பிரிவு

இதை மதிப்பிடுங்கள்
(0 votes)
மையவாடி வக்ப் செய்யப்பட்டதாக இருந்தால் அல்லது ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கென ஒதுக்கப்பட்ட, பொதுக்காணியாக இருந்தால் அதில் இருக்கக்கூடிய மண்ணை அகற்றுவதோ அல்லது வேறு தேவைக்குப் பயன்படுத்துவதோ கூடாது. ஏனெனில் ஒரு விடயத்திற்கு வக்ப் செய்யப்பட்ட பொருளை அதன் தேவைக்கு அல்லாமல் வேறு தேவைக்குப் பயன்படுத்துவது கூடாது.
இதை மதிப்பிடுங்கள்
(0 votes)
கப்றுகள் சுண்ணாம்புக் கலவையால் பூசப்படுவதையும் அதன் மீது எழுதப்படுவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் அது மிதிக்கப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள்”; என ஜாபிர் றழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
மையவாடி, ஜனாஸாக்களை அடக்கம் செய்யவும், மக்கள் மறுமை வாழ்வின் சிந்தனையை ஏற்படுத்திக் கொள்ளவும், அல்லாஹ்வின் அச்சத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும் உள்ள ஓர் இடமாகும். நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் “மையவாடியைத் தரிசியுங்கள் அது உங்களுக்கு மறுமையை நினைவூட்டும்” என்று கூறியுள்ளார்கள்.
இதை மதிப்பிடுங்கள்
(0 votes)
ஜனாஸாவை சுமந்து செல்வது பர்ளு கிபாயா என்பதில் எவ்வித கருத்துவேறுபாடும் இல்லை. மேலும், அவ்வாறு சுமந்து செல்வதில் எந்தவொரு இழிவும் இல்லை. சஹாபாக்கள் மற்றும் தபிஈன்கள் அதன் பின் வந்த மார்க்க அறிஞர்கள் அதைச் செய்துள்ளார்கள்" ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக தோளில் சுமந்துகொண்டு அல்லது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்லலாம். எவ்வாறு சென்றாலும் அதன் கண்ணியத்தைப் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.
இதை மதிப்பிடுங்கள்
(0 votes)
பொதுவாக ஒரு கப்ரை அதிலிருக்கும் ஜனாஸா உக்கிப் போவதற்கு முன்னர் ஷரீஅத்துடைய காரணங்களுக்காகவே அன்றி மீண்டும் தோண்டுவது ஹராமாகும். என்றாலும், அதில் அடக்கப்பட்டிருக்கும் ஜனாஸா உக்கி மண்ணோடு மண்ணாகி போனதன் பின்பு இன்னுமொரு ஜனாஸாவை அடக்கம் செய்யத் தோண்டுவதற்கு அனுமதியுண்டு. இதுபற்றி இமாம் நவவி றஹிமஹ{ல்லாஹ் அவர்கள் தனது மஜ்மூஃ எனும் நூலில் “ஒரு ஜனாஸா ஒரு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அதன் எலும்புகள் மற்றும் சதையும் உக்கி அழிந்து போகும் வரைக்கும் புதிய ஜனாஸாவை அடக்கம் செய்வது கூடாது. அவைகள் உக்கி மண்ணோடு மண்ணாகி போனதன் பின்பு அவ்விடத்தில் புதிய ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு அனுமதியுண்டு” என்று கூறுகின்றார்கள்
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
இதை மதிப்பிடுங்கள்
(0 votes)