70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளை, கிண்ணியா ஷூறா சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் நிகழ்வொன்று வெகு விமர்சையாக கிண்ணியா நூலகத்திற்கு அருகில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,வலயக்கல்விப்பணிப்பாளர்,வைத்திய சாலையின் அத்தியற்சகர்,மின்சார சபை பொறியியலாளர் உள்ளிட்ட பிரதேச திணைக்கள தலைவர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மத்ரசா மாணவர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அஷ்ஷைக் கரீம் ஹஸரத் அவர்களது விஷேட உரை ஒன்றும் இடம்பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யதுல்  உலமா

 

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தர்கா நகர் கிளையின் தேர்தல் வழிகாட்டல் நிகழ்சி

06.02.2018 ஆம் திகதி அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தர்கா நகர்  கிளையின் ஏற்பாட்டில் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று தர்கா நகர் தெருவுப் பள்ளி வாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அபேட்சகர்கள் பலரும்   கலந்து கொண்டார்கள்.

ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுதாபச் செய்தி


பெல்லங்வில ரஜமகாவிகாரையின் விகராதிபதியும் ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் உப பீடாதிபதியுமான பேராசிரியர் பெல்லங்வில விமல ரத்ன தேரர் அவர்களின் மரணத்தால் கவலையடையும் பௌத்த மதகுருமார்கள், ஏனைய பௌத்த சகோதரர்கள் உட்பட அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாமா இந்நாட்டு முஸ்லிம்கள் சார்பாக அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது.


நீதியும், ஒழுக்கமும் நிறைந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதில் தன்னை அர்பணித்த இவர்களின் மரணம் இந்நாட்டிற்கு ஒரு இழப்பாகும். மதங்களுக்கு மத்தியில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்காக இவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குறியவையாகும்.


அவர் சகவாழ்வை கட்டியெழுப்ப எடுத்த முயற்சிகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து இந்த நாட்டில் இனங்களுக்கு மத்தியில் நல்லுறவை வளர்ப்பது நாம் அவருக்கு செய்யும் கைமாராக அமையும். ஏனவே நாம் அவற்றை தொடர்ந்தும் முன்னெடுக்க முன்வர வேண்டும்.

 


அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்

செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டம் கொழும்பு கிழக்குக் கிளையின் ஏற்பாட்டில்  ஜனாஸாவின் மார்க்க சட்டதிட்டங்கள் விளக்கம் மற்றும் செயல்முறை நிகழ்ச்சி  2018-02-03 ஆம் திகதி சனிக்கிமை மாலை 06.30 மணி முதல் வெள்ளம்பிடிய ஸாரஸ் கார்டன் ஜூமுஆப் பள்ளிவாயலில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் சுமார் 400 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்டம் சவளக்கடை கிளையின் ஒன்றுகூடல்  2018-02-03 ஆம் திகதி சனிக்கிழமை  நடைபெற்றது .கிளையைச் சேர்ந்த  உறுப்பினர்கள் கலந்து கொண்ட மேற்படிஒன்றுகூடலில் அரபுக்கல்லூரிகளில் இருந்து வெளியாகிய உலமாக்களை கொரவிக்க ஆலோசனை செய்யப்பட்டதுடன், மாதாந்த தர்பியா வகுப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

 

ஊடகப்பிரவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்ட அரபுக்கல்லூரி இறுதி வகுப்பு மாணவர்களுக்கு வருடாந்தம் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வரும் ஹிக்மா கருத்தரங்கு நிகழ்வில் இவ்வாரம் “அறபு மொழியின் முக்கியத்துவம்” எனும் தலைப்பில் 03.02.2018 ஆம் திகதி   கருத்தரங்கு ஒன்று அஷ்-ஷைக் ஹலீமுல்லா அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இக்கருத்தரங்கில் 80 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

ஊடகபிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

ACJU/NGS/02-18/001

02.02.2018

 

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி

எமது தாய் நாடான இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளை கழித்துக் கொண்டிருக்கின்றது. அந்த சுதந்திரத்தை பெற்றெடுக்க இந்நாட்டு மக்கள் அனைவரும் சாதி, சமய வேறுபாடின்றி உழைத்தனர் என்பது உண்மையாகும். எல்லாத் துறைகளிலும் இந்த நாடு முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காக எல்லோரும் உழைத்தனர் என்பதும் வரலாறாகும்.

எதிர்பாரா விதமாக நாட்டில் தோன்றிய யுத்த, அசாதாரண நிலமைகள் சுதந்திரத்தை இழந்த உணர்வை தந்த போதிலும் தற்பேது அவையெல்லாம் நீங்கி சமாதானமும், சகவாழ்வும், செழிப்பும் மலர்ந்து கொண்டிருக்கின்றது. இதனை மென் மேலும் வளரச் செய்து புரிந்துணர்வோடு வாழ்வதன் மூலமே நிம்மதியும், அமைதியுமுள்ள நாடாக நம் நாட்டை வைத்துக் கொள்ள முடியும்.

பௌத்தர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்த்தவர்கள் என பல்லின மக்கள் வாழுகின்ற இந்நாடு செழிப்புடனும் அபிவிருத்தியுடனும் தொடர்ந்தும் முன்னேற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும், பிரார்த்தனைகளுமாகும்.

எனவே இந்நாட்டில் ஒற்றுமை, சமாதானம், சகிப்புத் தன்மை என்பவற்றை கட்டியெழுப்பி பரஸ்பர விட்டுக் கொடுப்பு, நம்பிக்கை என்பன மூலம் ஒரு தாய் மக்களென சகலரும் வாழ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நல்லாசி கூறுகிறது.

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டம் கொழும்பு கிழக்குக் கிளையின் ஒன்றுகூடல்  2018-01-31 ஆம் திகதி புதன்கிழமை காலை 06.30 மணிக்கு வடுகொடவத்தை, மீதோடமுல்லை ஜூமுஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது .கிளையைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் கலந்து கொண்ட மேற்படிஒன்றுகூடலில் 2018 ஆம் ஆண்டின் செயற்திட்டங்கள் பற்றி மிக விரிவாக கலந்துறையாடப்பட்டு இவ்வருடத்திற்குரிய நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது.

இதனடிப்படையில் வருகின்ற பெப்ரவரி மாதம் பின்வரும் நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டடுள்ளது.


*2018-18-02 ஆம் திகதி வாழிபர்களுக்கான போதைவஸ்து விழிப்புணர்வு நிகழ்ச்சி


*2018-02-21 ஆம் திகதி பள்ளிவாயல் இமாம்களுக்கு பிக்ஹ் கலந்துறையாடல் நிகழ்ச்சி


*2018-02-25 ஆம் திகதி பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் துறைசார்ந்தவர்களுக்கு காதியானிகள் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு வழிகாட்டல் நிகழ்ச்சி

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் மதவாக்குளம் கிளையின் ஒன்றுகூடல் ஒன்று 2018-01-27 ஆம் திகதி சனிக்கிழமை இரவு இஷாத் தொழுகையின் பிறகு மதவாக்குளம் கிளையின் காரியாலயத்தில் தலைவர் அஷ்-ஷேக் றனீஸ் அப்துல் மஜீத்(ரவாஹி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

கிளையைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் கலந்து கொண்ட மேற்படிஒன்றுகூடலில் 2018 ஆம் ஆண்டின் செயற்திட்டங்கள் பற்றி உப குழுக்களின் செயலாளர்கள் தமது ஆலோசனைகளை முன்வைத்ததுடன் முக்கியமாக சில  பொறுப்புகள் உலமாக்களுக்கு  வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் வருகின்ற 2018-02-02 ஆம் திகதி பாடசாலை மாணவிகளுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியும், 2018-02-09 ஆம் திகதி மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியும்  நடத்தவுள்ளதுடன் இம் மாத இறுதியில் பொதுமக்களை உள்ளடக்கிய வகையில் விழிப்புணர்வு மாநாடு ஒன்றை நடத்தவும் ஆலோசனை செய்யப்பட்டது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்களாக பணி புரியும் எமது  பிரதேசத்தைச் சேர்ந்த  சகோதர்கள் மற்றும் வெளிநாட்டு தொடர்புடன் வந்து போகும் தொழிலாளர்கள் விடயமாக அஷ்-ஷேக் பாரிஸ்(பக்ரி) அவர்களுக்கு தரவுகளை பெறுமாறு பொறுப்பு போடப்பட்டதுடன், பிறை கலண்டர்களை ஒவ்வொரு பள்ளிவாயல்களுக்கு அனுப்பி வைப்பதற்காகவும், ஹலால் பற்றிய விழிப்புணர்வை வழங்குவதற்காகவும்  அஷ்-ஷேக் சியாம்(ரவாஹி) அவர்கள் நியமிக்கப் பட்டார்கள்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் 28.01.2018  ஆம் திகதி அன்று  இரவு நேரத்தில் இடம்பெறும் பெண்களுக்கான மற்றும் சிறுவர்களுக்கான பாடங்களை தடைசெய்தல் சம்பந்தமாக ஊரின் மிகப்பிரதானமான சபைகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடனான இறுதி கட்ட முடிவெடுக்கும் கூட்டம் ஒன்று இடம் பெற்றது.

இதன்போது பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.


1.பெண்களுக்கான மற்றும் சிறுவர்களுக்கான இரவு நேர பாடங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் அனைத்து நிறுவனங்களும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளன.

2.மாலை 6.00மணிக்கு பின்னரும் காலை 7.00 மணிக்கு முன்னரும் ஊரில் பெண்களுக்கான சிறுவர்களுக்கான பாடங்களை தடைசெய்தல்

3. அடுத்த மாத ஜூம்ஆக்களில் இது தொடர்பான விழிப்புணர்வு குத்பா பிரசங்கம் செய்தல்

4. தேர்தல் முடிவடைந்த பின்னர் உடனடியாக இரவு நேர வகுப்பு நடாத்தும் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு தடைசெய்தல் சம்பந்தமாக கூறி அதன் பின்னர் ஊர் பூராக அறிவித்தல் கொடுக்கப்படும்.

 

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா