அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளை கண்டி நகர பிரதேசக் கிளையுடன் இணைந்து ஏற்பாடு செய்த சக வாழ்வு, சமய நல்லிணக்கம் சம்பந்தமாக கண்டி மாவட்டம் தழுவிய மாபெரும் விழுப்புணர்வு மாநாடு 2018.01.28 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை  காலை 8.30 - 2.00 மணி வரை கட்டுக்கலை ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

இந் நிகழ்வில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஆலிம்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், துரைசார்ந்தவர்கள், முன்னனி வியாபாரிகள், காதி நீதிபதிகள் மற்றும் விவாகப் பதிவாளர்கள் என பலரும் கலந்து பயன் பெற்றனர்.

மேற்படி நிகழ்வு கிராத்துடனும் கண்டி நகர பிரதேசக் கிளையின் கௌரவ தலைவர் அஷ்-ஷைக் பீ.எம் பாயிஸ் பாஸி அவர்களின் வரவேற்புரையுடனும் ஆரம்பமானது. ஜம்இய்யாவின் கௌரவ பிரதித் தலைவர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம் அகார் முஹம்மத் அவர்களின் சிறப்புரையைத் தொடர்ந்து சமூகமளித்தவர்களை 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு நிகழ்சிகள் நடாத்தப்பட்டன.

1. ஆலிம்களுக்கான வழிகாட்டல்களை ஜம்இய்யாவின் கௌரவ பொதுச் செயவாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்களும் அஷ்-ஷைக் யஹ்யா பலாஹி அவர்களும் நிகழ்தினார்கள்.

2. மஸ்ஜித் நிர்வாகிகள், முன்னனி வியாபாரிகள், துரைசார்ந்தவர்களுக்கான விஷேட சொற்பொழிவை அஷ்-ஷைக் எம்.எச்.எம் யூசுப் முப்தி அவர்கள் நிகழ்தினார்கள்.

3. காதி நீதிபதிகள் மற்றும் விவாகப் பதிவாளர்களுடனான கலந்துரையாடலை ஜம்இய்யாவின் கௌரவ பொருளாளர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல் அவர்களும் நிகழ்தினார்கள் .

மீண்டும் ஒன்று சேர்க்ப்பட்டதன் பின்னர் அ.இ.ஜ.உ பிரச்சாரக் குழுவின் செயலாளரும் கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் தலைவருமான
அஷ்-ஷைக் எச் உமர்தீன் ரஹ்மானி அவர்களின் சக வாழ்வு பற்றிய விஷேட உரையும் சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல் புத்தகங்களைப் பற்றிய அறிமுகமும் நடைபெற்றது.

இறுதியாக கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் கௌரவ செயவாளர் அஷ்-ஷைக் ஏ.எல் அப்துல் Gகப்fபார் தீனி அவர்களின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல ்உலமா

 

 

 

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுராதபுர மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்  27/01/2018 அன்று சனிக் கிழமை காலை 09:00 மணிக்கு  அனுராதபுர டவுன் ஜும்ஆ மஸ்ஜிதில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்ட அரபுக்கல்லூரி இறுதி வகுப்பு மாணவர்களுக்கு வருடாந்தம் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வரும் ஹிக்மா கருத்தரங்கு நிகழ்வில் இவ்வாரம் “சமனிலையான வாழ்விற்கு திட்டமிடல்” எனும் தலைப்பில் 27.01.2018ஆம் திகதி   கருத்தரங்கு ஒன்று சகோதரர் முஆத் முபாறக் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இக்கருத்தரங்கில் 80 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

ஊடகபிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சில்மியாபுர  கிளையின் தேர்தல் வழிகாட்டல் நிகழ்சி

27.01.2018 ஆம் திகதி அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சில்மியாபுர  கிளையின் ஏற்பாட்டில் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று பொரகஸ் பள்ளி வாயலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அபேட்சகர்கள் பலரும்  கலந்து கொண்டார்கள்.

ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்ட கிளையின் தேர்தல் வழிகாட்டல் நிகழ்சி

25.01.2018 ஆம் திகதி அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்ட  கிளையின் ஏற்பாட்டில் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று மாவட்ட கிளை காரியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அபேட்சகர்கள் பலரும் கலந்துகொண்டதுடன் விஷேட அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் உமர்தீன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட  கிளையின் தேர்தல் வழிகாட்டல் நிகழ்சி

24.01.2018 ஆம் திகதி அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட  கிளையின் ஏற்பாட்டில் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று ஹம்பாந்தோட்டை சிப்பிக்குளம்  அந்நூர் பள்ளி வாயலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அபேட்சகர்கள் பலரும் கலந்துகொண்டதுடன் விஷேட அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் அர்க்கம் நூரமீத் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் தலைவர் அஷ் ஷைக் அர்கம் நூரமீத் அவர்களின் தலைமையில் 24/01/2018 அன்று புதன் கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைக் குழுவினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் “மஸ்ஜித்களை அடிப்படையாகக் கொண்ட சேவைக் குழு” (MBST) எனும் செயற்திட்டத்தில் யாழ்பாணத்தில் இயங்கி வரும் குழுவினருடன் சேர்ந்து யாழ்பாணத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக அங்குள்ள நிலவரங்களை சேகரிக்கும் நிகழ்வு ஒன்று 20.01.2018 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் சிங்கப்பூர் நாட்டில் இயங்கி வரும் அல் பலாஹ் நிறுவனத்தினரும் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 

 

22.01.2018 ஆம் திகதி அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை கிளையின் ஏற்பாட்டில் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று  நடைபெற்றது. இந்நிகழ்வில் அபேட்சகர்கள் பலரும் கலந்து கலந்து கொண்டார்கள்.

ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பாணந்துறை கிளையின் தேர்தல் வழிகாட்டல் நிகழ்சி

17.01.2018 ஆம் திகதி அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பாணந்துறை கிளையின் ஏற்பாட்டில் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று பாணந்துறை பள்ளிமுல்லை ஜும்ஆ பள்ளிவாசலில் அஸர் தொழுகையின் பின் நடைபெற்றது. இந்நிகழ்வில் அபேட்சகர்கள் பலரும் கலந்துகொண்டதுடன் விஷேட அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் அர்க்கம் நூரமீத் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா