அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூகசேவைக் பிரிவினால்  இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு ஒன்று குருநாகல் மாவட்டம் மடிகே மிதியாலையில்  01/04/2018ம் திகதி நடை பெற்றது. இந்நிகழ்வில் பல்லின மக்களும் கலந்து பயன் பெற்றனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் மாதாந்த நிறைவேற்றுக்குழுவின் ஒன்று கூடல் மாலிகாவத்தை தாருல் ஹஸன் பெண்கள் மத்ரஸாவில் கிளையின் தலைவர் அஷ்ஷேக் பரூத் அவர்களின் தலைமையில் 27/03/2018 அன்று  செவ்வாய்க்கிழமை இஷா தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது. இதனடிப்படையில் வருகின்ற றமழானை முன் வைத்து ஆண்களுக்கும் பெண்களுக்குமான பல நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

2018.03.27 (1439.07.08)

ஆரோக்கியமும், ஓய்வும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருட் செல்வங்களில் உள்ளவையாகும்.

(عن عبدالله بن عباس رضي الله عنهما قال: قال النبي صلى الله عليه وسلم: نعمتانِ مغبونٌ فيهما كثيرٌ من الناس: الصحة والفراغ . (رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விடயத்தில் நஷ்டமடைந்து கொண்டிருக்கின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். (புகாரி: 6412)

இந்த இரு செல்வங்களையும் முறையாக பயன்படுத்திக் கொள்ள தவறி விடுவதால் பெரும்பாலான மனிதர்கள் நஷ்டத்திற்கு உள்ளாகி விடுகின்றனர்.

ஏப்ரல் விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படுகின்றன. தொடராக நான்கு மாதங்கள் பாடசாலை சென்று வந்த நம் பிள்ளைகள் விடுமுறை பெறும் காலம் இதுவாகும். இக்கால கட்டத்தில் எம்மில் சிலர் அவர்களை அழைத்துக்கொண்டு விடுமுறையை கழிப்பதற்காக உல்லாசப் பிரயாணங்கள் மேற்கொள்கின்றனர். பிள்ளைகளையும், குடும்பத்தவர்களையும் இவ்வாறு அழைத்துச் சென்று ஊர்களையும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்த்து வருவது இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானதல்ல. என்றாலும் நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் எமது செயற்பாடுகள் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி அமைய வேண்டும்.

ஆடைகள் அணிவது முதல் எமது உணவு, குடிப்பு ஆகிய யாவற்றிலும் ஹலால் ஹராம் பேணி இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். ஆடல், பாடல், பாட்டுக் கச்சேரிகள் என்பவற்றில் கலந்து கொள்ளுதல், மதுபானம் அருந்துதல், பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுதல் போன்ற இஸ்லாமிய போதனைகளுக்கு முரணான விடயங்களை முற்று முழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே எமது விடுமுறை காலத்தில் உரிய நேரத்தில் தொழுது, சன்மார்க்க விளக்கங்களைக் கேட்டு, நல்ல விடயங்களில் நேரத்தை கழிக்குமாறும், சுற்றுலா செல்வோர் இஸ்லாமிய வரையறைகளையும் ஒழுக்க விழுமியங்களையும் பேணி பிற சமூகத்தவருக்கு முன்மாதிரியாக செயற்படுமாறும் சகல முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் அண்மையில் கண்டிப் பகுதியில் நடந்து முடிந்த கலவரத்தை கவனத்திற் கொள்ளும் எவரும் உல்லாசப் பயணங்களை மேற்கொள்ள மாட்டார்கள் என நம்புகின்றோம். அந்தப் பிரயாணத்துக்குச் செலவாகும் தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்துதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட சிறிய அசம்பாவிதங்கள் இம்முறையும் ஏற்படுமாயின் அது பெரும் பூதாகரமாகவே ஆகிவிடும் என அறிவித்துக் கொள்கின்றோம். ஆதலால் விடுமுறைப் பயணத்தை புறம் தள்ளிவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்ன செய்யலாம் என்பதை கவனத்திற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

அஷ்-ஷைக் எச். உமர்தீன்

செயலாளர் - பிரசாரக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின்  குச்சவெளி கிளை ஏற்பாடு செய்த குச்சவெளி பிரதேச மஸ்ஜித் நிருவாகிகளுக்கான வழிகாட்டல், விழிப்புணர்வு நிகழ்ச்சி  (25.03.2018) ஆம் திகதி காலை  கிளையின்  தலைவர் அஷ்ஷெய்ஹ் அப்துல் அஸீஸ் சஹ்தி ஹஸரத் அவர்களின் தலைமையில் வாழையூற்று அன்னூர் ஜும்மா மஸ்ஜிதில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வில்  குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 19 மஸ்ஜித்களின் நிருவாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்  ஸியம்பலாகஸ்கொடுவ அன்னூர் அரபுக்கல்லூரியில் தலைவர் அஷ் ஷேக் சுஹைப் (தீனி) அவர்களின் தலைமையில்  22/03/2018 வியாழக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

2018.03.26 (04.07.1439)

பிரச்சினைகள் ஏற்படுகின்ற போதெல்லாம் முஸ்லிம்களாகிய நாம் அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் அடிப்படையிலும், ஸஹாபாக்களின் முன்மாதிரிகளில் இருந்தும் சரியான விளக்கங்களைப் பெற்று தீர்வுகளைக் காண முயற்சிப்பதனூடாகவே நிலமைகளை சீராகக் கையாள முடியும் என்பதை அனைவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.


பல்வகை சமூகங்களுடனும், சமயத்தவர்களுடனும் சேர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் சமூக ஒற்றுமையைக் கடைபிடித்தும், நல்லுறவைப் பேணியும் நடந்துள்ளனர் என்பது வரலாற்று உண்மையாகும். இதனைத் தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டும் என்பதை ஜம்இய்யா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பொழுது நாம் மிக அவதானமாகச் செயற்பட வேண்டும். அண்மையில் கண்டிப் பிரதேசத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தின் போது ஸஹ்ரான் மௌலவி என்பவர் ஏனைய மதத்தவர்களைச் சாடியும், அல்குர்ஆனிய வசனங்களை மேற்கோள் காட்டி உடனடியாக ஜிஹாத் செய்ய தயாராக வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய காணொலி சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது. அதே நேரம் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற இஸ்லாமிய வழிகாட்டல்களை மார்க்க அறிஞர்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர்.


பிரச்சினைகளின் போது இவ்வாறான காணொலிகள் எமது சமூகத்தை பிழையான பாதையில் இட்டுச் செல்லும். எனவே பிரச்சினைகளின் போது நாட்டு சட்டங்கங்களை மதித்து, தம்மையும், தமது உடமைகளையும் பாதுகாக்கும் வகையில் தற்பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது தான் எமது பொறுப்பாகும்.


வன்முறைகளையும், பிரச்சினைகளையும் வன்மையாக கண்டிக்கும் இஸ்லாம் மாற்றுமதத்தவர்களுடன் எவ்வாறு அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும் என வழிகாட்ட தவறவில்லை. அதே போன்று ஜிஹாத் பற்றிய வசனங்களுக்கான பூரண விளக்கங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏற்கனவே வெளியிட்டுள்ளது.


எனவே இவ்வாறான காணொலிகள், பிரச்சாரங்கள் எம்மை மேலும் வீண் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும் என்பதால் இவற்றை முற்றாக தவிர்ந்து நடக்க வேண்டும் என ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.


அஷ்-ஷைக் எச்.உமர்தீன்
செயலாளர், பிரச்சாரக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2018.03.19

முஸ்லிம்களுக்கெதிராக நாட்டின் பல பாகங்களிலும்  நடைபெற்ற இன வாத தாக்குதல்கள் காரணமாக பல கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.


இப் பாதிப்புக்கள் குறிப்பாக கண்டி மாவட்டத்தில் பாரிய அளவில் காணப்படுவதால் பாதிக்கப்பட்ட எமது சகோதரர்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர பல உதவிகள் செய்யும் தேவை ஏற்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நாட்டு மக்களை இவ்விடயத்தில் அதிகமாக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர்.


அத்துடன் எதிர்வரும் ஜுமுஆ தினங்களில் இவர்களுக்கான உதவிகளை (பணமாக) சேகரித்து கீழ்வரும் ஜம்இய்யாவின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறும், அதன் வைப்புச்சீட்டுக்களை 0776185353 என்ற ஜம்இய்யாவின் வட்ஸப் இலக்கத்திற்கு அனுப்பி அதற்கான பற்றுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ளுமாறும் பள்ளிவாசல் நிர்வாகிகளை ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.
அல்லாஹுத்தஆலா நம் அனைவரினதும் தான, தருமங்களைப் பொருந்திக் கொள்வானாக.

COMMERCIAL BANK

ALL CEYLON JAMIYYATHUL ULAMA

A/C  NO 1901005000

COMMERCIAL BANK

BRANCH : ISLAMIC BANKING UNIT

SWIFT CODE : CCEYLKLX

 

AMANA BANK

ALL CEYLON JAMIYYATHUL ULAMA

A/C  NO 0010112110014

AMANA BANK

BRANCH : MAIN BRANCH

SWIFT CODE : AMNALKLX

 

 

அஷ்-ஷைக் எம்.ஏ.எம் முபாறக்
செயலாளர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2018.03.16

 • 03.05 அன்று தலைமையகத்தில் அவசர கூட்டமொன்று கூடப்பட்டது. அதில் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவசர நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடினர்.
 • 03.05 ஆம் திகதி இரவு பிரதமரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து நிலமையை அவசரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறும், தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமரிடம் ஜம்இய்யாவின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.
 • அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டிக் கிளை திகன பகுதிக்கு விஜயம் செய்து சகோதரர் அப்துல் பாசித் அவர்களின் ஜனாஸா நல்லடக்க விடயங்களை முன்னெடுத்தனர். அத்துடன் பிரச்சினை மேலும் பரவாமல் இருக்க முஸ்லிம்களுக்கு சில வழிகாட்டல்களும் வழங்கினார்கள்.
 • 03.06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யாவினால் மக்களுக்கு அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் தற்பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

           அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை

          (http://acju.lk/news-ta/acju-news-ta/item/1254-2018-03-06-09-27-04)

          Special Media Communique from ACJU

          (http://acju.lk/en/news/acju-news/item/1255-special-media-communique-from-all-ceylon-jamiyyathul-ulama)

 • 03.06 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதி நிதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.
 • 03.06 ஆம் திகதி ஜம்இய்யாவின் அவரச நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது ஏனைய முஸ்லிம் அமைப்புகளுடன் அவசர கூட்டமொன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டதுடன் முஸ்லிம் அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருந்த தாக்குதல்களை கட்டுப்படுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டப்பட்டது. அத்துடன் தாக்கப்படும் இடங்கள் பற்றிய தகவல்களை பிரதமர் காரியாலயத்திற்கும் பொலிஸ் மாஅதிபரின் காரியாலயத்திற்கும் வழங்கி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜம்இய்யாவின் ஒரு நிறைவேற்றுக் குழு உறுப்பினர் நியமிக்கப்பட்டார்.
 • 03.07 அன்று தலைமையகத்தில் ஏனைய முஸ்லிம் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் 17 முஸ்லிம் அமைப்புகள் கலந்து கொண்டனர். அதில் விஷேட ஒருங்கிணைப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்த விஷேட குழு முழு நேரப்பணியில் தமது நடவடிக்கைகளை மேற் கொண்டது. அக்குழுவின் கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.

