ஊடக அறிக்கை
2016.07.25

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுக் கூட்டமும் புதிய நிறைவேற்றுக் குழுவுக்கான தெரிவும்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவுக்கான மத்திய சபைக் கூட்டமும் நேற்று 2016.07.24 (1437.10.19) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கண்டி பெரிய ஜும்ஆ (கண்டி லைன்) மஸ்ஜிதில் கௌரவ தலைவர் அஷ்- ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஜம்இய்யாவின் 25 மாவட்டக் கிளைகளினதும், 120 பிரதேசக் கிளைகளினதும் பதவிதாங்குனர்களான தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் உதவிச் செயலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
காலை 10:00 மணியளவில் ஆரம்பமான கூட்டம் பிற்பகல் 2:00 மணி வரை நடைபெற்றது. கிறாஅத்துடன் ஆரம்பமான நிகழ்கவுளில் வரவேற்புரையை நிகழ்த்திய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்- ஷைக் எச் உமர்தீன் அவர்கள் கண்டி மாவட்டத்தில் இம்மாநாடு நடைபெறுவதையிட்டு பெரு மகிழ்ச்சியடைவதாகவும் இம்மாவட்ட உலமாக்கள் வருகை தந்த அனைவரையும் பெருமனதோடு வரவேற்பதாகவும் கூறினார்.
அதனையடுத்து பொதுச்செயலாளர் அஷ்- ஷைக் எம்.எம்.ஏ முபாறக் செயற்பாட்டறிக்கையை சமர்ப்பித்தார். கடந்த மூன்றாண்டுகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா செய்த சமய சமூக சேவைகளை மிகவும் விரிவாக எடுத்துக் கூறி அஹ்லுஸ் ஸஷுன்னா வல் ஜமாஅத்தினரின் மகத்தான சொத்தான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பேணிப் பாதுகாப்பது நம் எல்லோரினதும் கடமையாகுமென்றார். முன்னாள் தலைவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்ததுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவூடன் எப்போதும் ஒத்துழைக்கும் பரோபகாரிகளுக்கும் நன்றி கூறினார்.
தொடர்ந்து பொருளாளர் அஷ்- ஷைக் ஏ.எல்.எம் கலீல் அவர்கள் ஜம்இய்யாவின் கடந்த மூன்றாண்டுகளுக்கான வரவு செலவுகளுக்கான கணக்கறிக்கையை வாசித்தார்.
அத்துடன் 2012 ஆம் ஆண்டு முதல் அமுலிலிருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தினை மூன்றில் இரண்டு பெரும்பான்மையூடன் உப தலைவர் அஷ்- ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் சபையினரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இறுதியாக தலைவர் அஷ்- ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனதுரையில் ஜம்இய்யாவுக்குட்பட்ட பலரையும் நினைவு கூர்ந்து, வருகை தந்துள்ள சகலரும் ஜம்இய்யாவின் பெறுமதியை நன்குணர்ந்து மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உலமாக்களின் புரிந்துணர்வுகள் மூலம் தான் சமூகத்துக்கு நல்ல பணியைச் செய்ய முடியும் என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாகரக் குழுவின் செயலாளர் அஷ்- ஷைக் எஸ்.எல் நவ்பர் நன்றியுரையினை வழங்கினார்.
ஐந்நூறு பேருக்கும் மேற்பட்ட பதவி தாங்குனர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு பிற்பகல் 2 மணியளவில் ழுஹர் தொழுகையுடனும் பகல் போசனத்துடனும் நிறைவுபெற்றது.
பகல் போசன இடைவேளைக்குப் பிறகு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிறைவேற்றுக் குழுவைத் தெரிவு செய்யும் மத்திய சபையின் அமர்வு பள்ளியின் முதலாம் மாடியில் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வாக முன்னாள் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தமது சிற்றுரைகளை வழங்கி தமது பதவிக் காலத்தை நிறைவு செய்தனர். அதனைத் தொடர்ந்து தற்போதைய யாப்பின் பிரகாரம் தற்காலிகத் தலைவராக அஷ்- ஷைக் எஸ்.எல் நவ்பர் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். குறித்த தெரிவும் பதவி தாங்குனர்களின் தெரிவும் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடைபெற்ற அதே வேளை தற்காலிகத் தலைவருக்கு உதவியாளர்களாக அஷ்- ஷைக் ஏ.எல்.எம் ரிழா மற்றும் அஷ்- ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
தெரிவின் போது புதிய நிறைவேற்றுக் குழுவில் பின்வருவோர் அங்கத்துவம் வகிக்கின்றனர்.


