2019.01.15 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் மாளிகாவத்தை தாருல் ஹஸன் பெண்கள் அரபுக் கல்லூரி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

  • சமூக சேவை பிரிவால் முன்னெடுக்கப்படும் வறிய மாணவர்களுக்கான அறபுக் கிதாபுகள் வழங்கிவைத்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குதல்பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் கொழும்பு மாவட்ட நான்கு கிளைகளிலும் சமூக ஒற்றுமை புத்தகத்தை மக்கள் மயப்படுத்தல் நிகழ்ச்சிகளை நடாத்ததுதல்.
  • தேசிய வலயமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தல்.
  • மோல வத்தையில் சமூக சேவை பிரிவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
  • யாப்பு திருத்த பிரேரனைகளை தலைமையக்திற்கு அனுப்பி வைத்தல்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்ட அரபுக்கல்லூரி இறுதி வகுப்பு மாணவர்களுக்கு வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் ஹிக்மா கருத்தரங்கு “மகாஸிதுஷ் ஷரீஆ” எனும் தலைப்பில் 17.02.2018 ஆம் திகதி நடைபெற்றது. இக்கருத்தரங்கின் வளவாளராக அஷ்-ஷைக் ஷராப் அவர்கள் கலந்து கொண்டதோடு 80 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டம் கொழும்பு கிழக்குக் கிளையின் ஏற்பாட்டில்  ஜனாஸாவின் மார்க்க சட்டதிட்டங்கள் விளக்கம் மற்றும் செயல்முறை நிகழ்ச்சி  2018-02-03 ஆம் திகதி சனிக்கிமை மாலை 06.30 மணி முதல் வெள்ளம்பிடிய ஸாரஸ் கார்டன் ஜூமுஆப் பள்ளிவாயலில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் சுமார் 400 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்ட அரபுக்கல்லூரி இறுதி வகுப்பு மாணவர்களுக்கு வருடாந்தம் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வரும் ஹிக்மா கருத்தரங்கு நிகழ்வில் இவ்வாரம் “அறபு மொழியின் முக்கியத்துவம்” எனும் தலைப்பில் 03.02.2018 ஆம் திகதி   கருத்தரங்கு ஒன்று அஷ்-ஷைக் ஹலீமுல்லா அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இக்கருத்தரங்கில் 80 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

ஊடகபிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா