2024.08.29ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவினால் முல்லைத்தீவு மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களை மையப்படுத்திய ஆலிம்களுக்கான வலுவூட்டல் செயலமர்வொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
குறித்த செயலமர்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரங்கள், இளைஞர் விவகாரங்கள், ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயற்றிட்டங்கள், அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரங்கள் ஆகிய முக்கிய நான்கு அம்சங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதோடு, குறித்த துறைகளில் தமது திறன்களை மேம்படுத்துவதற்காக கலந்துகொண்ட ஆலிம்களை ஆறு மாதங்களைக் கொண்ட வடிவமைக்கப்பட்ட ஒரு பயிற்சி நெறிக்குள் உள்வாங்குவது தொடர்பிலும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையொன்றை வழங்கினார்கள்.
குறித்த செயலமர்வில் வளவாளர்களாக ஜம்இய்யாவின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் திட்ட ஆலோசகர் சகோதரர் நபீஸ் எம். நிஸாம், குழுவின் தலைமை அதிகாரி அஷ்-ஷைக் அர்ஷத் அதாஉர் ரஹ்மான், இளைஞர் விவகாரக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத், அல்-குர்ஆன் மத்ரஸா குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான், இளைஞர் விவகாரக் குழுவின் துணை இணைப்பாளர் சகோதரர் ரம்ஸி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
- ACJU Media -