கௌரவ அரபுக் கல்லூரி நிர்வாகிகளுக்கு…

ஏப் 18, 2020

 

ACJU/NGS/2020/005

2020.04.18 (1441.08.24)

கௌரவ அரபுக் கல்லூரி நிர்வாகிகளுக்கு…

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

அரபுக் கல்லூரிகளில் பணிபுரியும் கண்ணியமான உஸ்தாத்மார்கள் மற்றும் பணியாளர்களின் கொடுப்பனவு சம்பந்தமாக

கொவிட் 19 வைரஸ் தாக்கத்தால் முழு உலகிலும் ஏற்பட்டுள்ள சோதனைகளை நாம் அறிவோம். இலட்சக்கணக்கானோர் இவ்வைரஸினால் பீடிக்கப்பட்டும், பலர் மரணித்தும் வருகின்றனர். முழு உலகும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. மறுபுறம் பலரும் தம்முடைய அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள சிரமப்படுவதை நாம் காண்கின்றோம்.

அவ்வரிசையில், தங்களது நிர்வாகத்திற்குக் கீழ் இயங்கும் அரபுக் கல்லூரியில் மார்க்க அறிவைக் கற்றுக் கொடுக்கக்கூடிய  கண்ணியமான உஸ்தாத்மார்கள் மற்றும் பணியாளர்கள் போன்றவர்களின் நிலைமைகளும் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

எனவே, அந்தந்த ஊர்களில் உள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட, பிரதேசக் கிளைகளுடன் இணைந்து, ஊரிலுள்ள தனவந்தர்களின் உதவியுடன் தங்களது அரபுக் கல்லூரியில் பணிபுரியும் உஸ்தாத்மார்கள் மற்றும் ஏனைய பணியாளர்களுடைய விடயத்தில் கவனம் செலுத்தி மாதாந்தக் கொடுப்பனவுகளை எவ்வித குறைவுமின்றி கொடுக்க முயற்சிக்குமாறு அரபுக் கல்லூரியின் நிர்வாகிகளிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் வேண்டிக்கொள்கிறது.

அரபுக் கல்லூரி உஸ்தாத்மார்கள் மற்றும் பணியாளர்களின் மாதாந்தக் கொடுப்பனவுகள் உரிய முறையில் கொடுக்கப்படாமலிருப்பதால் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமப்படுவது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை அறியத் தருவதோடு, இவர்களில் ஸகாத் பெறத் தகுதியானவர்களை அடையாளங் கண்டு ஸகாத் வழங்கவும் முடியும் என்பதையும் ஜம்இய்யா தெரிவித்துக் கொள்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரினதும் நற்கிரியைகளை கபூல் செய்வானாக, ஆமீன்.

مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ‌ؕ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏.

அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது, ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான். இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன். யாவற்றையும் நன்கறிபவன். (2:261)

 

 

 

அஷ்ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.