புத்த சாசனா, கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் கௌரவ பந்துல ஹரிச்சந்திர அவர்கள் 19.12.2019 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார். இதன் போது முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும், சமூக சார் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
17.12.2019-19.04.1441
நாட்டில் காணப்படும் வெற்றுச் சுவர்களை அலங்கரிக்கும் திட்டத்தை ஜம்இய்யா வரவேற்கின்றது
நாட்டின் ஜனாதிபதி உட்பட பலரின் பாராட்டுக்களுக்கு மத்தியில் நாட்டில் ஆங்கங்கே காணப்படும் வெற்றுச் சுவர்களை அலங்கரிக்கும் பணிகளை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், சிவில் அமைப்புக்கள் உட்பட தனி நபர்களும் ஒன்றிணைந்து திட்டமிட்ட அடிப்படையில் சித்திரங்களை வரைந்து மெருகூட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான செயற்திட்டங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வரவேற்கின்றது.
இச்சித்திர வேலைப்பாடுகள் நாட்டின் அபிவிருத்தி, நன்னடத்தைக்கான வழிகாட்டல், போன்ற விடயங்களை உள்ளடக்கும் வண்ணம் அமைவதே இன்றைய தேவையாகும். நம் நாட்டு ஓவியர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்துவதில் சகல இன மக்களும் விஷேடமாக அனைத்து வாலிபர்களும் ஒத்துழைப்பதன் மூலம் நம் நாட்டில் ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை கண்டு கொள்ள முடியும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
முஸ்லிம்கள் தத்தம் பிரதேசங்களில் உள்ள வெற்றுச் சுவர்களை அடையாளப்படுத்தி இஸ்லாமிய வரயறைகளைப் பேணி நடந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.
இந்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு திட்டமிட்டு ஜம்இய்யாவின் கிளைகளும், மஸ்ஜித் நிருவாகமும், ஊர் தலைவர்களும் கரிசனை செலுத்துமாறு ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் எதிர்வரும் மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவு 2019-12-01ஆம் திகதி புத்தளம் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட பதிய நிருவாக உறுப்பினர்கள்
1) தலைவர்
அஷ்-ஷேக் அப்துள்ளாஹ்
2) செயலாளர்
அஷ்-ஷேக் அப்துர்ரஷீத்
3) பொருளாளர்
அஷ்-ஷேக் பைஸல் முனீர்
4) உப தலைவர்கள்
1- அஷ்-ஷேக் தமீம்
2- அஷ்-ஷேக் சியாம்
5) உப செயலாளர்
அஷ்-ஷேக் மிஹ்ழார்
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கிளையின் எதிர்வரும் மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவு 2019-12-01ஆம் திகதி கண்டல்குடா ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட பதிய நிருவாக உறுப்பினர்கள்
1) தலைவர்
அஷ்-ஷேக் ஜமீல்கான்
2) செயலாளர்
அஷ்-ஷேக் முபாஸில்
3) பொருளாளர்
அஷ்-ஷேக் ஹபீப் ரஹ்மான்
4) உப தலைவர்கள்
1- அஷ்-ஷேக் அப்துல் ரஷீத்
2- அஷ்-ஷேக் இபாதுல்லாஹ்
5) உப செயலாளர்
அஷ்-ஷேக் பஸீல்
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் புத்தளம் கிளையின் எதிர்வரும் மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவு 2019-12-01ஆம் திகதி புத்தளம் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட பதிய நிருவாக உறுப்பினர்கள்
1) தலைவர்
அஷ்-ஷேக் ரியாஸ்
2) செயலாளர்
அஷ்-ஷேக் பைஸுர்ரஹ்மான்
3) பொருளாளர்
அஷ்-ஷேக் முஹ்ஸின்
4) உப தலைவர்கள்
1- அஷ்-ஷேக் அப்துல் கஹ்ஹார்
2- அஷ்-ஷேக் மின்ஹாஜ்
5) உப செயலாளர்
அஷ்-ஷேக் அப்துல் ஹமீத்
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் கொட்டராமுல்ல கிளையின் எதிர்வரும் மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவு 2019-11-30 ஆம் திகதி கொட்டராமுல்ல ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட பதிய நிருவாக உறுப்பினர்கள்
1) தலைவர்
அஷ்-ஷேக் சியாம்
2) செயலாளர்
அஷ்-ஷேக் ரிஸ்மி
3) பொருளாளர்
அஷ்-ஷேக் அம்ஜத்
4) உப தலைவர்கள்
1- அஷ்-ஷேக் சல்மான் நவவி
2- அஷ்-ஷேக் நஸுறுத்தீன்
5) உப செயலாளர்
அஷ்-ஷேக் ஷபீக்
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் மதவாக்குளம் கிளையின் எதிர்வரும் மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவு 2019-11-30 ஆம் திகதி மதவாக்குளம் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட பதிய நிருவாக உறுப்பினர்கள்
1) தலைவர்
அஷ்-ஷேக் றிஸ்வி ஷரபி
2) செயலாளர்
அஷ்-ஷேக் பௌசுல் அமீர் முஅய்யிதீ
3) பொருளாளர்
அஷ்-ஷேக் பாரிஸ் பக்ரி
4) உப தலைவர்கள்
1- அஷ்-ஷேக் சனூஸ் மனாரி
2- அஷ்-ஷேக் நஸீம் ஷரபி
5) உப செயலாளர்
அஷ்-ஷேக் சியாம் ரவாஹி
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
29.11.2019 / 01.04.1441
பரீட்சைக் காலத்தில் குத்பாக்களை சுருக்கிக் கொள்ளுங்கள்
02.12.2019 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகின்றது. பரீட்சைக்கு தேற்றுகின்ற அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு சிறப்பாக முகம் கொடுத்து சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கும், நாட்டின் தலை சிறந்த கல்விமான்களாக உருவாவதற்கும் ஜம்இய்யா பிரார்த்திக்கின்றது.
