தகவல்களை பிறருக்கு பகிர முன்னர் உறுதி செய்துகொள்வோம்

நவ 17, 2016

தகவல்களை பிறருக்கு பகிர முன்னர் உறுதி செய்துகொள்வோம்!

மனித வாழ்வின் அனைத்து விடயங்களுக்குமான வழிகாட்டல்களை வழங்கும் இஸ்லாம் தொடர்பாடல் ஒழுங்குகளை எமக்கு கற்றுத்தந்துள்ளது. அந்தவகையில் உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்புவதை இஸ்லாம் தடுத்துள்ளது. எனவே தகவல்களை உறுதி செய்ய முன்னர் பிறருக்கு பரப்புவதை தவிர்ந்து கொள்ளுமாறும் சமூக ஊடகங்களைப் (Social Media) பயன்படுத்துவோர் இவ்விடயத்தில் அவதானமாக செயற்படுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.

குறிப்பாக எதிர்வரும் குத்பாக்களை இவ்விடயங்கள் உள்ளடங்கியதாக அமைத்துக் கொள்ளுமாறும் கதீப்மார்களை ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ

(49:06)

 

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள் (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.

வஸ்ஸலாம்.

 

அஷ்-ஷைக் எச். உமர்தீன் 

செயலாளர் - பிரச்சாரக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.