1) அஷ்-ஷைக் எம்.ஐ.எம். றிஸ்வி கௌரவ தலைவர்
2) அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் கௌரவ செயலாளர்
3) அஷ்-ஷைக் ஏ.ஸி.எம். அகார் முஹம்மத் கௌரவ பிரதித் தலைவர்
4) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல் கௌரவ பொருளாளர்
5) அஷ்-ஷைக் எம்.ஜே.அப்துல் காலிக் கௌரவ உப தலைவர்
6) அஷ்-ஷைக் எம்.எச்.எம் யூசுப் கௌரவ உப தலைவர்
7) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் றிழா கௌரவ உப தலைவர்
8) அஷ்-ஷைக் எஸ.எச் ஆதம்பாவா கௌரவ உப தலைவர்
9) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் ஹாஷிம் கௌரவ உப தலைவர்
10) அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸிம் கௌரவ உப செயலாளர்
11) அஷ்-ஷைக் எம்.எம்.எம்.முh;ஷித் கௌரவ உப செயலாளர்
12) அஷ்-ஷைக் எம்.கே அப்துh;றஹ்மான் கௌரவ உப பொருளாளர்
13) அஷ்-ஷைக் எச் உமறுத்தீன் கௌரவ உறுப்பினர்
14) அஷ்-ஷைக் எஸ்.எல்.நவ்பா;; கௌரவ உறுப்பினர்
15) அஷ்-ஷைக் எம்.எல்.எம்.இல்யாஸ்; கௌரவ உறுப்பினர்
16) அஷ்-ஷைக் எம்.எப்.எம்.பாஸில் கௌரவ உறுப்பினர்
17) அஷ்-ஷைக் கே.எம். அப்துல் முக்ஸித்; கௌரவ உறுப்பினர்
18) அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம் ஜஃபர் கௌரவ உறுப்பினர்
19) அஷ்-ஷைக் அர்கம் நூறமித் கௌரவ உறுப்பினர்
20) அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் கௌரவ உறுப்பினர்
21) அஷ்-ஷைக் ஏ.ஸி.எம் பாழில் கௌரவ உறுப்பினர்
22) அஷ்-ஷைக் ஏ.பி.எம். அலியார் கௌரவ உறுப்பினர்
23) அஷ்-ஷைக் எஸ்.எம்.எம் ஜுனைத் கௌரவ உறுப்பினர்
24) அஷ்-ஷைக் எஸ்.ஏ.பி.ஏ.எஸ் சுப்யான் கௌரவ உறுப்பினர்
25) அஷ்-ஷைக் எஸ்.எச் ஸறூக் கௌரவ உறுப்பினர்

 

அல்லாஹுதஆலா எம் அனைவரினதும் நல்லமல்களைப் பொருந்திக்கொள்வானாக!

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்

பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

2016.07.26 /1437.10.21

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வருடாந்தப் பொதுக் கூட்டம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனா;களுக்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் கடந்த 2016.07.24 (1437.10.19) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி பெரிய ஜும்ஆ(கண்டி லைன்) மஸ்ஜிதில் கௌரவ தலைவர் அஷ்- ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஜம்இய்யாவின் 25 மாவட்டக் கிளைகளினதும்இ 120 பிரதேசக் கிளைகளினதும் பதவிதாங்குனா;கள் இப்பொதுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனா;.
காலை 10:00 மணியளவில் ஆரம்பமான இக்கூட்டம் பிற்பகல் 2:00 மணி வரை நடைபெற்றது. கிறாஅத்துடன் ஆரம்பமான நிகழ்வூகளில் வரவேற்புரையை நிகழ்த்திய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்- ஷைக் எச் உமர்தீன் அவர்கள் கண்டி மாவட்டத்தில் இப்பொதுக்கூட்டம் நடைபெறுவதையிட்டு பெரு மகிழ்ச்சியடைவதாகவூம் இம்மாவட்ட உலமாக்கள் வருகை தந்த அனைவரையூம் பெருமனதோடு வரவேற்பதாகவூம் கூறினார்;.


அதனையடுத்து பொதுச்செயலாளர் அஷ்- ஷைக் எம்.எம்.ஏ முபாறக் செயற்பாட்டறிக்கையைச் சமர்ப்பித்தார். கடந்த மூன்றாண்டுகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா செய்த சமய மற்றும் சமூக சேவைகளை மிகவூம் விரிவாக எடுத்துக் கூறி அஹ்லுஸ் ஸஷுன்னா வல் ஜமாஅத்தினரின் மகத்தான சொத்தாகிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பேணிப் பாதுகாப்பது நம் எல்லோரினதும் கடமையாகுமென்றார். முன்னாள் தலைவர்களை நன்றியூடன் நினைவூ கூர்ந்ததுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவூடன் எப்போதும் ஒத்துழைக்கும் பரோபகாரிகளுக்கும் நன்றி கூறினார்.


தொடர்ந்து பொருளாளர் அஷ்- ஷைக் ஏ.எல்.எம் கலீல் அவர்கள் ஜம்இய்யாவின் கடந்த மூன்றாண்டுகளுக்கான வரவூ செலவூகளுக்கான கணக்கறிக்கையை வாசித்தார்.
அத்துடன் 2012 ஆம் ஆண்டு முதல் அமுலிலிருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தினை மூன்றில் இரண்டு பெரும்பான்மையூடன் உப தலைவர் அஷ்- ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் சபையினரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இறுதியாக தலைவர் அஷ்- ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனதுரையில் ஜம்இய்யாவூக்குட்பட்ட பலரையூம் நினைவூ கூர்ந்துஇ வருகை தந்துள்ள சகலரும் ஜம்இய்யாவின் பெறுமதியை நன்குணர்ந்து மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உலமாக்களின் புரிந்துணர்வூகள் மூலம் தான் சமூகத்துக்கு நல்ல பணியைச் செய்ய முடியூம் என்றும் கூறினார்.


அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்- ஷைக் எஸ்.எல் நவ்பர் நன்றியூரையினை வழங்கினார்.
தொடர்ந்தும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இப்பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட பின்வரும் ஏழு தீர்மானங்களும் அஷ்- ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் அவர்களால் வாசிக்கப்பட்டது.


1) எமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இன நல்லிணக்கத்துடன் வாழும் நிலையில்இ சில இனவாத சக்திகளின் செயற்பாடுகள் பொதுவாக நாடும் குறிப்பாக முஸ்லிம் சமூகமும் எதிர் கொள்ளும் மிக முக்கிய பிரச்சினையாக மாறியூள்ளன. பொதுவாக நாட்டில் வாழும் அனைத்து இனங்களினதும் குறிப்பாக முஸ்லிம்களினதும் உரிமைகளுக்கும் உணர்வூகளுக்கும் அரசும் அரச அதிகாரிகளும் மதிப்பளித்து இனவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆவன செய்யூமாறு இம்மாநாடு அரசை வேண்டிக்கொள்கிறது.

2) இந்நாட்டில் வாழும் சகல இனங்கள் மத்தியிலும் சகவாழ்வையூம் நல்லிணக்கத்தையூம் கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென இம்மாநாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது. அதேபோன்று எந்த ஒரு நிந்தனையான பேச்சையூம் அரசு அனுமதிக்கக் கூடாதெனவூம் அதனைத் தடுக்கும் வகையிலான சட்டங்களை அரசு அவசரமாக இயற்ற வேண்டும் எனவூம் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

3) நம்நாட்டில் சமூக நல்லிணக்கத்தையூம் சகவாழ்வையூம் கட்டியெழுப்பும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மேதகு ஜனாதிபதி அவர்கள் சமயங்களுக்கிடையிலான ஓர் உயர் ஆலோசனைச் சபையை நியமித்துள்ளதை இம்மாநாடு வரவேற்பதோடு சபையின் பணிகள் எல்லா வகையிலும் வெற்றிகரமாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கின்றது.

