்படுவதையும் அதன் மீது எழுதப்படுவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் அது மிதிக்கப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள்”; என ஜாபிர் றழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து, கப்ரை மிதிப்பது கூடாது என்றும் அவ்வாறு மிதிப்பது வெறுக்கத்தக்க விடயம் (மக்ரூஹ்) என்றும் பெரும்பான்மையான மார்க்க அறிஞர்கள் கூறுகின்றார்கள். என்றாலும், தான் தரிசிக்க விரும்பும் கப்ரை அடைவதற்கு அல்லது புதிதாக கப்ரு ஒன்றை தோண்டுவதற்கு அருகிலுள்ள கப்ரை மிதிக்காமல் செல்ல முடியாது போன்ற நிர்ப்பந்தமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் கப்ரை மிதிப்பதற்கு அனுமதியுண்டு.

( ولا يوطأ ) عليه إلا لضرورة كأن لا يصل إلى ميته أو من يزوره وإن كان أجنبيا كما بحثه الأذرعي أو لا يتمكن من الحفر إلا بوطئه لصحة النهي عن ذلك. والمشهور في ذلك الكراهة هو المجزوم به في الروضة وأصلها وأما ما رواه مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لأن يجلس أحدكم على جمرة فتخلص إلى جلده خير له من أن يجلس على قبر ففسر فيه الجلوس بالحدث وهو حرام بالإجماع وجرى المصنف في شرح مسلم وفي رياض الصالحين على الحرمة أخذا بظاهر الحديث والمعتمد الكراهة (مغني المحتاج – كتاب الجنائز - فصل في دفن الميت)

وفي الموسوعة الفقهية الكويتية : القبر محترم شرعا توقيرا للميت, ومن ثم اتفق الفقهاء على كراهة وطء القبر، والمشي عليه؛ لما ثبت أن النبي صلى الله عليه وسلم نهى أن توطأ القبور. لكن المالكية خصوا الكراهة بما إذا كان مسنما, كما استثنى الشافعية، والحنابلة وطء القبر للحاجة، من الكراهة، كما إذا كان لا يصل إلى قبر ميته، إلا بوطء قبر آخر. اهـ.

கப்ரை காலால் மிதிப்பதன் பாதிப்பை விட கனரக வாகனங்கள் மூலம் மையவாடியை சுத்தம் செய்வது மிகவும் பாரதூரமான காரியமாகும்.

எனவே, மையவாடியை சுத்தம் செய்வதற்கு கனரக வாகனத்தைப் பயன்படுத்துவதனால் கப்ருகள் சிதைவடைவதுடன் அதன் கண்ணியத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்பதனால், அதை சுத்தம் செய்யவதற்கு வேறு வழிமுறைகளப் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.


வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ.