இவ்வார (2021.07.30) ஜுமுஆ குத்பாவிற்கான வழிகாட்டல்

ACJU/NGS/2021/157

2021.07.29

நாட்டில் கொவிட்-19 தொற்று மிகத் தீவிரமாக பரவி வரும் தற்போதைய கட்டத்தில் சுகாதார வழிகாட்டல்களை சரியான முறையில் பின்பற்றியும் நடப்பது மிகவும் அவசியமானதாகும். முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், பௌதீக இடைவெளிப் பேணுதல், அனாவசியமாக வெளியில் செல்லாதிருத்தல் போன்ற விடயங்களில் மிகக் கவணமாக இருத்தல் வேண்டும்.

2021.07.28 ஆம் திகதிய சுகாதார தகவலின் அடிப்படையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப்பற்றாக் குறையும் ஏற்பட்டுள்ளது என்பதை அவதானிக்க முடிகின்றது.

தற்போது எமது அன்றாட விடயங்களை மேற்கொள்வதற்கு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், சிலர் மரண வீடுகளிலும், திருமண வைபவங்களிலும், பொது இடங்களிலும் மேற்படி தரப்பட்டிருக்கும் வழிகாட்டல்களுக்கும் நிபந்தனைகளுக்கும் மாற்றமாக செயற்படுகின்ற விடயம் அன்றாடம் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது. இவ்விடயங்களில் முஸ்லிம் சமூகம் மிகவும் பொருப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் சுகாதார அமைச்சு, வக்பு சபை மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆகியன வழங்கியுள்ள வழிகாட்டல்களை மக்கள் பின்பற்ற ஊக்குவிக்கும் விதமாகவும், கவனயீனமாக செயற்படும் போது ஏற்படும் விபரீதங்களை எடுத்துக்காட்டியும் இவ்வார குத்பா பிரசங்கங்களை சுருக்கமாக அமைத்துக் கொள்ளுமாறு கண்ணியம்மிக்க கதீப்மார்களை அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.

வஸ்ஸலாம்.

 

அஷ் ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *