அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஈதுல் பித்ர் வாழ்த்துச் செய்தி

ஜூன் 26, 2017

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்.


புனித ரமழான் மாதம் முழுவதும் வணக்க வழிபாடுகள் புரிந்துவிட்டு இன்று மகிழ்ச்சியோடு பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.


ரமழானிலே கடமையான தொழுகைகள், குர்ஆன் ஓதுதல், இஃதிகாப் இருத்தல் மற்றும் இதர ஸுன்னத்தான அமல்கள் மூலம் பள்ளிவாசல்கள் நிரம்பிக் காணப்பட்டன. இரவு பகலாக நல்லுபதேசங்கள் கேட்கக் கிடைத்த வண்ணம் இருந்தன. இவ்வாறெல்லாம் நல்ல பல விடயங்களைப் பெற்றுக் கொண்டு நல்லமல்களில் ஈடுபட்ட நாம் அதன் பக்குவத்திலும் பயிற்சியிலும் எமது வாழ்க்கையை தொடர்ந்து அமைத்துக் கொள்வதே ரமழானில் நாம் அடைந்த பயனாகும்.


எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோரது நல்லமல்களையும் அங்கீகரித்து, சகல மக்களும் நிம்மதியோடும் கௌரவத்தோடும் புரிந்துணர்வோடும் ஒற்றுமையாக வாழ அருள் பாலிப்பானாக. மேலும் முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதகமான நிலையைப் போக்கி, அச்சமற்ற சுழ்நிலையை ஏற்படுத்தி, முஸ்லிம்களுக்கு எதிரான தீய சக்திகளின் சதித்திட்டங்களை முறியடித்து, நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுததுவானாக.


தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்.

ஈத் முபாரக்.


அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.