Subject : பெண்களுக்கு கத்னா செய்தல்

FATWA # 005/ACJU/F/2008

ஆக 04, 2017

வெளியிடப்பட்ட

பெண்கள்

பெண்களுக்கு கத்னா செய்தல் பற்றி மார்க்கத் தீர்ப்புக் கோரி தங்களால் சமர்ப்பிக்கப்பட்ட 2007.07.08 ஆம் தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

இஸ்லாமிய மார்க்கத்தில் சுத்தம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. மனிதனுடைய பாலுறுப்பை சுத்தமாகவைத்திருப்பதற்கும், இல்லற வாழ்க்கையில் மனிதன் இன்பமடைவதற்கும் விருத்தசேதம் எனப்படும் கத்னா செய்வது இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றது.

இதை மார்க்க அடிப்படையில் நோக்கும் போது இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:

'விருத்தசேதம் செய்வது எமது (ஷாபிஈ) மஃத்ஹபில் ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் வாஜிபாகும், இக்கருத்தையே இமாம் அஹ்மத் (ரஹிமஹுல்லாஹ்) உட்பட முன்னோர்களில் அதிகமானவர்கள் கூறியுள்ளனர். மேலும் இது அனைவர் மீதும் ஸுன்னத் என இமாம் மாலிக், இமாம் அபூ ஹனீபா (ரஹிமஹுமல்லாஹ்) கூறியுள்ளார்கள்.'  ( அல் மஜ்மூஃ – பாகம்: 01, பக்கம்: 164)

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.