2024.08.29ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவின் வழிகாட்டலில், ஜம்இய்யாவின் கம்பளை கிளை மற்றும் சிறுவர்களுக்கான இஸ்லாமியக் கல்வி நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் முஅல்லிம், முஅல்லிமாக்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு கம்பளை கஹட்டபிட்டிய பகுதியில் நடைபெற்றது.
இதில், ஜம்இய்யாவின் உப செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம் பாஸில் ஹுமைதி அவர்கள் வளவாளராகக் கலந்துகொண்டு 'சவால்களை தீர்க்கும் நுட்பங்கள் மற்றும் சிறுவர் மேம்பாடு' எனும் தலைப்பில் விளக்கக் காட்சிகளுடான உரையொன்றை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து அஷ்-ஷைக் பஸால் அவர்கள் 'மத்ஹல் குர்ஆன்' கற்பித்தல் முறைகள் மற்றும் வகுப்பு முகாமைத்துவம் தொடர்பில் விளக்கக் காட்சிகளுடனான தெளிவுகளை வழங்கினார்கள்.
குறித்த செயலமர்வில் சுமார் 150க்கும் மேற்பட்ட முஅல்லிம், முஅல்லிமாக்கள் கலந்து பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
- ACJU Media -