அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்   நீர் கொழும்பு கிளையின் ஏற்பாட்டில்   11-12-2017 திங்கட் கிழமை அன்று நீர் கொழும்பு  பிரதேச உலமாக்களுக்கான விஷேட ஒன்று கூடல் ஒன்று  நீர் கொழும்பு பெரிய பள்ளி வாசளில்  நடைப்பெற்றது.

இவ்வொன்று கூடலில் முக்கிய கருப்பொருளாக நீர் கொழும்பு பிரதேச இளம் வாலிபர்களின் மற்றும் சிறுவர்களின் எதிர்காலம் குறித்து பல  மஷூராக்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் அதற்கான வேலை திட்டங்களை முன்னெடுத்து செல்வதட்காக 15 உலமாக்கள் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டு பிரதேச உலமாக்களும் இணைந்து செயல் படுவதாக முடிவு செய்யப்ட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  மடவளை கிளையினால் 9/11/17 சனிக்கிழமையன்று அல் குர்ஆன் மனனப் போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கான பரிசளிப்பு விழா ஒன்று இடம் பெற்றது.      இவ்விழாவில் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யாவின் கண்டி மாவட்ட  செயலாளரும், தெகியங்க அர் ரவாஹிய்யா அரபுக் கல்லூரியின் அதிபருமான அஷ் ஷேக் அப்துல் கப்பார் தீனி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்ட கிளையின் அனுசரணையில் கொழும்பு மாவட்ட அரபுக் கல்லூரியில் பயிலும் இறுதி வகுப்பு மாணவர்களுக்கான வாராந்த திறன் விருத்தி வகுப்பு இம்முறை 2017.12.09 அன்று இஸ்லாமிய பார்வையில் தலைமைத்துவமும், முகாமைத்துவமும் எனும் தலைப்பில் நடை பெற்றது. இவ்வகுப்பில் சுமார் 70 மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை கிளையின் ஏற்பட்டில் உலமாக்களுக்கான விஷேட கருத்தரங்கு ஒன்று 2017.12.09 சனிக் கிழமை அன்று முள்ளிப்பொத்தானை கிளையின் காரியாலயத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் "சமூக மாற்றத்தில் உலமாக்களின் பங்களிப்பு" , மற்றும்  "உலமாக்களும் பொருளாதாரம்" எனும் தலைப்பில் கருத்தரங்குகள் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

  

அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான வருடாந்த மாநாடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் “அனைவருக்கும் கல்வி” எனும் தொனிப் பொருளிலான வருடாந்த மாநாடு 2017.12.10 ஞாயிறு அன்று வெள்ளவத்தை மியாமி வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது. அல்குர்ஆனின் அழகிய வசனங்கள் பாராயணம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்விற்கு வருகை தந்தவர்களை வாஞ்சையுடன் வாயார வாழ்த்தி வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எஸ்.எச் ஆதம் பாவா அவர்கள் நிகழ்த்தினார்கள்.

தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உபகுழுக்கள் சிலவற்றின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது ஜம்இய்யா தனது உப பிரிவுகள் மூலம் மக்களுக்கு செய்த சேவைகளும் சுருக்கமாகக் கூறப்பட்டன. இந்நிகழ்வில் பத்வா குழுவை பற்றிய அறிமுகத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஹாஷிம் சூரி அவர்கள் வழங்கிய போது மின்னஞ்சலூடாக, தொலைபேசி ஊடாக, எழுத்து மூலமாக, நேரடியக என பல முறைகளிலும் எமது பிரிவால் பத்வாக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், பத்வாக்கள் மற்றும் வழிகாட்டல்கள் தேவைப்படும் பொழுது எமது பிரிவின் துரித சேவை இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டிக் கொண்டார்கள்.

 ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் அறிமுகத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்-ஷைக் அர்கம் நூர்அமீத் அவர்கள் வழங்கினார். தனது உரையில் தமது மார்க்க விடயங்களை ஒரு போதும் விட்டுக் கொடுக்காது முடியுமான விடயங்களில் பிற மதத்தவர்களுடன் சகவாழ்வுடன் வாழ வேண்டும் என வலியுறுத்தினார்.

மக்தப் பிரிவின் அறிமுகத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம் பாழில் அவர்கள் வழங்கிய போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் தொட்டு மஸ்ஜிதை அடிப்படையாக வைத்து  நடை பெற்று வந்த இந்த மக்தபின் பிரதான நோக்கம் இறையச்சம் உள்ள எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதே எனக் குறிப்பிட்டார்.

பிரச்சாரக் குழுவின் அறிமுகத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எச்.உமர்தீன் அவர்கள் வழங்கினார்கள். எமது நிகழ்வுகள், செயற்பாடுகள், கொடுக்கல் வாங்கல்கள் போன்றவை ஒரு போதும் பிறமத்தவர்களை தூண்டும் வகையில் அமையக் கூடாது என்ற விடயத்தை அறிவுரையாக கூறினார்கள்.

இந்நிகழ்வுடன் எமது அகில இலங்கை ஜம்இய்த்துல்உலமாவின் அனைவருக்கும் கல்வி என்ற தொனிப்பொருளிலான வருடாந்த மாநாட்டின் முதல் அமர்வு நிறைவுக்கு வந்தது. மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் அமர்விற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் முப்தி யூசுப் அவர்கள் தலைமை தாங்கி அறிமுக உரையை வழங்கினார்கள். தனது உரையில் ஒவ்வொரு துறை சார்ந்தோரும் தமது துறைகளுடன் தொடர்பான மற்றும் பொதுவான மார்க்க விடயங்களை அறிந்திருப்பது முக்கியமென வரலாற்றை அடிப்படையாக்க் கொண்டு எடுத்துக் காட்டி சமகால முஸ்லிம்களின் கல்வி நிலையையும் எடுத்துக் கூறினார்.

அஷ்-ஷைக் முப்தி யூசுப் இவர்களின் உரையைத் தொடர்ந்து தாய் நாட்டில் கல்விக்கு பங்களிப்பு செய்த நபிமார்களின் வாரிசுகளான உலமாக்கள் பற்றிய ஒர் உரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ.முபாறக் அவர்களால் ஆற்றப்பட்டது. இது எமது முன்னோர்களான உலமாக்களின் சேவைகளை முன்னிறுத்தி செயற்பட எமக்கு வழிகாட்டும் அம்சமாக இருந்தது. அதைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விக்குழுவின் செயற்பாடுகள் பற்றி வீடியோ மூலம் காண்பிக்கப்பட்டது.

பின்னர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அழைப்பை ஏற்று வருகை தந்த அஷ்-ஷைக் முப்தி இஸ்மாஈல் மென்க் அவர்களின் விஷேட உரை இடம் பெற்றது. அவ்வுரையில் ஏனைய நிறுவனங்கள் தமது எதிர்கால திட்டங்களை முன்வைப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் இவ்வேளை ஜம்இய்யா தான் செய்த பணிகளை முன்வைத்தது சிறப்பான அம்சம் என குறிப்பிட்டார். அதை தொடர்ந்து இந்தியாவில் இருந்து வருகை தந்த அஷ்-ஷைக் ரூஹுல் ஹக் மௌலானாவின் உரையும் இடம்பெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஸீ.அகார் முஹம்மத் அவர்கள் தமது உரையில் எமது முதல் கிப்லா அமைந்துள்ள பிரதேசத்தின் விவகாரம் தொடர்பாக நாம் கரிசனைகாட்ட வேண்டுமென குறிப்பிட்டார். தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விக் குழுவின் செயற்பாடுகள், அடைந்த அடைவுகள் பற்றிய தெளிவு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிச் செயலாளர்  அஷ்-ஷைக் முர்ஸித் முழப்பர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அப்போது ஜம்இய்யாவின் கல்விக் குழு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களும் பின் தொடர வேண்டுமென வலியிறுத்தினார். தொடர்ந்து எமது செயற்பாடுகளில் முகாமைத்துவம் எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் ஒரு உரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விக் குழு ஆலோசகர்களில் ஒருவரான சகோதரர் நமீஸ் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