4) ஐ. எஸ் இயக்கம் இஸ்லாத்திற்கு முற்றிலும் விரோதமான இயக்கம் என்றும் அவ்வியக்கம் போன்றவற்றின் தீவிரவாத செயற்பாடுகள் அனைத்தையூம் இம்மாநாடு முற்றிலும் நிராகரிப்பதோடுஇ அவற்றின் செயற்பாடுகள் எவ்விதத்திலும் இஸ்லாமிய போதனைகளுக்கு உட்பட்டதல்ல என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. மேலும் உலக மட்டத்தில் இவ்வியக்கத்தையூம் அதன் செயற்பாடுகளையூம் அதன் ஆரம்ப காலத்திலேயே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டித்தது என்பதையூம் இம்மாநாடு இங்கு நினைவூபடுத்த விரும்புகின்றது.

5) சமூகத்தின் நலனையூம் அதன் ஸ்திரப்பாட்டையூம் கருத்திற் கொண்டு தஃவாப் பணியில் ஈடுபடும் ஆலிம்களும்இ ஏனைய தஃவாப் பணியாளர்களும் கருத்து வேற்றுமைகளைப் புறந்தள்ளிஇ பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் தஃவாப் பணியை முன்னெடுக்க வேண்டும் என்றும்இ எப்போதும் பிறர் இஸ்லாத்தை தவறாகப் புரிந்து கொள்ளாதிருக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவூம் இம்மாநாடு சகலரையூம் கேட்டுக் கொள்கிறது.

6) நீண்ட காலமாக அரச பாடசாலைகளில் அறபுஇ இஸ்லாம் பாடங்களைப் போதிக்க ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்படாதிருப்பது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் புதிதாக அறபுஇ இஸ்லாம் ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவசரமாக எடுக்குமாறும்இ அவ்வாறு சேர்த்துக் கொள்ளும் போது மத்ரசாக்களினால் வழங்கப்பட்ட மௌலவிஇ அஷ்-ஷைக் சான்றிதழை ஒரு முக்கிய தகைமையாகக் கொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்களையூம் கல்வி அமைச்சரையூம் கல்வி உயர் அதிகாரிகளையூம் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

7) கதீப்மார்கள் தமது குத்பாக்களை வினைத்திறன்மிக்கதாகவூம் சமூக நல்லிணக்கத்தைத் தூண்டும் வகையிலும் அமைத்துக் கொள்ள வேண்டுமெனவூம் உரிய நேரத்தில் குத்பாக்களை முடித்துக் கொள்ள வேண்டுமெனவூம் இம்மாநாடு அனைத்து கதீப்மார்களையூம் கேட்டுக் கொள்கிறது.
மேற்படி தீர்மானங்களை மக்கள் மயப்படுத்துவதிலும் உரியவர்களிடம் சென்றடையச் செய்வதிலும் ஜம்இய்யாவின் கிளைகள்இ ஆலிம்கள்இ மஸ்ஜித் நிர்வாகிகள்இ துறைசார்ந்தோர் போன்ற சகலரையூம் ஈடுபடுமாறு ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.
நாணூறு பேருக்கும் மேற்பட்ட பதவி தாங்குனர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வூ பிற்பகல் 2 மணியளவில் ழுஹர் தொழுகையூடனும் பகல் போசனத்துடனும் நிறைவூபெற்றது.

வஸ்ஸலாம்


அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

 

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

கதிரையில் அமர்ந்து தொழுவதன் சட்டங்கள்

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

இன்று பொதுவாக மஸ்ஜித்களில் கதிரைகளில் அமர்ந்து தொழுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதை பரவலாக அவதானிக்க முடிகிறது. அவர்களில் பலர் தகுந்த காரணமின்றியும் கதிரைகளில் உட்கார்ந்து தொழுகின்றனர். பொதுவாக பர்ளான தொழுகைகளில் நின்று தொழுவதும், ஸுஜூதில் நெற்றி, இரு முழங்கால்கள், இரு கைகள், மற்றும் இரு பாதங்கள் ஆகிய ஏழு உறுப்புக்களின் மீது ஸுஜூத் செய்வதும் அவசியமாகும். இவ்வேழு உறுப்புக்களில் சில உறுப்புக்களில் மாத்திரம் தான் ஸுஜூத் செய்ய முடியுமாக இருந்தால், இயலுமான உறுப்புக்கள் மீது ஸுஜூத் செய்வது கட்டாயமாகும்.

பர்ளான தொழுகைகளில் தன்னால் இயன்ற அளவு நின்று தொழுவதற்கு முயற்சித்தும் அது முடியாத நிலையில் மாத்திரமே உட்கார்ந்து தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. எனவே, அதுபற்றிய மார்க்க சட்டங்களை கதிரைப் பயன்பாட்டாளர்கள் விளங்கியிருப்பது அவசியமாகும். 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் கதிரைகள்  பயன்பாட்டிலிருந்தாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ அல்லது நபித் தோழர்களோ நின்று தொழ முடியாத சந்தர்ப்பங்களில் கதிரைகளைப் பயன்படுத்தியதாக வரலாறுகளில் காணப்படவில்லை. மாறாக, அவர்கள் தரையில் அமர்ந்தே தொழுதுள்ளார்கள். இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குதிரையில் சவாரி செய்யும் போது கீழே விழுந்ததனால் காலில் காயம் ஏற்பட்ட போது தரையில் அமர்ந்து தொழுதார்கள். 'சஹீஹுல் புகாரி – 689'எனவே, தொழுகைகளில் பொதுவாக கதிரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து தரையில் அமர்ந்து தொழுவதே மிகச் சிறந்த முறையாகும். அவ்வாறு கட்டாயம் பாவிக்க வேண்டும் என்றிருந்தால், சில சந்தர்ப்பங்களில் மாத்திரமே குறித்த நிபந்தனைகளுடன் தொழுகையில் கதிரைகளைப் பயன்படுத்த முடியும். இவற்றைக் கருத்திற்கொண்டு கதிரைகளில் அமர்ந்து தொழுவதற்கு அனுமதியுள்ள, அனுமதியில்லாத சந்தர்ப்பங்கள் பற்றி கீழே விளக்கப்படுகின்றன.  

  1. நிலையில் மாத்திரம் நிற்க முடியுமாக இருந்து, றுகூஉ மற்றும் ஸுஜூதை முறையாக நிறைவேற்றவும், தரையில் அமரவும் முடியாதவர்.

இத்தகையவர் நிலையில் நிற்பதுடன், றுகூஉ, மற்றும் ஸுஜூதை நிலையில் நின்றவாறு சமிக்ஞை மூலம் சற்று குனிந்து நிறைவேற்றுதல் வேண்டும். முடியுமாயின் ஸுஜூதுக்காக றுகூஉவை விட, சற்று அதிகமாகக் குனிவது அவசியமாகும்.

எனினும், நீண்ட நேரம் நிற்பது சிரமமாக இருப்பின், நிலை மற்றும் அத்தஹிய்யாத்துடைய சந்தர்ப்பத்தில் மாத்திரம் கதிரையில் அமர்ந்து தொழுவதற்கு அனுமதியுண்டு.  

  1. நிலையில் நிற்கவும் முறையாக றுகூஉ செய்யவும் முடியுமாக இருப்பவர். என்றாலும், ஸுஜூது செய்வதற்கும், தரையில் அமர்வதற்கும் முடியாதவர்.

இத்தகையவர், றுகூஉவுக்காக குனிவது போல், நின்ற நிலையில் ஸுஜூதை குனிந்து நிறைவேற்றுவதும், நின்ற நிலையிலேயே அத்தஹிய்யாத்தை ஓதுவதும் அவசியமாகும். நீண்ட நேரம் நிற்பது சிரமமாக இருப்பின், நிலை மற்றும் அத்தஹிய்யாத்துடைய சந்தர்ப்பத்தில் கதிரையைப் பயன்படுத்த அனுமதியுண்டு.  

  1. நிலையில் நிற்க முடியாமல் இருந்து, ஸுஜூதை முறையாக நிறைவேற்ற சக்தி பெற்றவர்.

இத்தகையவர் தரையில் தனக்கு வசதியான இருப்பில் அமர்ந்து தொழ வேண்டும். மேலும், நிலையில் ஓத வேண்டியவைகளை ஓதிய பின்பு, தனது தலையை ஸுஜூதில் வைக்கும் இடத்திற்கு நேராகக் கொண்டு வருவதன் மூலம் றுகூஉ செய்ய வேண்டும். இது உட்கார்ந்து தொழுபவருக்குரிய றுகூஉவாகும். உட்கார்ந்து றுகூஉவுக்காகக் குனியும்பொழுது ஸுஜூதில் தலை வைக்கும் இடத்துக்கு நேராகத் தலை வரும் அளவுக்குக் குனிவது பூர்த்தியான முறையாகும். குறைந்தது முழங்காலுக்கு நேராகத் தலை நேர்படும் அளவேனும் குனிவது கட்டாயமாகும்.

அதன் பிறகு வழமையான முறைப்படி ஸுஜூதை நிறைவேற்ற வேண்டும். எனினும், நீண்ட நேரம் தரையில் அமர முடியாவிடின் ஸுஜூதை முறையாக நிறைவேற்றியதன் பின், அத்தஹிய்யாத்துக்காக கதிரையில் அமரலாம்.

  1. நிலை றுகூஉ மற்றும், ஸுஜூத் ஆகிய அனைத்துக் கடமைகளையும் முறையாக நிறைவேற்ற முடியாதவர்.

இவர் தரையில் அமர்ந்து றுகூஉவையும் ஸுஜூதையும் உட்கார்ந்த நிலைமையிலே நிறைவேற்றுவார். என்றாலும், ஸுஜூதை, றுகூஉவை விட சற்றுத் தாழ்த்துவது ஏற்றமாகும். இவர், கதிரையில் உட்கார்ந்து மேற்கூறிய முறைப்படி நிறைவேற்றவும் அனுமதியுண்டு.

  1. நிலை, றுகூஉ, மற்றும் ஸுஜூது ஆகிய மூன்றையும் முறையாக நிறைவேற்ற முடியுமாக இருந்தும், நிலையில் இருந்து தரைக்கு வருவதற்கும், உட்கார்ந்ததன் பின் எழும்புவதற்கும் சிரமமாக இருக்கும் நிலையில் உள்ளவர்.

இவர் தரையில் அமர்ந்து தொழுவார். இவருக்கு நிலையில் நிற்பது கட்டாயமில்லை. ஏனெனில், நிலையில் நிற்பதை விட ஸுஜூதை முறையாக நிறைவேற்றுவது முக்கியமாகும். இத்தகையவர்கள் கதிரையில் அமர்ந்து தொழுவதற்கு அனுமதி இல்லை.  

குறிப்பு :  

  • முதலாவது அத்தஹிய்யாத் இருப்பு, கடைசி அத்தஹிய்யாத் இருப்பு, சம்மான் இருப்பு, இரு பாதங்களையும் நட்டி உட்காருதல் போன்ற எம்முறையிலும் தரையில் அமர்ந்து தனக்கு வசதியான முறையில் அமர்ந்துகொண்டு தொழலாம். 

 

  • கதிரைகளில் உட்கார்ந்து தொழுபவர்கள் ஸஃப்புகளுக்கு இடையூறு இல்லாத வகையில் கதிரைகளின் பின்கால்களை சப்புடைய கோட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், ஏனைய தொழுகையாளிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மஸ்ஜிதின் ஓரப்பகுதிகளில் கதிரைகளை வைத்துக்கொள்ளவது நல்லது.  

 

  • ஆலிம்கள் மேற்கூறப்பட்ட முறைகளை விளங்கி மஸ்ஜித்களில் இதற்காக பிரத்தியேக பிக்ஹ் வகுப்புக்களை நடாத்தி பொது மக்களுக்கு விளக்கப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்வதும் மிகவும் பொருத்தமாக இருக்கும். 

 

  • ஒவ்வொருவரும் தனக்குத் தேவையான நிலைமைகளை விளங்கி, முறையாகத் தொழுகைகளை நிறைவேற்றுவது, தொழுகைகள் ஏற்றுக்கொள்ளப்படக் காரணமாக அமையும்.

 

வஸ்ஸலாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு 

மஸ்ஜித்களில் நடைபெறும் தொழுகைகள் உபதேசங்கள் மற்றும் குத்பாக்கள் போன்றவற்றை பதிவு நாடா (video) மூலம் பதிவு செய்தல் மற்றும் புகைப்படம் எடுத்தல் சம்பந்தமாக.

மேற்படி விடயம் சம்பந்தமாக பத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

மஸ்ஜித் என்பது ஒரு புனிதமான இடமாகும். அது அல்லாஹ்வை ஞாபகம் செய்வதற்கும், அவனை வணங்குவதற்கும் உரிய இடமாகும். மஸ்ஜிதின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் பேணிப்பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.

வீடியோ எடுக்கும் விடயத்தில் தற்கால மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இவ்வாறு கருத்து வேறுபாடு நிலவுவதற்கான காரணம் உருவங்கள் வரைவது, காட்சிப்படுத்துவது, சேமித்து வைப்பது சம்பந்தமாக மார்க்கத்தில் விதிக்கப்பட்டுள்ள பொதுவான தடைகள் மற்றும் கடுமையான எச்சரிக்கைகள் என்பனவாகும்.

வீடியோ எடுப்பது கூடாது என்று கூறும் மார்க்க அறிஞர்கள், வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு அதனைத் திரையில் பார்க்கும் பொழுது, அது உருவமாகவே காட்சியளிக்கின்றது என்றும், வீடியோ எடுப்பது ஆகும் என்று கூறும் மார்க்க அறிஞர்கள், அது ஓரு நிலையற்ற அசையும் சலனப்படமாக இருப்பதால், இது உருவங்கள் பற்றி வந்துள்ள ஹதீஸ்களுக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது என்றும் கூறுகின்றனர்.

என்றாலும், நேரத்தை வீணாக்கும் பயனற்ற வீடியோக்கள் எடுப்பதும் மற்றும் ஆண் பெண் கலப்புள்ள வீடியோக்கள் எடுப்பதும் கூடாது என்று அனைத்து அறிஞர்களும் கூறுகின்றனர்.

மஸ்ஜித்களில் நடைபெறும் உபதேசங்கள், குத்பாக்கள் மற்றும் தொழுகைகள் போன்றவற்றை பதிவு நாடா கருவி மூலம் பதிவு (video) செய்வதாலும், அதைப் புகைப்படம் எடுப்பதாலும் மஸ்ஜித்களின் கண்ணியத்திற்கு பங்கம் ஏற்படக் காரணமாக அமைந்து விடும். மேலும், வீடியோ எடுக்கும் நிலை தொடருமாக இருந்தால் எதிர்காலத்தில் மஸ்ஜிதின் புனித்துவத்தை பாதுகாக்க முடியாமற் போகும்.

குறிப்பாக பிரபல்யமான காரிகளின் தொழுகைகளை பதிவு நாடா கருவிகளில் பதிவு (video) செய்வது தொழக்கூடியவர்களின் கவனத்தை தொழுகையை விட்டும் திசை திருப்பக் காரணமாக அமைந்து விடும்.

தொழும்பொழுது உள்ளச்சத்தை நீக்கக்கூடியவைகள் இருப்பதை மார்க்க அறிஞர்கள் வெறுத்துள்ளனர். இதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்: 

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலங்கார வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். (தொழுது முடிந்ததும்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதன் அலங்கார வேலைப்பாடுகள் எனது கவனத்தை ஈர்த்து விட்டன. எனவே இந்த ஆடையை (எனக்கு அன்பளித்த) அபூ ஜஹ்மிடம் கொடுத்து விட்டு (அவரிடமிருந்து மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள். (நூல் : ஸஹீஹு முஸ்லிம், ஹதீஸ் எண் - 556)

மேலும், பிரபல்யமான மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளும், காரிகளின் ஓதல்களும் ஒலி நாடா (audio) பதிவு நாடா (video) க்களில் பதிவு செய்யப்பட்டு இணைய வலைத்தளங்களிலும் இருவட்டுகளிலும் தாரளமாக கிடைக்கப்பெறுகின்றன. அவர்களின் உபதேசங்களையும் ஓதல்களையும் புதிதாக மஸ்ஜித்களில் பதிவு செய்து மக்கள் மயப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

எனவே, மஸ்ஜித்களில் நடைபெறும் பொது நிகழ்வுகளைப் பதிவு நாடாக் கருவி மூலம் பதிவு (video) செய்வதையும், அவற்றைப் புகைப்படம் எடுப்பதையும் தவிர்ந்து கொள்வது மஸ்ஜிதின் கண்ணியத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

என்றாலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக மஸ்ஜித்களில் பதிவு நாடாக் கருவி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தால் மட்டும் அதனைப் பதிவு செய்யலாம்.

அவ்வாறு மஸ்ஜிதில் நடைபெறும் சொற்பொழிவுகள், கிராஅத்கள் மூலம் ஏனைய மக்களும் பயன்பெறவேண்டும் எனக்கருதினால் ஒலி நாடா (audio)  வில் பதிவு செய்யலாம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு