இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி

பிப் 02, 2018

ACJU/NGS/02-18/001

02.02.2018

 

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி

எமது தாய் நாடான இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளை கழித்துக் கொண்டிருக்கின்றது. அந்த சுதந்திரத்தை பெற்றெடுக்க இந்நாட்டு மக்கள் அனைவரும் சாதி, சமய வேறுபாடின்றி உழைத்தனர் என்பது உண்மையாகும். எல்லாத் துறைகளிலும் இந்த நாடு முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காக எல்லோரும் உழைத்தனர் என்பதும் வரலாறாகும்.

எதிர்பாரா விதமாக நாட்டில் தோன்றிய யுத்த, அசாதாரண நிலமைகள் சுதந்திரத்தை இழந்த உணர்வை தந்த போதிலும் தற்பேது அவையெல்லாம் நீங்கி சமாதானமும், சகவாழ்வும், செழிப்பும் மலர்ந்து கொண்டிருக்கின்றது. இதனை மென் மேலும் வளரச் செய்து புரிந்துணர்வோடு வாழ்வதன் மூலமே நிம்மதியும், அமைதியுமுள்ள நாடாக நம் நாட்டை வைத்துக் கொள்ள முடியும்.

பௌத்தர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்த்தவர்கள் என பல்லின மக்கள் வாழுகின்ற இந்நாடு செழிப்புடனும் அபிவிருத்தியுடனும் தொடர்ந்தும் முன்னேற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும், பிரார்த்தனைகளுமாகும்.

எனவே இந்நாட்டில் ஒற்றுமை, சமாதானம், சகிப்புத் தன்மை என்பவற்றை கட்டியெழுப்பி பரஸ்பர விட்டுக் கொடுப்பு, நம்பிக்கை என்பன மூலம் ஒரு தாய் மக்களென சகலரும் வாழ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நல்லாசி கூறுகிறது.

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.