2024.08.28ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஆகியோரிடையிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
குறித்த தரப்பினால் ஜம்இய்யாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மின்னஞ்சல் மூலமான அழைப்பினை அடுத்து இச்சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில், நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் குறித்து பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இதில், ஜம்இய்யா சார்பில் அதன் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், ஊடகக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். பாஸில் பாரூக் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- ACJU Media -