நமது மாணவர்கள் பரீட்சையில் ஈடுபடும் இத்தருணத்தில் வெள்ளிக் கிழமை குத்பா பிரசங்கத்தை சுருக்கிக் கொள்ளுமாறு சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
குத்பாக்கள் நீண்டு விடுவதனால் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றார்கள். சென்ற காலங்களில் பரீட்சை எழுதும் நிலையங்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் நீண்ட தூரம் உள்ள இடங்களில் பரீட்சை எழுதும் மாணவர்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டி இருந்தது.
எனவே பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன் கருதி கதீப்மார்கள் தம் குத்பா பிரசங்கங்களை இயன்றளவு சுருக்கிக் கொள்ளுமாறும், பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி விடயத்தில் உதவியாக இருந்து சிறந்த பெறுபேருகளை பெற வழி செய்யுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உமலா வேண்டிக் கொள்கிறது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
இறுதித் தூதர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு இரண்டு கட்டுரைப் போட்டிகளை நடாத்துவதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தீர்மானித்துள்ளது.
ஆய்வுக் கட்டுரை
தலைப்பு : “பல்லின சமூகங்களுக்கிடையிலான நட்புறவும் நபிகள் பெருமானாரின் வழிகாட்டல்களும்”
சொற்கள் : 4500 – 5000
மொழி : தமிழ் மற்றும் சிங்களம்
தகைமைகள் : பி.ஏ (B.A), எம். ஏ (M.A) முடித்தவர்கள் அல்லது ஆசிரியர் பயிலுனர் கல்லூரியில் பயின்றவர். (College of Education)
விருதுகள்:
முதலாமிடம் : ரூபா 100,000
இரண்டாமிடம் : ரூபா 75,000
மூன்றாமிடம் : ரூபா 50,000
பங்குபற்றுபவர்களில் 20 நபர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.
கட்டுரை
தலைப்புக்கள்:
“நபி முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் பன்முக ஆளுமை”
அல்லது
“நற்குண சீலர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்”
அல்லது
“மனித நேயம் போதித்த மாநபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்”
சொற்கள் : 1500 – 2000
மொழி : தமிழ் மற்றும் சிங்களம்
தகைமைகள் : உயர் தரப் பரீட்சையில் தோற்றியவர்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்பவர்கள்.
விருதுகள் :
முதலாமிடம் : ரூபா 75,000
இரண்டாமிடம் : ரூபா 50,000
மூன்றாமிடம் : ரூபா 30,000
பங்குபற்றுபவர்களில் 20 நபர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.
நிபந்தனைகள்
கட்டுரை சுய ஆக்கமாக இருக்க வேண்டும்.
இதற்கு முன் எழுதப்பட்ட ஆக்கமாக இருக்கக்கூடாது.
உசாத்துணைகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாத விருப்பமுள்ள அனைவரும் பங்குபற்றலாம்.
பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பன கட்டுரையுடன் சேர்த்து இணைக்கப்பட வேண்டும்.
கட்டுரை எழுத விரும்புவர்கள் 10.12.2019 ஆம் திகதிற்கு முன்பாக ஜம்இய்யாவின் பின்வரும் இலக்கத்துடன் தொடர்ப்பு கொண்டு தங்களை பதிவு செய்;து கொள்ளவேண்டும்.
கட்டுரைகள் யாவும் 31.01.2020 திகதிக்கு முன்னர் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படல் வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “கட்டுரைப் போட்டி 2019” எனக் குறிப்பிடப்படவேண்டும்.
ஆண்கள், பெண்கள் அனைவரும் பங்குபற்ற முடியும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
281, ஜயந்த வீரசேக்கர மாவத்த,
கொழும்பு -10
மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்:
011-7490490 / 077-3185353 (வார நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00மணி வரை)