கஃபதுல்லாஹ், சஃபா, மர்வா குன்றுகள், ஜம்ராக்கள் போன்றவற்றை மாதிரி வடிவங்களாகச் செய்து மக்களுக்கு கண்காட்சிப் படுத்துவது தொடர்பான மார்க்க விளக்கம்

செப் 10, 2024

ACJU/FTW/2024/35/567
2024.09.10 (1446.03.06)

 

கேள்வி: ஹஜ் மற்றும் உம்ராவுடைய கிரியைகளை கண்காட்சி மூலம் மக்களுக்கு விளக்குவதற்கு கஃபதுல்லாஹ், சஃபா, மர்வா குன்றுகள், ஜம்ராக்கள் போன்றவற்றை மாதிரி விடிவங்களாகச் செய்து காட்சிப்படுத்துவதற்கு முடியுமா என்பது தொடர்பான மார்க்க விளக்கத்தை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

கஃபதுல்லாஹ், சஃபா, மர்வா குன்றுகள், ஜம்ராக்கள் போன்றவை அல்லாஹு தஆலாவின் அத்தாட்சிகளும் இஸ்லாத்தில் கண்ணியப்படுத்தப்பட்ட அடையாளச் சின்னங்களுமாகும். அவற்றைப் பாதுகாப்பதும் கண்ணியப்படுத்துவதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும். அவற்றின் கண்ணியத்துக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி கிடையாது.

இது தொடர்பாக அல்-குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌ۚ‏ فِيْهِ اٰيٰتٌ ۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ (سورة آل عمران :96-97)

"(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கிறது." (ஸூரா ஆல இம்ரான் : 96-97)

 

اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآٮِٕرِ اللّٰهِۚ (سورة البقرة:158)

"நிச்சயமாக 'சஃபா', 'மர்வா' (என்னும் குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன. (ஸூரா அல்-பகரா : 158)

 

وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ ‏(سورة الحج :32)

"எவர் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களை கண்ணியப்படுத்துகிறாரோ அது அவருடைய உள்ளத்தின் இறையச்சத்தை அறிவிக்கிறது." (ஸூரத்துல் ஹஜ் : 32)

 

அந்தவகையில் நீங்கள் கோரியிருக்கும் ஹஜ், உம்ராவுடைய அமல்களை மக்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பொழுது கஃபதுல்லாஹ், சஃபா, மர்வா குன்றுகள், ஜம்ராக்கள் போன்றவற்றை அவைகளின் கண்ணியத்தில் பாதிப்பு ஏற்படாத விதத்தில் மாதிரி வடிவங்களாகச் செய்து காட்சிப்படுத்துவதற்கு முடியும் என ஒரு சில ஃபத்வா அமைப்புக்கள் குறிப்பிட்டபோதிலும்1 நவீனகால பெரும்பான்மையான ஃபத்வா அமைப்புக்கள் இவ்வாறு காட்சிப்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடுகின்றனர்.2

ஏனெனில் கஃபதுல்லாஹ், சஃபா, மர்வா குன்றுகள், ஜம்ராக்கள் போன்றவற்றை மாதிரி வடிவங்களாகச் செய்து மக்களுக்கு கண்காட்சிப்படுத்தும் போது அவற்றின் கண்ணியத்தில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் கண்காட்சி முடிவுற்றதன் பின்னர் அவற்றை அகற்றும் போதும் அவற்றை எரித்தல், வீசுதல், காலால் மிதித்தல் போன்றவற்றின் மூலம் அவற்றின் மகிமை பேணப்படாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.3

ஆகவே, ஹஜ், உம்ராவுடைய வணக்கங்களை கண்காட்சிகளின் மூலம் மக்களுக்கு விளக்கும் போது அவற்றை வரைந்து காட்டல், புகைப்படங்களைக் காட்சிப்படுத்தல் இன்னும் Digital முறைகள் மூலம் அவற்றின் மகிமைக்கு பங்கம் ஏற்படாத வகையில் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

---------------------------------------------------------------------------

 

