2023.10.04 ஆம் திகதி இலங்கை இராணுவப் படையின் 74 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு முஸ்லிம் இராணுவ சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு கொள்ளுப்பிட்டி ஜுமுஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற இஸ்லாமிய மத நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் விஷேட அதிதியாக கலந்து கொண்டார்கள்.
குறித்த நிகழ்வில் இராணுவ கட்டளைத் தளபதி லெப்ட்டினன் ஜெனரல் விகும் லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன் ஏனைய இராணுவ உயர் அதிகாரிகள், நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினர், கொள்ளுப்பிட்டி ஜுமுஆ பள்ளிவாயிலின் பிரதம இமாம் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்துகொண்ட ஜம்இய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் இலங்கை இராணுவத்தினருக்கு மார்க்க உபதேசங்களை வழங்கியதோடு அவர்களுக்காக விஷேட துஆ பிரார்த்தனைகளையும் நிகழ்த்தினார்கள்.