COVID 19 பரிசோதனை நோன்பை முறிக்குமா?

மே 07, 2020

 

ACJU/FTW/2020

07.05.2020

13.09.1441

 

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

கேள்வி : COVID 19 பரிசோதனை நோன்பை முறிக்குமா?

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலவாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

உணவு அல்லது பானமாக உட்கொள்ளக்கூடிய ஏதும் வயிற்றிற்குள் சென்றுவிட்டால் நோன்பு முறிந்துவிடும் எனும் விடயத்தில் மார்க்க அறிஞர்களிடம் கருத்தொற்றுமை உள்ளது. இதற்கு அல்-குர்ஆனில் அல்-பகரஹ் - 187 ஆம் வசனம் மற்றும் பல ஹதீஸ்கள் ஆதாரங்களாக உள்ளன. (1)

அவ்வாறே, உணவு அல்லது பானமாக உட்கொள்ளப்படாத கற்கள், இரும்பு போன்றவை வயிற்றிற்குள் சென்று விட்டாலும் நோன்பு முறிந்து விடும் என்று நான்கு மத்ஹபுகள் உற்பட பெரும்பான்மை மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர். (2)

இதற்கு இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பின்வரும் கூற்று ஆதாரமாக உள்ளது.

“உடம்பிற்குள் (துவாரங்களினால்) ஏதாவது ஒரு பொருள் நுழைவதினாலே நோன்பு முறியும்” (ஸஹீஹுல் புகாரி) (3)

ஷாபிஈ மத்ஹபுடைய அறிஞர்கள், ஒரு நோன்பாளி தான் நோன்பாளி என்ற ஞாபகத்துடன் வேண்டுமென்று சுய விருப்பத்துடன் வாயில் ஏதேனுமொரு பொருளை உட்செலுத்தி

அப்பொருள் தொண்டையின் மத்திய பகுதியைத் தாண்டி விடுமானால் அவரது நோன்பு முறிந்து விடும் என்றும், அவ்வாறே ஒரு நோன்பாளி மூக்கில் ஏதேனுமொரு பொருளை உட்செலுத்தி அப்பொருள் (கைஷூம் எனப்படும்) மூக்குத் துளையின் உட்பகுதியைத் தாண்டிச் சென்றால் அவரது நோன்பு முறிந்து விடும் என்றும் கூறுகின்றனர்.  இதுவே, ஹன்பலி மத்ஹபுடைய அறிஞர்களின் கருத்தாகும். (4)

ஹனபி மத்ஹபின் அறிஞர்கள், உட்செலுத்தப்படும் ஏதேனுமொரு பொருள் பூர்த்தியாக உடலினுள்ளே சென்று மறைந்தால் மாத்திரமே நோன்பு முறியும் என்றும், அதில் சில பகுதிகள் வெளியில் தெரிந்துகொண்டிருந்தால் அல்லது உட்சென்றுவிட்டு வெளியில் திரும்பி வந்துவிட்டால் நோன்பு முறியாது என்றும் கூறுகின்றனர்.  மாலிகி மத்ஹபின் அறிஞர்கள், திண்மமான ஏதேனும் பொருட்கள் தொண்டையை அடைந்தால் நோன்பு முறியாது, அவை வயிற்றை அடைந்தாலே நோன்பு முறியும் என்று கூறுகின்றனர். (5)

எனவே, ஹனபி மத்ஹபுடைய அறிஞர்களின் கருத்துப் பிரகாரம் வாய் அல்லது மூக்கினால் அனுப்பப்படும் கருவி வெளியில் வந்துவிடுவதால் COVID 19   பரிசோதனையினால் நோன்பு முறியாது. மாலிகி மத்ஹபுடைய அறிஞர்களின் கருத்துப் பிரகாரமும் வயிற்றிற்குள் ஏதும் செல்லவில்லை என்பதால் நோன்பு முறியாது.

இவ்வடிப்படையில், ஷாபிஈ மத்ஹபுடைய அறிஞர்களின் கருத்தின் பிரகாரம் COVID 19 பரிசோதனையில் மூக்கிலும் வாயிலும் செலுத்தப்படும் கருவி மேற்குறிப்பிட்ட எல்லைகளைத் தாண்டிச் செல்வதில்லை என இத்துறையில் தேர்ச்சி பெற்ற வைத்தியர்கள் உறுதிபடக் கூறுவதால் இவ்வாறு பரிசோதனை செய்வதால் நோன்பு முறியாது. (6)

எனினும், ஏதேனுமொரு விதத்தில் மேற்கூறப்பட்ட எல்லையை குறித்த கருவி தாண்டியது உறுதியாகத் தெரிந்தால் நோன்பு முறிந்து விடும். அதனைப் பிரிதொரு தினத்தில் கழா செய்து கொள்ள வேண்டும். (7)

இப்பரிசோதனை விடயத்தில் முஸ்லிம்கள் உரிய அதிகாரிகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

 

 

அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அஷ்ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் ஸூரி
மேற்பார்வையாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 அஷ்ஷைக் எம்.எம்.ஏ முபாரக்
செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 ( 1) وَأَجْمَعَ الْعُلَمَاءُ عَلَى الْفِطْرِ بِالْأَكْلِ وَالشُّرْبِ بِمَا يُتَغَذَّى بِهِ، فَأَمَّا مَا لَا يَتَغَذَّى بِهِ، فَعَامَّةُ أَهْلِ الْعِلْمِ عَلَى أَنَّ الْفِطْرَ يَحْصُلُ بِهِ. (المغنى لابن قدامة)

 (2) وَأَجْمَعَ الْعُلَمَاءُ عَلَى الْفِطْرِ بِالْأَكْلِ وَالشُّرْبِ بِمَا يُتَغَذَّى بِهِ، فَأَمَّا مَا لَا يَتَغَذَّى بِهِ، فَعَامَّةُ أَهْلِ الْعِلْمِ عَلَى أَنَّ الْفِطْرَ يَحْصُلُ بِهِ. (المغنى لابن قدامة)

 (3) وَقَالَ ابْنُ عَبَّاسٍ، وَعِكْرِمَةُ: «الصَّوْمُ مِمَّا دَخَلَ وَلَيْسَ مِمَّا خَرَجَ» (صحيح البخاري كتاب الصوم - بَابُ الحِجَامَةِ وَالقَيْءِ لِلصَّائِمِ)

(4) ﻭﺃﻣﺎ) اﻟﺴﻌﻮﻁ ﻓﺈﻥ ﻭﺻﻞ ﺇﻟﻰ اﻟﺪﻣﺎﻍ ﺃﻓﻄﺮ ﺑﻼ ﺧﻼﻑ ﻗﺎﻝ ﺃﺻﺤﺎﺑﻨﺎ: ﻭﻣﺎ ﺟﺎﻭﺯ اﻟﺨﻴﺸﻮﻡ ﻓﻲ اﻻﺳﺘﻌﺎﻁ ﻓﻘﺪ ﺣﺼﻞ ﻓﻲ ﺣﺪ اﻟﺒﺎﻃﻦ ﻭﺣﺼﻞ ﺑﻪ اﻟﻔﻄﺮ ﻗﺎﻝ ﺃﺻﺤﺎﺑﻨﺎ ﻭﺩاﺧﻞ اﻟﻔﻢ ﻭاﻷﻧﻒ ﺇﻟﻰ ﻣﻨﺘﻬﻰ اﻟﻐﻠﺼﻤﺔ ﻭاﻟﺨﻴﺸﻮﻡ ﻟﻪ ﺣﻜﻢ اﻟﻈﺎﻫﺮ ﻓﻲ ﺑﻌﺾ اﻷﺷﻴﺎء ﺣﺘﻰ ﻟﻮ ﺃﺧﺮﺝ ﺇﻟﻴﻪ اﻟﻘﺊ ﺃﻭ اﺑﺘﻠﻊ ﻣﻨﻪ ﻧﺨﺎﻣﺔ ﺃﻓﻄﺮ (المجموع شرح المهذب)

ﺛﻢ ﺩاﺧﻞ اﻟﻔﻢ ﻭاﻷﻧﻒ ﺇﻟﻰ ﻣﻨﺘﻬﻰ اﻟﻐﻠﺼﻤﺔ ﻭاﻟﺨﻴﺸﻮﻡ ﻟﻪ ﺣﻜﻢ اﻟﻈﺎﻫﺮ ﻓﻲ اﻹﻓﻄﺎﺭ ﺑﺎﺳﺘﺨﺮاﺝ اﻟﻘﻲء ﺇﻟﻴﻪ ﻭاﺑﺘﻼﻉ اﻟﻨﺨﺎﻣﺔ ﻣﻨﻪ ﻭﻋﺪﻣﻪ ﺑﺪﺧﻮﻝ ﺷﻲء ﻓﻴﻪ ﻗﺎﻝ ﻓﻲ اﻟﻤﺼﺒﺎﺡ ﻭاﻟﻐﻠﺼﻤﺔ ﺃﻱ: ﺑﻤﻌﺠﻤﺔ ﻣﻔﺘﻮﺣﺔ ﻓﻼﻡ ﺳﺎﻛﻨﺔ ﻓﻤﻬﻤﻠﺔ ﺭﺃﺱ اﻟﺤﻠﻘﻮﻡ، ﻭﻫﻮ اﻟﻤﻮﺿﻊ اﻟﻨﺎﺗﺊ ﻓﻲ اﻟﺤﻠﻖ ﻭاﻟﺠﻤﻊ ﻏﻼﺻﻢ ﻭﻗﻮﻟﻪ ﻣ ﺭ ﺛﻢ ﺩاﺧﻞ اﻟﻔﻢ ﺃﻱ: ﺇﻟﻰ ﻣﺎ ﻭﺭاء ﻣﺨﺮﺝ اﻟﺤﺎء اﻟﻤﻬﻤﻠﺔ ﻭﺩاﺧﻞ اﻷﻧﻒ ﺇﻟﻰ ﻣﺎ ﻭﺭاء اﻟﺨﻴﺎﺷﻴﻢ اﻩـ ﻭﻗﺎﻝ اﻟﻜﺮﺩﻱ: ﻋﻠﻰ ﺑﺎﻓﻀﻞ ﻓﺎﻟﺨﻴﺸﻮﻡ ﺟﻤﻴﻌﻪ ﻣﻦ اﻟﻈﺎﻫﺮ ﻗﺎﻝ ﻓﻲ اﻟﻌﺒﺎﺏ ﻭاﻟﻘﺼﺒﺔ ﻣﻦ اﻟﺨﻴﺸﻮﻡ اﻩـ ﻭﻫﻲ ﻓﻮﻕ اﻟﻤﺎﺭﻥ ﻭﻫﻮ ﻣﺎ ﻻﻥ ﻣﻦ اﻷﻧﻒ ( حاشية الشرواني)

(قوله: ولا يفطر بوصول إلى باطن قصبة أنف) أي لأنها من الظاهر، وذلك لأن القصبة من الخيشوم، والخيشوم جميعه من الظاهر. (قوله حتى يجاوز منتهى الخيشوم) أي فإن جاوزه أفطر ومتى لم يجاوز لا يفطر. (وقوله: وهو) أي المنتهى (إعانة الطالبين )

 (5) وَكَذَا لَوْ ابْتَلَعَ خَشَبَةً) أَيْ عُودًا مِنْ خَشَبٍ إنْ غَابَ فِي حَلْقِهِ أَفْطَرَ وَإِلَّا فَلَا (قَوْلُهُ: مُفَادُهُ) أَيْ مُفَادُ مَا ذُكِرَ مَتْنًا وَشَرْحًا وَهُوَ أَنَّ مَا دَخَلَ فِي الْجَوْفِ إنْ غَابَ فِيهِ فَسَدَ وَهُوَ الْمُرَادُ بِالِاسْتِقْرَارِ وَإِنْ لَمْ يَغِبْ بَلْ بَقِيَ طَرَفٌ مِنْهُ فِي الْخَارِجِ أَوْ كَانَ مُتَّصِلًا بِشَيْءٍ خَارِجٍ لَا يَفْسُدُ لِعَدَمِ اسْتِقْرَارِهِ. (رد المحتار على الدر المختار)

 (6) وَاحْتُرِزَ بِالْمَائِعِ عَنْ غَيْرِهِ كَحَصَاةٍ وَدِرْهَمٍ فَوُصُولُهُ لِلْحَلْقِ لَا يُفْسِدُ بَلْ لِلْمَعِدَةِ. (حاشية الصاوي على الشرح الصغير)

 (7) وفى نهاية المحتاج فى مسألة مضغ العلك للصائم: فَإِنْ تَيَقَّنَ وُصُولَ بَعْضِ جُرْمِهِ عَمْدًا إلَى جَوْفِهِ أَفْطَرَ وَحِينَئِذٍ يَحْرُمُ مَضْغُهُ، بِخِلَافِ مَا إذَا شَكَّ أَوْ وَصَلَ طَعْمُهُ أَوْ رِيحُهُ لِأَنَّهُ مُجَاوِرٌ، وَكَالْعِلْكِ فِي ذَلِكَ اللِّبَانُ الْأَبْيَضُ فَإِنْ كَانَ لَوْ أَصَابَهُ الْمَاءُ يَبِسَ وَاشْتَدَّ كُرِهَ مَضْغُهُ وَإِلَّا حَرُمَ.

Last modified onவியாழக் கிழமை, 07 மே 2020 06:08

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.