தொழில் துறைத் தெரிவு பற்றிய இலவச வழிகாட்டல் சேவை

ஆக 29, 2017

29.08.2017 (08.12.1438)

தொழில் துறைத் தெரிவு பற்றிய இலவச வழிகாட்டல் சேவை

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பன்முகப்படுத்தப்பட்ட சமூக சேவைகளைச் செய்து வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்த வகையில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவு இளைஞர்களின் மேம்பாட்டுக்காக நாடளாவிய ரீதியில் பல நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்தி வருகின்றது. இதன் ஒரு கட்டமாக பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட வாலிபர்களுக்கும் தொழில் துறையை தெரிவுசெய்ய ஆலோசனை தேவைப்படுபவர்களுக்கும் தமது துறையைத் தெரிவு செய்வது தொடர்பான வழிகாட்டல்களை வழங்க திட்டமிட்டுள்ளது.

இச்சேவை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் வாராந்தம் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்களிலும் மு.ப.10.00 மணி முதல் பி.ப.4.00 மணி வரை தனிப்பட்ட ரீதியில் நடைபெறும். அனுபவம் பெற்ற, தேர்சியுள்ள வளவாளர்களால் இது இலவசமாக நடத்தப்படவுள்ளது.

இதில் பங்குபற்ற விரும்புபவர்கள் 0117-490490 எனும் தொலைபேசியூடாக அல்லது லஉளூயஉதர.டம எனும் மின்னஞ்சல் மூலம் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

வஸ்ஸலாம்.


அஷ்ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onவியாழக் கிழமை, 31 ஆகஸ்ட் 2017 13:52

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.