இறுதி நிகழ்வாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் எம். ரிஸ்வி முப்தி அவர்களின் சிறப்புரை நன்றியுரை கலந்ததாக அமைந்தது. தனது உரையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றிய விடயங்களை உள்ளடக்கிய ஷமாஇல் என்ற புத்தகத்தை ஒவ்வொருவரும் கற்று அதிலிருந்து பாடங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுருத்தி ஆரம்பித்த தலைவர் அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் கல்வி பற்றியும், ஜம்இய்யா கல்விக்காக, பாடசாலைகளுக்காக செய்து வரும் பணிகள் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறியதோடு, கலந்து கொண்டவர்களால் கல்விக்கு என்ன முறையில் கை கொடுக்க முடியும் என்பதையும் விளக்கமளித்து, ஜம்இய்யாவின் செயற்பாடுகளில் அனைவரும் கை கொடுக்க முன்வர வேண்டும் என கூறி இவ்வருடாந்த மாநாட்டை நிறைவு செய்தார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  இந்நிகழ்விற்கு கண்ணியமிக்க உள் நாட்டு, வெளி நாட்டு உலமாக்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், துறை சார்ந்தவர்கள், தனவந்தர்கள், நலன்விரும்பிகள்  என பல தரப்பினரும் நாட்டின் நாலா புறத்திலிருந்தும் வந்து கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

        

    

    

    

 

கனஹல ஷான்த ஸ்ரீ தேர அவர்கள் 2017.11.30 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்து அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.அதன் போது ஜம்இய்யாவின் நடவடிக்கைகள் பற்றி கேட்டரிந்து கொண்டதோடு அவருக்கு எமது வெளியீடுகளின் ஒன்றான சமாஜ சங்வாத எனும் சிங்கள மொழியிலான புத்தகமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம் உப செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அஷ்-ஷைக் அப்துர்ரஹ்மான் இணைப்பாளர் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆகியோரும் இன்னும் சிலரும் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல ்உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யாவின் அகுறனை கிளையின் ஏற்பாட்டில் " சகவாழ்வு " எனும் மகுடத்தின் கீழ் நிகழ்ச்சி ஒன்று அகுறனை அஸ்னா பள்ளியில் 2017.12.03 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வை அகில இலங்கை ஜம்இய்யாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல ்உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பேருவளை கிளையின் ஒன்று கூடல் 2017.12.03 அன்று மருதானை பலகை பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாட்டில்    ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக பேருவலை பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் தரவுகளை சேகரிப்பது சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்டது.இந்நிகழ்வில் அஷ்-ஷைக் அப்துர்ரஹ்மான் பஹ்ஜி கலந்து கொண்டார்.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல ்உலமா

    அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட அரபு மத்ரஸாக்களில் இவ்வருடம் (2017)  க.பொ.த சாதாரன தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான ஒருநாள் விஷேட கருத்தரங்கு ஒன்று மாவட்ட கிளையின் தலைமையகத்தில் 2017.12.03  அன்று காலை முதல் மாலை வரை இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் அரபு, அரபிலக்கணம், இஸ்லாம் ஆகிய பாடங்களுக்கான பரீட்சை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டது.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல ்உலமா

 

 

 

 

          அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளை மாவட்ட கிளையின்  ஒன்று கூடல்  02/12/2017 அன்று  சனிக்கிழமை  நடைபெற்றது. இக்கூட்டத்தில் வளர்ந்து வரும் எமது வாலிபர்களுக்கான ஒரு நிக்ழ்சியை ஒழுங்கு செய்ய ஆலோசனை செய்யப்பட்டது.

 

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல ்உலமா