          முஸ்லிம் அமைப்புகளின் கூட்டறிக்கை

          (http://acju.lk/news-ta/acju-news-ta/item/1262-2018-03-07-10-57-34)

           Joint Statement of Muslim Organizations

           (http://acju.lk/en/news/acju-news/item/1263-joint-statement-of-muslim-organizations)

 • 03.07 ஆம் திகதி விஷேட குழு அமைச்சர்களுடன் தொடர்புகள் மேற்கொண்டு வன்முறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தது.
 • 03.07 ஆம் திகதி இரவு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடனான சந்திப்பை மேற்கொண்டனர். அச்சந்திப்பின் போது நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவசரமாக நடவடிக்கைள் எடுக்குமாறும் ஜனாதிபதியை வேண்டிக் கொண்டனர்.
 • 03.07 ஆம் திகதி ஜம்இய்யாவின் பத்வாப் பிரிவு ஜுமுஆவிற்கான வழிகாட்டல்கல் வழங்கியது.

          ஜும்மா தொடர்பான முக்கிய அறிவித்தல்

          (http://acju.lk/news-ta/acju-news-ta/item/1264-2018-03-08-07-48-52)

          Important Announcement from ACJU

          (http://acju.lk/en/news/acju-news/item/1265-important-announcement-from-all-ceylon-jamiyyathul-ulama)

 • அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவால் அப்போதைய நிலமையில் அரபுக்கல்லூரிகளுக்கான வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது.

 

 • அகில இலங்கை ஜம்இய்யாவின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவராலயங்களில் உள்ள தூதுவர்களையும் சில முக்கியஸ்தர்களையும் சந்தித்து நிலமை பற்றி கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
 • 03.08 அன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஜம்இய்யாவின் தலைவர் நாட்டு மக்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கினார்.

           (https://www.youtube.com/watch?v=wYf6SQKlKHI)

 • 03.08 அன்று இரவு இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபணத்தில் ஜம்இய்யாவின் உறுப்பினர்களான அஷ்ஷைக் தாஸிம், அஷ்ஷைக் அப்துல் முக்ஸித் ஆகியோர் நாட்டு மக்களுக்கு தெளிவுகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்கள்.
 • 03.08 ஆம் திகதி ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு தலைவரின் விஷேட செய்தி வெளியிடப்பட்டது.

          (https://www.youtube.com/watch?v=cg97M9KePJ4)

 • 03.08 ஆம் திகதி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருமாறு அகில இலங்கை ஜம்இய்யா நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தது.

          கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம்

          (http://acju.lk/news-ta/acju-news-ta/item/1266-2018-03-08-13-05-37)

          Let’s help those affected by turmoil against Muslim Community

          (http://acju.lk/en/news/acju-news/item/1267-let-s-help-those-affected-by-turmoil-against-muslim-community)

 • 03.11 அன்று ஜம்இய்யாவின் தலைவர், செயலாளர் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களின் குழுவொன்று பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு மக்களை சந்தித்தனர்.

          (https://www.youtube.com/watch?v=DAv1iQYxfGE)

 • 03.11 அன்று அகில இலங்கை ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கண்டி மாவட்ட ஏனைய அமைப்புக்களை உள்ளடக்கிய (முசுஊஊ) முயனெல சுநடநைக ஊழழசனiயெவiபெ உநவெநச எனும் குழுவொன்று நியமிக்கப்பட்டு அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

          (https://www.youtube.com/watch?v=oBCWsq9IiUs)

 • 03.12 ஆம் திகதியில் இருந்து அகில இலங்கை ஜம்இய்யாவின் சமூக சேவைப்பிரிவின் தொண்டர்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தனர்.
 • 03.12 ஆம் திகதி விஷேட ஒருங்கிணைப்புக் குழு ஜம்இய்யாவின் தலைமையகத்தில் ஒன்றுகூடி சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கான நீண்டகால திட்டங்கள் பற்றி கலந்துரையாடியது.
 • 03.14 அன்று அஷ்-ஷைக் சதகதுள்ளா அவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக கண்டன அறிக்கையை ஜம்இய்யா வெளியிட்டது.

