அண்மைக்கால பாத்வா

ஹர்த்தால், ஆர்ப்பாட்டம் பற்றிய இஸ்லாமிய வழிகாட்டல்

15-11-2019 9

எந்தவொரு விடயத்தையும் பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் மூலம் சாதிக்க முடியுமாக இருந்தால், அதனையே முற்படுத்துதல் வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கருதுகின்றது. பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் மூலம் தமது காரியங்களைச் சாதிக்க முடியாத பட்சத்தில், பிறருக்கு எவ்விதத்திலும் பாதிப்பு, இடையூறு இல்லாத வண்ணம் தமது கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமாயின் ஆர்ப்பாட்டம் செய்வதற்குத் தடையில்லை.

ஆய்வு செய்யப்பட்ட பத்வா

முழு பாத்வா படிக்க

சில கேள்விகள் பற்றிய தெளிவுகள் சம்பந்தமாக

15-11-2019 8

கேள்வி 01 : அந்நிய பெண்கள் (பிறமதத்தவர்கள்) தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டு வரும்போது எங்கள் பள்ளிவாசலுக்கு முஸல்லா, மின்குமிழ், காபட் போன்ற அன்பளிப்புக்களை தருகின்றார்கள். அவைகளை ஏற்றுக்கொள்ள முடியுமா? பதில் : முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்கள் மஸ்ஜிதுக்கு வழங்கும் அன்பளிப்புகள், இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட வட்டி, சூது போன்றவைகளால் ஈட்டப்பட்டதாக இல்லாவிட்டால், அவற்றை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆய்வு செய்யப்பட்ட பத்வா

முழு பாத்வா படிக்க

உடலுறவு கொண்டு குளித்து சுத்தமானதன் பின் இந்திரியம் அல்லது அது போன்ற ஒன்று வெளியானால் மீண்டும் குளிப்பது சம்பந்தமாக.

16-10-2019 112

உடலுறவுக்குத் தகுதியான வயதை அடைந்த ஒரு பெண், தூக்கம் மயக்கம் போன்ற நிலைகளில் அல்லாது, உடலுறவின் போது உச்ச நிலையை அடைந்து, குளித்து சுத்தமானதன் பின்னர், அவளது பெண்ணுறுப்பிலிருந்து இந்திரியம் வெளியானால் அவள் மீண்டும் குளித்துக் கொள்வது கட்டாயமாகும். ஏனெனில், மனைவி உடலுறவில் தனது ஆசையைப் பூர்த்தியாக்கிக் கொண்டவளாக இருப்பதால், கணவனின் இந்திரியத்துடன் அவளது இந்திரியமும் கலந்தே வெளியாகும்.

ஆய்வு செய்யப்பட்ட பத்வா

முழு பாத்வா படிக்க

கணவன் தன் மனைவியை ஒன்று சேருவதற்கு அழைக்கும் போது மறுப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டா?

16-10-2019 104

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்துணவர்வுடனும் விட்டுக் கொடுப்புடனும் நடந்து கொள்ளுதல் வேண்டும். "இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கை கொண்ட ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்" என நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹ{ரைரா றழியல்லாஹ அன்ஹ அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல் : ஸஹீஹ முஸ்லிம் : 1469)

திருமணம்

முழு பாத்வா படிக்க

வக்ப் செய்யப்பட்ட மையவாடியில் இருந்து மண்ணை எடுத்து வேறு இடத்தில் போடலாமா?

16-10-2019 79

மையவாடி வக்ப் செய்யப்பட்டதாக இருந்தால் அல்லது ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கென ஒதுக்கப்பட்ட, பொதுக்காணியாக இருந்தால் அதில் இருக்கக்கூடிய மண்ணை அகற்றுவதோ அல்லது வேறு தேவைக்குப் பயன்படுத்துவதோ கூடாது. ஏனெனில் ஒரு விடயத்திற்கு வக்ப் செய்யப்பட்ட பொருளை அதன் தேவைக்கு அல்லாமல் வேறு தேவைக்குப் பயன்படுத்துவது கூடாது.

ஜனாஸா மற்றும் மையவாடி

முழு பாத்வா படிக்க

மையவாடியை கனரக வாகனத்;தைப் பயன்படுத்தி சுத்தம் செய்வது சம்பந்தமாக

14-10-2019 95

கப்றுகள் சுண்ணாம்புக் கலவையால் பூசப்படுவதையும் அதன் மீது எழுதப்படுவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் அது மிதிக்கப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள்”; என ஜாபிர் றழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஜனாஸா மற்றும் மையவாடி

முழு பாத்வா படிக்க

வயது வந்த ஆண்கள் நாற்பது நபர்களை விடக் குறைவாக உள்ள சிறு கிராமத்தில் ஜுமுஆ நடாத்துவது பற்றிய மார்க்கத் தெளிவு

11-10-2019 91

ஜுமுஆ மார்க்கக் கடமைகளில் ஒன்றாகும். இது ஓர் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடி, மார்க்க உபதேசங்களைக் கேட்பதற்கும், சகோதரத்துவத்தைப் பேணுவதற்கும், அல்லாஹ்வின் கடமையை நிறைவேற்றுவதற்கும் உள்ள வணக்கமாகும். மேலும், அதை நிறைவேற்றுவதற்கு சில நிபந்தனைகளும் ஓழுக்கங்களும் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒரு நிபந்தனை, அவ்வூரில் நிரந்தரமாகக் குடியிருப்பவர்களில் சிலரும் அங்கு கட்டாயம் சமுகமளித்து இருக்க வேண்டும் என்பதாகும்.

தொழுகை

முழு பாத்வா படிக்க
  1. அதிகம் பார்க்கப்பட்டது
  2. மிக வாக்களித்தனர்

இரத்ததானம்

பொதுவானவைகள்

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும்...

04-08-2016 1021

மேலும் படிக்க

விவாகரத்து செய்யப்பட்ட மனைவியின் பராமரிப்பில் உள்ள பிள்ளையைத் தந்தை பார்ப்பது சம்பந்தமாக

குழந்தை வளர்ப்பு

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும்...

10-06-2019 518

மேலும் படிக்க

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் ஜுமுஆ தொழுகையை விடலாமா?

தொழுகை

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும்...

30-05-2016 1088

மேலும் படிக்க

பெற்றோர் வக்ப் நிதியம் தாபிப்பது சம்பந்தமாக

வக்ப் மற்றும் மஸ்ஜித்

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும்...

11-06-2019 370

மேலும் படிக்க

வங்கிகளில் வழங்கப்படும் வட்டிப் பணத்தைப் பெற்றுக்கொள்ளல்

வணிகம் மற்றும் வட்டி

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும்...

04-08-2016 1263

மேலும் படிக்க

அதான் சொல்வதற்கு முன் சலவாத் சொல்வது பற்றிய மார்க்கத் தீர்ப்பு

தொழுகை

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும்...

01-08-2016 1502

மேலும் படிக்க

பள்ளிவாசலில் பாவிக்க முடியாத நிலையில் உள்ள பொருட்களை விற்பனை செய்தல் சம்பந்தமாக

வக்ப் மற்றும் மஸ்ஜித்

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும்...

24-09-2019 94

மேலும் படிக்க

வாழ்நாளில் உம்ராவை மாத்திரம் செய்து கொண்டிருத்தல்

ஹஜ் மற்றும் உம்ரா

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும்...

09-08-2015 1156

மேலும் படிக்க

ஸக்காத் பெறத் தகுதி உடையவர்களுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்

ஸக்காத் - ஸதகா

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும்...

02-08-2016 922

மேலும் படிக்க