உலக முஸ்லிம் லீக்கின் (World Muslim League) பொதுச் செயலாளருடனான ஜம்இய்யாவின் சந்திப்பு

கடந்த 2016.08.10 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் உலக முஸ்லிம் லீக்கின் (World Muslim League) பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் அப்துல்லாஹ் முஹ்ஸின் அத்-துர்க்கி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைக் காரியாலயத்துக்கு வருகை தந்தார்.

இவ்வருகையின் போது இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் ஜம்இய்யாவின் கௌரவ தலைவரினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதில் அவர் இந்நாட்டில் சகவாழ்வை கட்டியெமுப்ப ஜம்இய்யா நடைமுறைப்படுத்தும் செயற்திட்டங்கள் தொடர்பில் விளக்கினார். அத்துடன் ஜம்இய்யாவின் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான விளக்கமும் அளிக்கப்பட்டது. பின்னர் உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் அவர்கள் தமது உரையை நிகழ்த்தினார்கள். அதில் அவர் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் தெளிவுபடுத்தினார். இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் தலைவரினால் உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளருக்கு நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.

இறுதியாக அஷ்-ஷைக் ஐ.எல்.எம் ஹாஷிம் அவர்கள் நன்றியுறை நிகழ்த்தினார்கள். மேற்படி நிகழ்வில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஜம்இய்யாவின் அலுவலகப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.