அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குச்சவெளி கிளையின் அலுவலக திறப்பு விழா

அக் 01, 2018


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குச்சவெளி கிளையின் அலுவலக திறப்பு விழா அல்லாஹ்வின் உதவியால் 2018.09.29 அன்று மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. குச்சவெளி பிரதேச ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷெய்ஹ் IS அ.அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட கிளை ஜம்இய்யாவின் தலைவருமான கலாநிதி அஷ்ஷெய்ஹ் AR நஸார் பலாஹி அவர்களும், கௌரவ அதிதிகளாக பிரதேச சபையின் உப தவிசாளரும் இக்கட்டிடத்தை  வழங்கி உதவி செய்த அல் ஹாஜ் ஜே. அன்சார் JP அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக உலமாக்களும், மஸ்ஜித் நிருவாகிகளும் கலந்துகொண்டார்கள். சிறப்பான இந் நிகழ்வில் பிரதேச மூத்த உலமாக்களை நன்றியுடன் கௌரவித்து நினைவுச் சின்னங்கள் வழங்கியதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018 04:47

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.