          (http://acju.lk/news-ta/acju-news-ta/item/1270-2018-03-14-10-14-28)

 • 03.14 அன்று பாதிக்கப்பட்டவர்கள் அவசரமாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தி ஜம்இய்யாவினால் அறிக்கை வெளியிட்டது.

          (http://acju.lk/news-ta/acju-news-ta/item/1269-2018-03-14-10-03-47)

 

14.03.2018 (25.06.1439)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உறுப்பினர்களில் ஒருவரும் காழி நீதவானுமாகிய அஷ்ஷைக் ஏ.சி.எம். சதகத்துல்லாஹ் அவர்கள் கடந்த வாரம் தாக்கப்பட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.


மத்திய மலைநாட்டில் சிங்கள மொழிமூலம் சன்மார்க்க பிரச்சாரம் செய்யும் இவர் கண்டி மாவட்டத்திலுள்ள சர்வ சமயத் தலைவர்களின் சங்கத்தின் உபதலைவர்களில் ஒருவராவார். சகலரோடும் நன்றாகப் பழகும் இவர்களை தலையில் அடித்துத் தாக்கி இரத்தம் சிந்தச் செய்த படுபாவிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். வயதில் முதிர்ந்த ஒருவரை எந்த மனிதாபிமானமற்ற முறையில் சமயத் தலைவர்களில் ஒருவரென கூட மதிக்காது நடந்து கொண்ட இக்காடத்தனத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக வன்மையாகக் கண்டிக்கிறது.


அன்னாருக்கு பூரண சுகம் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கும் அதே வேளை சம்பந்தப்பட்டோரை சட்டத்தின் முன்னிறுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொறுப்பு வாய்ந்தவர்களை கேட்டுக் கொள்கிறது.

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்

செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2018.03.13

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளின் தாக்குதல்களால் பள்ளிவாயல்கள், வியாபாரஸ்தலங்கள், வீடுகள், ஏனைய சொத்துக்கள் என பல  சேதங்கள் ஏற்பட்டு அப்பகுதி வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அப்பகுதிகளில் நிவாரண, புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், செயலாளர் உட்பட நிறைவேற்றகுக் குழு உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழுவொன்று 2018.03.11 அன்று பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்து தேவையான நிவாரண உதவிகளை முன்னெடுக்க  கண்டி பிரதேசத்திலுள்ள பல நிறுவனங்களை உள்ளடக்கிய குழுவொன்றை அமைத்து அங்குரார்பனம் செய்து வைத்தனர். 

அக்குழுவினூடாக ஆவணப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு இத்தருணத்தில் சில விடயங்களை மிகவும் அவதானத்துடன் நாட்டு முஸ்லிம்கள் கையாள வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.

 1. பாதிக்கப்பட்டவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அவர்களது உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டிருப்பதனால் அங்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈட்டை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நிலையில் இதுவரை பொலிஸ் நிலையங்களில் தமது சேதங்களுக்கான முறையீடுகளை பதிவு செய்யாதவர்கள் அவசரமாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 2. இப்படியான தருணங்களில் இழப்புக்கள் ஏற்பட்டவர்களுக்கு உதவுவது முஸ்லிம்களாகிய எமது கடமை என்ற வகையில் இவர்களுக்கு உதவ மக்கள் முன்வந்திருப்பது பராட்டுக்குறிய விடயமாகும். எனினும் நமது உதவி விபரங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதை முற்றாக தவிர்ந்து கொள்வது வீண் பிரச்சினைகளில் இருந்து எம்மை பாதுகாக்கும் என்பதால் அது விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறு வேண்டப்படுகின்றனர்.

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்

செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா