பிரிவு

இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
ஒரு பெண் ஆசிரியை ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு - அதாவது பெண்களின் அழகைப் பார்க்கவேண்டும் என்ற உணர்வு இல்லாத, அதைப்பற்றிய அறிவில்லாத சிறார்களுக்குக் - கல்வி கற்றுக் கொடுப்பதில் தவறில்லை. இருப்பினும், அம்மாணவர்கள் எப்பொழுது பருவ வயதை அடைவார்களோ அல்லது பருவ வயதை அண்மித்து, பெண்களின் அழகைப் பார்க்கவேண்டும் என்ற உணர்வு உண்டாகும் வயதை அடைவார்களோ அப்பொழுது அவர்களுக்கு ஆண் ஆசிரியர்களைக் கல்வி கற்றுக் கொடுப்பதற்கு நியமித்தல் வேண்டும்.
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
எந்தவொரு விடயத்தையும் பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் மூலம் சாதிக்க முடியுமாக இருந்தால், அதனையே முற்படுத்துதல் வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கருதுகின்றது. பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் மூலம் தமது காரியங்களைச் சாதிக்க முடியாத பட்சத்தில், பிறருக்கு எவ்விதத்திலும் பாதிப்பு, இடையூறு இல்லாத வண்ணம் தமது கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமாயின் ஆர்ப்பாட்டம் செய்வதற்குத் தடையில்லை.
இதை மதிப்பிடுங்கள்
(0 votes)
கேள்வி 01 : அந்நிய பெண்கள் (பிறமதத்தவர்கள்) தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டு வரும்போது எங்கள் பள்ளிவாசலுக்கு முஸல்லா, மின்குமிழ், காபட் போன்ற அன்பளிப்புக்களை தருகின்றார்கள். அவைகளை ஏற்றுக்கொள்ள முடியுமா? பதில் : முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்கள் மஸ்ஜிதுக்கு வழங்கும் அன்பளிப்புகள், இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட வட்டி, சூது போன்றவைகளால் ஈட்டப்பட்டதாக இல்லாவிட்டால், அவற்றை ஏற்றுக்கொள்ளலாம்.
இதை மதிப்பிடுங்கள்
(0 votes)
உடலுறவுக்குத் தகுதியான வயதை அடைந்த ஒரு பெண், தூக்கம் மயக்கம் போன்ற நிலைகளில் அல்லாது, உடலுறவின் போது உச்ச நிலையை அடைந்து, குளித்து சுத்தமானதன் பின்னர், அவளது பெண்ணுறுப்பிலிருந்து இந்திரியம் வெளியானால் அவள் மீண்டும் குளித்துக் கொள்வது கட்டாயமாகும். ஏனெனில், மனைவி உடலுறவில் தனது ஆசையைப் பூர்த்தியாக்கிக் கொண்டவளாக இருப்பதால், கணவனின் இந்திரியத்துடன் அவளது இந்திரியமும் கலந்தே வெளியாகும்.
இதை மதிப்பிடுங்கள்
(0 votes)
மஸ்ஜித், குர்ஆன் மத்ரஸா, அரபுக் கல்லூரி மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் தேவைகளுக்கு பணம் வசூலிப்பதற்காக ஒருவரை கூலிக்கு அமர்த்தினால் அவர் செய்யும் வேலை மற்றும் அதற்கான கூலியையும் அவருக்கு தெரிவித்தல் வேண்டும். கூலிக்கு அமர்த்தும் நேரத்தில் வேலையையும் கூலியையும் குறிப்பிடுவது அவசியம் என்பதால் வசூலிக்கும் பணத்திலிருந்து வீத அடிப்படையில் கூலியை தீர்மானிப்பது கூடாது. ஏனெனில், அவர் எவ்வளவு பணம் வசூலிப்பார் என்பதை உறுதியாகக் கூற முடியாது. சில நேரம் கூடுதலாகவும் இன்னும் சில நேரம் குறைவாகவும் வசூலிக்கலாம். இதனால் அவரது கூலி எவ்வளவு என்பதை ஒப்பந்த நேரத்தில் நிர்ணயிக்க முடியாது.
இதை மதிப்பிடுங்கள்
(4 votes)
இதை மதிப்பிடுங்கள்
(0 votes)
இவ்வடிப்படையில், உணவுப் பொருட்களில் சேர்க்கப்படக்கூடிய நச்சுப் பொருட்கள் கலந்த இரசாயனத் திரவியங்கள் உடம்புக்குக் கேடு விளைவிக்கும் என்று நம்பிக்கையான உணவு சார் நிபுணர்கள் உறுதிப்படுத்துமிடத்து அதை உண்ணுவது கூடாது. அத்துடன், இது விடயத்தில் ஆதாரபூர்வமற்ற கருத்துக்களை நம்பாது, துறைசார்ந்தவர்களின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து ஒரு முடிவுக்கு வருவது அவசியமாகும்.
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
கூலிக்கு அமர்த்தும் நேரத்தில் வேலையையும் கூலியையும் குறிப்பிடுவது அவசியம் என்பதால் வசூலிக்கும் பணத்திலிருந்து வீத அடிப்படையில் கூலியை தீர்மானிப்பது கூடாது. ஏனெனில், அவர் எவ்வளவு பணம் வசூலிப்பார் என்பதை உறுதியாகக் கூற முடியாது. சில நேரம் கூடுதலாகவும் இன்னும் சில நேரம் குறைவாகவும் வசூலிக்கலாம். இதனால் அவரது கூலி எவ்வளவு என்பதை ஒப்பந்த நேரத்தில் நிர்ணயிக்க முடியாது.
இதை மதிப்பிடுங்கள்
(2 votes)
பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் மூலம் தமது காரியங்களைச் சாதிக்க முடியாத பட்சத்தில், பிறருக்கு எவ்விதத்திலும் பாதிப்பு, இடையூறு இல்லாத வண்ணம் தமது கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமாயின் ஆர்ப்பாட்டம் செய்வதற்குத் தடையில்லை.
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
ஒரு தடவை குழந்தை பால் குடித்துவிட்டது என்பதை குழந்தை பால் குடித்துவிட்டு மார்பிலிருந்து தானாக, வாயை எடுத்துவிட்டால் அது ஒரு தடவையாக கணிக்கப்படும். இவ்வாறு ஐந்து தடவைகள் குழந்தை பால் குடித்துவிட்டால் மேற்கூறப்பட்ட அனைவரும், பால் குடி உறவுடையோராக மாறுவதுடன், அவர்களைத் திருமணம் முடிப்பதும் ஹராமாகிவிடும்.
இதை மதிப்பிடுங்கள்
(3 votes)
சீட்டை நடாத்துபவர்களுக்கு சீட்டுப்பணத்தை வசூலிப்பது போன்ற சிரமங்கள் இருப்பதனாலும், நிர்வாகம் சீட்டுப் பிடிப்பதில் பங்குகொள்ளவில்லை என்பதனாலும், அதன் கூலியாக மேற்குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இதைப் பள்ளியின் வெளிப்புறத்தில் நடாத்திக் கொள்வது நல்லது.
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
இவர்களுடைய அன்பளிப்புகள், நிவாரண உதவிகள் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் அமைந்துள்ளது என தெரியவந்தால் அவற்றை ஏற்காமல் தவிர்ந்து கொள்வது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும்.
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
இப்பிரிவினரின் தலைவர் மஸ்ஊத் அஹ்மத் என்பவர் தனது 'ஜமாஅத்துல் முஸ்லிமீன் அப்னீ தஃவதே வ தஹ்ரீக் கே ஆயீனே மே' என்ற தனது நூலில் ரஸூலுல்லாஹி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எந்த மார்க்கத்தை தனது சமூகத்திடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்களோ, அவர்களின் மரணத்துக்குப் பிறகு சில நூற்றாண்டுகள் வரை அதே இஸ்லாம் அதே மார்க்கம் இருந்தது....

யோகாசனம்

ஆக 05, 2016
1044
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
இந்து மதத்தினரால் அறிமுகம் செய்யப்பட்ட யோகாசனம் எனும் உடற்பயிற்சி வெறுமனே உடற்பயிற்சி மாத்திரமன்றி இந்து மத சிந்தனைகளையும் உள்ளடக்கியதாகும் என்பதை அக்கலையின் தோற்றம், அதன் சிந்தனை ரீதியான இலக்கு, வித்தியாசமான அதன் அமர்வு வடிவங்களின் உட்கருத்து ஆகியவற்றை விரிவாகப் படிக்கும்போது விளங்கமுடிகின்றது.
இதை மதிப்பிடுங்கள்
(2 votes)
நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூ தாலிப் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் ஆரம்ப வருடங்களில் பொதுவாக அவர்களது பிரச்சாரத்திற்கு துணையாகவும் பாதுகாப்பாகவும் தனது மரணம் வரை இருந்துள்ளார்.
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
தற்கால கலை, கலாச்சார நிகழ்வுகளில் நாடகமும், குறுந்திரைப் படமும் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. இவ்விரண்டின் மூலம் மக்கள் கல்வி மற்றும் சமூக வாழ்வோடு ஒட்டிய சில இலாபங்களை அடைந்தபோதிலும், இவற்றில் பெரும்பாலானவை மார்க்கத்துக்கு முரணான இசை, ஆபாசக் காட்சி போன்றவற்றுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக பல வகையான விபரீதங்களையே அவர்கள் சந்திக்கின்றனர்.
இதை மதிப்பிடுங்கள்
(4 votes)
மனிதனுக்கு தொல்லை தரும் உயிரினங்களில் நுளம்பும் ஒன்றாகும். சில வேளை உயிராபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. நுளம்பு மட்டை (Mosquito Racket) என்ற உபகரணத்தைப் பயன்படுத்தி நுளம்பைக் கொல்லும் போது அதிலுள்ள மின்சாரத்தின் தாக்கத்தினால் ஏற்படும் இரத்த அழுத்தத்தினாலேயே நுளம்பு இறக்கின்றது.
இதை மதிப்பிடுங்கள்
(2 votes)
ஃதிகாஃப் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் முக்கிய இடத்தை வகிக்கும் ஒரு வணக்கமாகும். இது பற்றி அல்லாஹ் அல்-குர்ஆனில் பின்வருமாறு கூறியுள்ளான்: 'நீங்கள் மஸ்ஜித்களில் தங்கியவர்களாக (இஃதிகாஃப்) இருக்கும் போது (உங்கள் மனைவியராகிய) அவர்களுடன் கூடாதீர்கள்.' (அல்-பகரஹ் : 187)