Subject : மிம்பர் படிகளின் எண்ணிக்கையும் அதில் ஏறி இறுங்கும் முறையும்

FATWA # 014/ACJU/F/2008

ஆக 04, 2019

வெளியிடப்பட்ட

வக்ப் மற்றும் மஸ்ஜித்

மிம்பர் படிகளின் எண்ணிக்கையும் அதில் ஏறி இறுங்கும் முறையும் பற்றியும்  தங்களால் எழுதப்பட்ட 2004.01.23 ஆந் தேதிய கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகிறது. 

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக.

மிம்பர் என்பது குத்பாவுக்கு சமுகமளித்திருப்போருக்கு கத்தீப் தெளிவாகத் தெரிவதற்காகவும், அவருடைய பேச்சு மக்களைப் போய் அடைந்து, அது அவர்களுக்கு தெளிவாக விளங்குவதற்காகவும், அதன் மீது அவர் நிற்பதற்காகவும் அமர்வதற்காகவும் அமைக்கப்படும் ஒரு சாதனமாகும்.

'நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது காலத்துக்குப் பின்னர் படிகளின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பினும் அவர்களது காலத்தில் இருந்ததை பின்பற்றுவதே ஏற்றமானதாகும் என்று இமாம் ஷம்ஸுத்தீன் அல்-ஷிர்பீனி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள'.   (முக்னில் முஹ்தாஜ் - பாகம்: 1, பக்கம்: 555)

நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய மிம்பர் மூன்று படிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. அதனை மர்வான் இப்னுல் ஹக்கம் என்பவர் முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது ஆட்சிக் காலத்தில் ஆறு படிகளாக அதிகரித்தார்.

இந் நிகழ்வு ஏராளமான சஹாபிகள் உயிர் வாழ்ந்த காலத்தில் நடைபெற்றது. எனவே, மிம்பர் என்பது ஒரே அமைப்பில் அமைக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கொள்ளாததாகும். தேவைகளுக்கேற்ப அதனை மூன்று படிகளை விட அதிகரிக்கவும் முடியும்.

'மஸ்ஜித் விசாலமில்லாமல் காணப்பட்டால் தொழுகையாளிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் பெரிய மிம்பரை அமைப்பது மக்றூஹ் ஆகும்.' (அல்-மஜ்மூஃ - பாகம்: 04, பக்கம்: 278)

அதில் ஏறி இறங்குதல் தொடர்பாக அவரவருக்கு வசதியான வழிகளைக் கையாளலாம்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.