2018.12.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் பிராந்திய  மக்தப் முஅல்லிம்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. இதன் போது 2019 ஆம் ஆண்டிற்கான திட்டமிடல் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

18.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப்  பிரிவினால் நாடலாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்தப் பாடத்திட்டத்தின் எதுன்கஹகொட்டுவ  மக்தபுஸ் ஸலாம் மக்தபின் 3 ஆவது ஆண்டு நிறைவு விழா எதுன்கஹகொட்டுவ மஸ்ஜிதுஸ் ஸலாமில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எதுன்கஹகொட்டுவ பிராந்திய கிளையின் உறுப்பினர்கள், பெற்றார்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப் பிரிவினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் மக்தப் பாடத்திட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு 17.11.2018 அன்று பண்டாரவளை ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் மக்தப் முஅல்லிம்கள், முஅல்லிமாக்கள், மக்தப் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி வாசல் நிருவாகிகள் மற்றும் நலன்விரும்பிகள் என சுமார் 530 பேர் கலந்து சிறப்பித்தனர். 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

10.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப்  பிரிவினால் நாடலாவிய ரீதியில் முன்னோடுக்கப்பட்டு வரும் மக்தப் பாடத்திட்டத்தின் திருகோணமலை  நூறுல் ஹிதாயா மக்தபின் 5 ஆவது ஆண்டு நிறைவு விழா திருகோணமலை விக்ணேஸ்வரா மஹா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா