ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் முஜீபுர் ரஹ்மான் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு இன்று (2018.07.30 )வருகை தந்தார். அகில இலங்கை ஜம்இய்யாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி ரிஸ்வி, உப செயலாளர் அஷ்-ஷைக் முர்ஷித் முழப்பர் உற்பட இன்னும் பல உலமாக்களுடன் முஸ்லீம்களின் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன் போது முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பான தெளிவுகளை கேட்டறிந்த முஜீபுர் ரஹ்மான் அவர்களுக்கு பூரண தெளிவுகள் வழங்கப்பட்டதுடன், முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத் திருத்தக் குழுவிற்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சமர்ப்பித்த ஆலோசனைகள் உள்ளடங்கிய அறிக்கையின் பிரதி ஒன்றும் கையளிக்கப்பட்டது.

 

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் குருநாகல் சிட்டி கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா தொடர்பான வழிகாட்டல் நிகழ்வொன்று 2018.07.27 அன்று மல்வபிட்டிய ஜும்மா மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மாத்தளை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் ஜம்இய்யாவின் காரியாலயத்தில் 2018.08.01 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முஸ்லிம் தனியார் விவாக விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை மக்களுக்கு வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 


இன்று காலை முன்னால் நீதியமைச்சர் மிலிந்த மொரகொட அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்து உலமா சபையின் தலைவர், செயலாளர் உற்பட மற்றும் பல உலமாக்களையும் சந்தித்தார். அவ்வமையம் “புதியதோர் தலைமுறைக்கான நவீன சிந்தனை” என்ற நிகழ்சி நிரல் தொடர்பான தகவல்களை கையளித்தார். அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போது தாம் நீதியமைச்சராக இருந்த சமயம் மேற் கொண்ட நற்காரியமாக முஸ்லிம் விவாக, விவாக ரத்து சட்ட மீள் பரிசோதனைக்காக குழுவொன்றை நியமிக்க கிடைத்ததை நினைவு கூர்ந்தார். தம் பதவி காலத்தில் பல குழுக்களை நியமித்த போதும் முஸ்லிம் விவாக, விவாக ரத்திற்கான குழுவை நியமிப்பதில் எனக்குத் தேவையான வழிகாட்டல்களை சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களே வழங்கினார்கள். அன்னாரை அக்குழுவின் தலைவராக இருந்து செயற்படுமாறு தான் வேண்டிக் கொண்ட போதிலும் பாயிஸ் முஸ்தபா அவர்கள் பெருந்தன்மையோடு நீதியரசர் சலீம் மர்சூப் அவர்களை சிபாரிசு செய்தார்கள்.


முஸ்லிம் விவாக விவாக ரத்து சட்டம் என்பது முஸ்லிம்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று மாத்திரமல்லாமல் அதில் மாற்றங்கள் தேவையென்று நீண்ட காலமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனடிப்படையிலே உலமா சபைத் தலைவர் முப்தி ரிஸ்வி அதன் செயலாளர் அஷ்-ஷைக் முபாறக் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை நான் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் முஸ்லிம்களின் சன்மார்க்க விடயங்களை ஆராய்ந்து தீர்வு காணும் அறிவும், திறமையும் சன்மார்க்க அறிஞர்களுக்கே உள்ளது. ஆகையால் அவர்களது கருத்துக்களை உள்ளடக்கிய அறிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென நான் நீதியமைச்சருக்கு சிபாரிசு செய்கின்றேன். எனது முயற்சி முஸ்லிம் சமூகத்திற்கு பயனுள்ளதாக அமைய வேண்டுமென எதிர்பார்க்கின்றேன் என்று கூறினார்.


முன்னால் நீதியமைச்சராக இருந்த போதிலும் தற்சமயம் இந்நாட்டின் சாதாரண பிறஜை என்ற வகையில் சன்மார்க்க அறிஞர்கள் சமர்ப்பித்த அறிக்கை கவனத்தில் கொள்ளப்படும் என நம்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார். இறுதியில் உலமா சபைக்கு வருகை தந்த திரு. மிலிந்த மொரகொட அவர்களுக்கு தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில்  சமகால பிரச்சினைகளுக்கான தீர்வு எனும் தொனிப் பொருளிலான நிகழ்வு ஒன்று  2018.07.21 அன்று நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 350 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மடிகேமிதியால  கிளையின் ஏற்பாட்டில்  பண்டாரகொஸ்வத்த, ஹிப்பம்பொல மத்ரஸாவில் கல்வி பயிலும் A/L மாணவர்களுக்கு  கருத்தரங்கு ஒன்று 2018.07.16 அன்று  நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் 35 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொலன்னறுவை மாவட்டத்தின் பிராந்திய கிளைகளுடனான சந்திப்பு ஒன்று 2018.07.17அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது மூன்று மாத காலத்திற்காக பின்வரும் விடயங்கள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
1. பாடசாலை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்குமான போதை வஸ்துப் பாவனை சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்வொன்றை எதிர்வரும் ளுநுPவுநுஆடீநுசுஇழுஊவுழுடீநுசு மாதங்களில் ஏற்பாடு செய்தல்
2. கிளைகளினூடாக உழ்ஹிய்யா கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தல்.
3. அங்கத்துவ பட்டியலை புதுப்பித்தலுக்கு உதவியாக இருத்தலும், அங்கத்துவத்தை அதிகரித்தலும்.
4. மாவட்டத்துக்கென ஒர் காரியலயம் நிருவுதல்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளை நடாத்திவரும் "ஈமானிய வசந்தம்" கிராமிய தஃவா நிகழ்வின் மூன்றாவது தொடர் குறிஞ்சாகேணி பிரதேசத்தில் நடத்தப்பட்டது. இந் நிகழ்வில் பின்வரும் நிகழ்வுகள் இடம் பெற்றது.
1. பிரதேசத்தில் உள்ள பள்ளிகளின் நிர்வாகிகள், கிராம உத்தியோத்தர், அரச அரசசார்பற்ற திணைக்கள பிரதிநிதிகள், இளைஞர் அமைப்புகள், விளையாட்டு கழகங்கள் ஆகியோர்களுடனான கலந்துரையாடல்.
2. பிரதேசத்தில் உள்ள மூன்று பாடசாலைகளிலும் ஒரே தலைப்பில் காலை நிகழ்ச்சிகள்.
3. குத்பா உரை.
4. பெண்களுக்கான பிரத்தியேக மூன்று நிகழ்ச்சிகள்.
5. ஆண்களுக்கான திறந்தவெளி உரைகள் இரண்டு.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் ஜம்இய்யாவின் காரியாலயத்தில் 2018.07.14 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் மக்களுக்கு உழ்ஹிய்யா சம்பந்தமான வழிகாட்டல்கள் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டதுடன் கண்டி சிடி பகுதியில் உழ்ஹிய்யா நிறைவேற்றுவது சம்பந்தமான விஷேட கலந்துரையாடலொன்றை கண்டி நகர மஸ்ஜித்  நிர்வாகிகளுடன் நடாத்தவும்  முடிவு செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஊஊஊ யின் தேசிய வலயமைப்புத் திட்டம் சம்பந்தமான அறிமுக நிகழ்வும் நடைபெற்றது .

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சென்றல் காம்ப் சவுலக்கடை கிளையின் மதாந்த ஒன்று கூடல் 2018.07.08 அன்று ஸபூரிய்யா ஜும்மா மஸ்ஜிதில் இடம் பெற்றது. அதில் சமூக நலன் கருதி பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா