அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை, கந்தளாய் ஆகிய கிளைகள் இணைந்து ஏற்பாடு செய்த பள்ளிவாசல் நிருவாகிகளுக்கான கருத்தரங்கு ஒன்று 2018.08.06 அன்று  இடம் பெற்றது. இந்நிகழ்வில் மஸ்ஜித் நிருவாகிகளின் கடமைகள் என்ன எனும் தலைப்பிலும், வக்ப் சொத்துக்களை எவ்வாறு பாதுகாப்பது எனும் தலைப்பிலும் கலந்துரையாடப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் ரிதிகம பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வொன்று பானகமுவ முஹியித்தீன் ஜும்மா மஸ்ஜிதில் 2018.08.05 அன்று  இடம்பெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் திவுரும்பொல, எதுன்கஹகொட்டுவ பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வொன்று திவுரும்பொல ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக்கல்லூரியின் மண்டபத்தில் 2018.08.05 அன்று  இடம்பெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரத்தினபுரி மாவட்டக் கிளையின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் இரத்தினபுரி கிளை உலமாக்களுடனான ஒன்று கூடல் ஒன்று 2018.08.05 ஆம் திகதியன்று இரத்தினபுரி கொடிகமுவ ஐனுஷ் ஷரபா மகளிர் அரபிக் கல்லூரியில் மாவட்டத் தலைவர் அஷ்-ஷைக் ராமிஸ் ரஸீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூக நலன் கருதி பல முக்கிய விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் பிறை சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வொன்று பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரியில் மாவட்டக் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் எஸ்.எச் ஆதம்பாவா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  களுத்துறை மாவட்டக் கிளையின்   ஏற்பாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான விளக்க மகாநாடு 04.08.2018 ஆம் திகதி  சனிக்கிழமை பாணந்துறை உம்முல் மலீஹா ஞாபகர்த்த மண்டபத்தில் மாலை 4 மணி முதல் நடை பெற்றது. இ்ந்நிகழ்வில் 250 இற்கும் மேற்பட்டவர்கள்   கலந்து சிறப்பித்தனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி சிட்டி கிளையின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் ஜம்இய்யாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான குழுவினால் நடாத்தப்பட்டு வரும் தற்காலப் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும் எனும் தொனிப்பொருளிலான  நிகழ்வு 2018.08.04 அன்று மஹிய்யாவ ஜாமிஉல் ஹைராத் ஜும்மா மஸ்ஜிதில் இடம் பெற்றது.

 

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்ட  பிராந்திய கிளைகளின்  புதிய நிர்வாகத் தெரிவு 04/08/2018 ஆம் திகதி சனிக்கிழமை  வரகாபொலை, தள்துவ, கிரிங்கதெனிய  ஆகிய இடங்களில்  இடம்பெற்றது. மஃரிப் தொழுகையை தொடர்ந்து கேகாலை மாவட்டத்திற்கான நிருவாகத் தெரிவும் இடம் பெற்றது. இத்தெரிவில் தலைவராக அஷ் ஷேக் அக்ரம் ஜூனைத் அவர்களும், செயலாளராக அஷ் ஷேக் நாழிம் அவர்களும், பொருளாளராக அஷ் ஷேக் இக்பால் அவர்களும்,  உப தலைவர்களாக அஷ் ஷேக் ஹுசைன், அஷ் ஷேக் அன்பfஸ் ஆகியோரும்,  உப செயலாளராக அஷ் ஷேக் ஹஸன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 


06.08.2018 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைப்பெற்று வருகின்றது. பரீட்சை எழுதுகின்ற அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு சிறப்பாக முகம் கொடுத்து சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கும், நாட்டின் தலை சிறந்த கல்வி மான்களாகத் திகழ்வதற்கும் ஜம்இய்யா பிராத்திக்கின்றது.


நமது மாணவர்கள் பரீட்சை எழுதும் இத்தருணத்தில் வெள்ளிக் கிழமை குத்பா பிரசங்கத்தை சுருக்கி 1:00 மணியுடன் முடித்துக் கொள்ளுமாறு கதீப்மார்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.


குத்பாக்கள் நீண்டு விடுவதனால் பரீட்சை எழுதும் மாணவர்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றார்கள். பரீட்சை எழுதும் நிலையங்களுக்கும் பள்ளிவாயல்களுக்கும் நீண்ட தூரம் உள்ள இடங்களில் பரீட்சை எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்ததாக கடந்த காலங்களில் முறைப்பாடுகள் வந்தன. எனவே பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன் கருதி கதீப்மார்கள் தம் குத்பா பிரசங்கங்களை இயன்றளவு சுருக்கிக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப் படுகின்றீர்கள்.
வஸ்ஸலாம்

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டக் கிளையின்  ஏற்பாட்டில் " Education For All" எனும் கருப்பொருளில் களுத்துறை மாவட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர், உப அதிபர்களுக்கான ஒன்று கூடல் ஒன்று 2018.08.02 அன்று பேருவளை ஜாமியா நளீமிய்யா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா