23.08.2017 (30.11.1438)

வாக்காளர் பதிவில் கவனம் செலுத்துவோம்!

வாக்குரிமை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு பிரஜையினதும் உரிமையாகும். அதனை பெற்றுக்கொள்வதும், உரிய முறையில் பயன்படுத்துவதும் நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

இந்த விடயத்தில் நம்மில் சிலர் பொடுபோக்காகவும் கவனக்குறைவாகவும் நடந்து கொள்கின்றனர். அதன் காரணமாக உத்தியோகப் பூர்வமான சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு சிரமப்படுவது மட்டுமல்லாமல், அதற்காக அரச உத்தியோகத்தர்களை குறை கூறுவதையும் சில சமயங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்தல், காணி மற்றும் வீடு போன்றவற்றை பதிவுசெய்தல் போன்ற பல விடயங்களிலும் வாக்காளர் பதிவு அவசியப்படுகின்றது. எனவே இந்த விடயத்தில் நாம் கூடுதல் கரிசனையோடு நடந்து கொள்ள வேண்டும்.

தற்போது வாக்காளர் பதிவு விபரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது (http://www.slelections.gov.lk/web/index.php/en). இதில் தங்களது பெயர் இடம்பெறாதவர்களும் இதுவரை வாக்காளராக பதிவு செய்து கொள்ளாதவர்களும் அவசரமாக தமது பிரதேச கிராம உத்தியோகத்தர்களை அணுகி அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது. அத்துடன் கதீப்மார்கள் எதிர்வரும் குத்பாவில் இதனை நினைவுபடுத்துமாறும் ஜம்இய்யா கேட்டுக்கொள்கின்றது.
வஸ்ஸலாம்.


அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
கௌரவ பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா