Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்

அக் 23, 2018

21.10.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் மாவட்ட  காரியாலயத்தில்  தலைவர் அஷ்-ஷைக் நஸார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பின்வரும் விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

  • அக்குரனை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
  • முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
  • திருகோணமலை மாவட்டத்தை மையப்படுத்தி NNP - தேசிய வலையமைப்புத் திட்டத்தின் நிகழ்ச்சியை நடாத்த திட்டமிடப்பட்டது.
  • தமது மாவட்டத்தில் உள்ள அரபுக் கல்லூரி விடுகை வருட மாணவர்களுக்கான வழி காட்டல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
  • தமது மாவட்டத்தை சோர்ந்த முக்கிய பிரமுவர்களை KOL சந்தித்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக கல்ந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onசெவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018 04:46