அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூகசேவைக் பிரிவினால் மதகுருமார்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு ஒன்று கொழும்பு ரிழ்வானிய்யா அரபுக்கல்லூரியில்   16.09.2018ம் திகதி நடை பெற்றது. இந்நிகழ்வில் சர்வ மத மதகுருமார்கள்  கலந்து பயன் பெற்றனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  குச்சவெளி கிளையின் மாதாந்த ஒன்று கூடல் தலைவர் அஷ்ஷெஹ் அப்துல் அஸீஸ்  (சஹ்தீ) அவர்களின் தலைமையில் 09/09/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கிளையின் அலுவலக திறப்பு விழா பற்றி கலந்துரையாடியதோடு அதற்கான ஏற்பாட்டுக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. மேலும் எதிர்வரும் 29.09.2018 அன்று உத்தியோகபூர்வமாக அலுவலகம் திறப்பதென முடிவும் செய்யப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  நற்பிட்டிமுனை கிளை மற்றும் நற்பிட்டிமுனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை ஆகியன இணைந்து தமது பகுதியில் போதை ஒழிப்பு மாநாடு நடாத்துவது பற்றிய கலந்துரையாடல் ஒன்று வர்த்தக சங்கத்தினருடன் 2018.09.07 அன்று நற்பிட்டிமுனை ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் ஹொரம்பாவை மாவட்ட காரியாலயத்தில்  தலைவர் அஷ் ஷைக் சுஐப்  (தீனி) அவர்களின் தலைமையில் 02.09.2018 அன்று   நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

மேல்மாகாண பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியப் பிரிய லியனகே அவர்கள் இன்று 2018.09.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், செயலாளர் உட்பட அதன் பிரதிநிதிகளை ஜம்இய்யாவின் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

அவர் உரையாற்றுகையில் நாட்டின் முன்னேற்றத்திற்கு சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை அத்தியவசியமெனவும் நாட்டில் பல்லின சமூகங்களாக வாழ்கின்றவர்கள் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வது ஒற்றுமையை கட்டியெழுப்ப காரணமாக அமையுமெனவும் கூறிப்பிட்டார்.

தொடர்ந்து குறிப்பிடுகையில் ஒவ்வொரு இனத்திற்கு மத்தியிலும் புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் மொழிகள் பாரிய பங்கு வகிப்பதாகவும் பிற சமூகத்தவர்களின் மொழியை அறிந்து வைப்பதினூடாக சந்தேகங்களை அகற்றிக் கொள்ள முடியுமனவும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி  அவர்கள் ஜம்இய்யாவின் செயற்பாடுகள் பற்றியும், நாட்டிற்காக ஜம்இய்யா ஆற்றிய சேவைகள் பற்றியும் விளக்கினார்.

இஸ்லாம் வாழ்வின் அனைத்து விடயங்களுக்கும் வழிகாட்டியுள்ளது. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவனது வாழ்வின் அனைத்து செயற்பாடுகளுக்கும் அழகிய வழிகாட்டல்களை வழங்கிய இஸ்லாம் ஒரு நாட்டின் பாதுகாப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்றும், தனிமனிதனின் பாதுகாப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்றும்  வழிகாட்டியுள்ளது என்பது பற்றியும் விளக்கினார். அத்துடன் இந்நாட்டு பாதுகாப்புப் படை செய்யும் பணிகளையும் பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய ஜம்இய்யாவின் தலைவர் அவர்கள் ISIS பிரச்சினை ஏற்பட்ட போது முதலாவதாக அதன் செயற்பாடுகளை கண்டித்து அதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்நாட்டிற்கும், மக்களுக்கும் இது பற்றிய தெளிவை ஜம்இய்யா வழங்கியதையும் நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்தும் நாம் எதிர்காலத்தில் அமைதியும், ஒற்றுமையும் நிறைந்த இலங்கையை கட்டியெழுப்புவதன் தேவை பற்றியும், கடந்த கால கசப்பான நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்காக சிறந்த ஒரு பொறிமுறை அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியப் பிரிய லியனகே அவர்கள் இந்த சந்திப்புக்கள் போன்று இன்னும் பல சந்திப்புக்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்றும் இந்த நாட்டில் வசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு வழங்குவதே எமது பொறுப்பு என்பதாகவும் குறிப்பிட்டார். மத, இன வேறுபாடுகளுக்கு அப்பாற் சென்று சேவையாற்றுவது எமது நோக்கம் எனவும் சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்தும் ஜம்இய்யாவின் தலைவர் நாட்டில் கடந்தகால கசப்பான நிகழ்வுகளிற்கு மூலக் காரணியாக இருந்த மதங்களுக்கிடையிலான பிழையான புரிதல்களை அகற்றுவதற்காக முடியுமான அனைத்து செயற்பாடுகளையும் ஜம்இய்யா செய்து வருவதைப் போன்று அனைத்து தரப்பினரும் செய்ய முன் வரவேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

ஜிஹாத் தொடர்பான பிழையான புரிதல்களுக்கான தெளிவுகளை தொகுத்து வழங்கிய தலைவர் அவர்கள் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட சமாஜ சங்வாத எனும் புத்தகத்தின் பிரதிகளையும் வழங்கி வைத்தார்.

இறுதியாக மேல்மாகாண பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியப் பிரிய லியனகே அவர்கள் தமக்கு இச்சந்தர்ப்பத்தை வழங்கியமைக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றார்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று 2018.09.03 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகைத் தந்தார். சமயத்தலைவர்களை சந்தித்து நாட்டின் சமகால நிலமைகளையும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பற்றியும் எடுத்துரைக்கும் வண்ணமே அவரது வருகை அமைந்திருந்தது. அவர் தன் வருகையின் நோக்கம் பற்றி பேசும் போது நாட்டின் தற்கால அரசியல் நிலைமைகளையும், பொருளாதார வீழ்ச்சியையும், மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளையும் கூறி இதனை அரசாங்கத்திற்கு எத்தி வைக்கச் செய்வதே நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாகுமென குறிப்பிட்டார்.


அவரது பேச்சைத் தொடர்ந்து உரையாற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி அவர்கள் சமயத்தலைவர்களை சந்திக்கும் வரிசையில் நீங்கள் இங்கு வந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். இவ்விஸ்தாபனம் 1924 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து சமயப் பணியை செவ்வனே செய்து வருகின்றது. எந்தவொரு அரசியல் சாயத்தையும் பூசிக் கொள்ளாத எமது இந்நிறுவனம் அவ்வப்போது ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுக்கு ஒத்துழைத்து வந்துள்ளது. அவ்வாறே நாட்டில் சகல சமூகத்தவர் மத்தியிலும் சமாதானமும் சகவாழ்வும் மலர தன்னாலான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.


ஜம்இய்யா எந்தவொரு பிரச்சினையையும் பேசித் தீர்த்துக் கொள்ள முடியுமென உறுதியாக நம்புகிறது. அந்த வகையில் தான் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்களோடு கூட நாம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டோம். தொடரான அரசியல் பாரம்பரியத்தை கொண்ட நீங்கள் இதனை உங்களது இலட்சியமாக எடுத்துக் கொள்வீர்கள் என்று எதிர்ப்பார்க்கின்றேன்.


காலஞ்சென்ற தென்னாபிரிக்க அரசியல் தலைவர் நெல்சன் மண்டேலாவின் அரசியல் சாணக்கியத்தை எல்லா அரசியல் வாதிகளும் எடுத்து நடப்பதினூடாக சிறந்த இலங்கையை கட்டியெழுப்ப முடியுமென நம்புகின்றேன். வளர்ந்து வரும் வாலிப அரசியல் வாதியான உங்களுக்கு இந்த விடயங்களை கூறி வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


நாம் எல்லோரும் இலங்கையராவர். அந்த உணர்வோடு தான் நாம் இந்நாட்டை வளப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஆட்சி செய்தவர்கள் மான்டு விட்டார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் தன்செயற்பாடுகளில் தூய்மையும், நேர்மையும் கொண்டு செயல்படுவதே கடமையாகும். அந்த வகையில் உங்களது சகல முயற்சிகளும் அமையுமென எதிர்பார்க்கின்றேன். இந்நாட்டில் சகல சமூகங்களும் ஐக்கியமாக வாழவும், பொருளாதாரம் உட்பட சகல துறைகளிலும் இந்நாடு முன்னேற்றம் அடையவும் எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிக்க வேண்டுகிறேன் என்று தனதுரையை முடித்தார்.


இறுதியாகஇ மிகவும் பெறுமதி வாய்ந்த கருத்துக்களைக் கேட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்காக உங்களுக்கும் இந்நிறுவனத்திற்கும் நன்றியும் செலுத்துகிறேன். இன்னும் பல விடுத்தம் இங்கு வருகை தந்து கலந்துரையாட விரும்புகிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறி விட்டு ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தில் இருந்து விடைபெற்றார்.

ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU/NGS/08-21/002

2018.08.20 / 1439.12.08


அல்லாஹுஅக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்


தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹா பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கிறது.


நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முழு வாழ்வுமே தியாகத்தோடு நிறைந்ததாகும். அன்னாரினதும் அவரது மனைவி ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்களினதும்  அவர்களது புதல்வர் நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களினதும் தியாகங்களை இத்தினங்களில் நினைவு கூறுகின்ற நாம் அத்தகைய தியாக உணர்வுகளை எம்மில் வளரத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். சிறந்த முன்னுதாரணமிக்க ஒரு குடும்பமாக திகழ்ந்த இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தில் இருந்து நாமும் படிப்பினைகள் பெறவேண்டும்.


இத்தியாக திருநாளில் உலகலாவிய முஸ்லிம் உம்மத் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் முறியடிக்கப்பட அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக. ஒற்றுமையெனும் கயிற்றைப் பலமாக பிடித்து நாம் அனைவரும் தீன்பணியில் ஈடுபடுவோமாக.


“உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்கு திடமாக இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமும் அவரோடு இருந்தவர்களிடமும் அழகிய முன்மாதிரியிருக்கிறது.” (60:06) என்ற அல்குர்ஆன் வசனத்தை நினைவிலிருத்தி தியாக சிந்தனையோடு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக!


தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!


ஈத் முபாரக்!

 


அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU/NGS/08-21/002

2018.08.20 / 1439.12.08


அல்லாஹுஅக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்


தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹா பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கிறது.


நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முழு வாழ்வுமே தியாகத்தோடு நிறைந்ததாகும். அன்னாரினதும் அவரது மனைவி ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்களினதும்  அவர்களது புதல்வர் நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களினதும் தியாகங்களை இத்தினங்களில் நினைவு கூறுகின்ற நாம் அத்தகைய தியாக உணர்வுகளை எம்மில் வளரத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். சிறந்த முன்னுதாரணமிக்க ஒரு குடும்பமாக திகழ்ந்த இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தில் இருந்து நாமும் படிப்பினைகள் பெறவேண்டும்.


இத்தியாக திருநாளில் உலகலாவிய முஸ்லிம் உம்மத் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் முறியடிக்கப்பட அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக. ஒற்றுமையெனும் கயிற்றைப் பலமாக பிடித்து நாம் அனைவரும் தீன்பணியில் ஈடுபடுவோமாக.


“உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்கு திடமாக இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமும் அவரோடு இருந்தவர்களிடமும் அழகிய முன்மாதிரியிருக்கிறது.” (60:06) என்ற அல்குர்ஆன் வசனத்தை நினைவிலிருத்தி தியாக சிந்தனையோடு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக!


தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!


ஈத் முபாரக்!

 


அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகலை மாவட்டம் பன்னவ  பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வொன்று   பன்னவ ஜும்ஆ பள்ளிவாசலில் 2018.08.17 அன்று  இடம்பெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா