எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
அரச ஊழியர்கள் வரி இன்றி வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக அரசினால் வழங்கப்படும் வரி இல்லா வாகன அனுமதியை அரசாங்கம் ஊழியர்களுடைய பிரயோசனத்திற்காக அதை ஐந்து வருடங்கள் பூர்த்தியாகும் முன் விற்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் சலுகை அடிப்படையிலேயே வழங்குகின்றது. அதை அரசின் அனுமதியின்றி விற்பது அரசாங்கத்தின் சலுகையைத் துஷ்பிரயோகம் செய்வதாகவும், அரச கட்டளையை மீறுவதாகவும் தோன்றுகின்றது. எனவே அது ஒரு பொருத்தமற்ற செயல் என நாம் கருதுகின்றோம்.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.