[1] கஃபதுல்லாஹ், சஃபா, மர்வா குன்றுகள், ஜம்ராக்கள் போன்றவற்றை மாதிரி வடிவங்களாகச் செய்வதற்கு அனுமதி உள்ளது என கூறும் ஃபத்வா அமைப்புக்களின் தெளிவுகளை பின்வரும் இணைப்புகளில் பார்வையிடலாம்:

https://bit.ly/4e3Rzgm - எகிப்து ஃபத்வா மையம்

https://bit.ly/4cJVmP1 - ஜோர்தான் ஃபத்வா மையம்

 

[2] கஃபதுல்லாஹ், சஃபா, மர்வா குன்றுகள், ஜம்ராக்கள் போன்றவற்றை மாதிரி வடிவங்களாகச் செய்வதற்கு அனுமதி இல்லை என கூறும் ஃபத்வா அமைப்புக்களின் தெளிவுகளை பின்வரும் இணைப்புகளில் பார்வையிடலாம்:

https://islamqa.info/ar/answers/192043/  - அல்-இஸ்லாம் ஸுஆல் வ ஜவாப்

https://www.islamweb.net/ar/fatwa/144299/  - இஸ்லாம் வெப் - கத்தார் ஃபத்வா மையம்

 

جاء في قرار مجمع الفقه الإسلامي بخصوص هذا الموضوع: فإن مجلس المجمع الفقهي الإسلامي، برابطة العالم الإسلامي، في دورته الثالثة عشرة، المنعقدة بمكة المكرمة، والتي بدأت يوم السبت 5 شعبان 1412هـ الموافق 8/2/1992م: قد نظر في الموضوع وقرر: أن الواجب سد هذا الباب ومنعه، لأن ذلك يفضي إلى شرور ومحظور. انتهى.

جاء في "فتاوى اللجنة الدائمة " (11/14) في المجموعة الثانية ، جوابا على سؤال نصه :

"رجل يعلم الناس مناسك الحج بطريقة عملية ، وذلك أنه صنع لهم إطارا خشبيا ملونا بالأسود يشبه الكعبة ، وكذلك مقام إبراهيم ، والصفا والمروة ، وزمزم والجمرات .. وغير ذلك مما يتعلق بمناسك الحج ، وعملية التدريب تتم بأن يأتي الناس بإحرامهم ويلبسونه ، ويقومون بالمناسك ، ابتداء من العمرة إلى نهاية الحج ، ويرفعون أصواتهم بالتلبية داخل المسجد بأصوات جماعية ، وإن هذه الظاهرة بدأت تنتشر في كل مناطق المغرب ، بحيث إذا دخلت بعض المساجد ، تجد إطارا خشبيا يشبه الكعبة ، وكل ما له علاقة بالمناسك على طول السنة "

فأجابت اللجنة الدائمة بقولها :

"صناعة المجسمات من الخشب وغيره لبعض الشعائر الإسلامية كالكعبة ومقام إبراهيم والجمرات وغيرها لغرض استعمالها في التعليم لأداء مناسك الحج والعمرة على الوجه المذكور في السؤال لا يجوز ، بل هو بدعة منكرة ؛ لما يفضي إليه من المحاذير الشرعية ، كتعلق القلوب بهذه المجسمات ولو بعد حين ، وتعريضها للامتهان وغير ذلك ، مع عدم الحاجة إلى هذه الطريقة ، إذ الشرح والبيان باللسان والاستعانة على ذلك بالكتابة التوضيحية كاف شاف في إيصال المعاني الشرعية إلى عموم الناس.

 

[3] وَلَوْ كُتِبَ الْقُرْآنُ عَلَى الْحِيطَانِ وَالْجُدَرَانِ بَعْضُهُمْ قَالُوا: يُرْجَى أَنْ يَجُوزَ، وَبَعْضُهُمْ كَرِهُوا ذَلِكَ مَخَافَةَ السُّقُوطِ تَحْتَ أَقْدَامِ النَّاسِ، كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ.  (الفتاوى الهندية ٥/‏٣٢٣ — محمد أورنك عالم كير (ت ١١١٨)

 [وليس بمُستَحْسَنٍ كتابةُ القرآن على المحاريب والجدران؛ لِمَا يُخاف من سقوط الكتابة وأن تُوطَأ] اهـ. "الفتاوى الهندية" (1/ 109، ط. دار الفكر)

Last modified onபுதன்கிழமை, 02 அக்டோபர் 2024 10:30

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.