2024.09.07ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கான குழு மற்றும் ஜம்இய்யாவின் மாத்தளை மாவட்ட, பிரதேச கிளைகளின் நிர்வாகிகள் ஆகியோரிடையிலான விஷேட சந்திப்பொன்று மாத்தளை கொங்காவல மஸ்ஜிதில் நடைபெற்றது.
குறித்த சந்திப்பில், ஜம்இய்யாவின் பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கான குழு பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டதோடு குழுவின் நோக்கங்கள், செயற்பாடுகள் குறித்த தெளிவுகளும் விளக்கக் காட்சிகளூடாக முன்வைக்கப்பட்டன.
இதில், மாத்தளை மாவட்ட ஜம்இய்யாவின் தலைவர் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன் அம்மாவட்டத்திலுள்ள பிரதேசக் கிளைகளின் தலைவர்கள், செயலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில், ஜம்இய்யா சார்பில் பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் தலைமை அதிகாரி அஷ்-ஷைக் அர்ஷத் அதாஉர் ரஹ்மான், இளைஞர் விவகாரக் குழுவின் துணை இணைப்பாளர் சகோதரர் ரம்ஸி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
- ACJU Media -