2024 ஜனவரி மாதம் முழுவதும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர் கல்விக் குழுவின் வழிகாட்டலில் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் (AUMSA) ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியினை தொடரும் மாணவர்களுக்கான அந்-நஸீஹா-மார்க்க நல்லுபதேச நிகழ்ச்சிகள் ZOOM தொழிநுட்பம் வாயிலாக நடாத்தப்பட்டன.
மார்க்கப் பற்றுள்ள, ஒழுக்கமுள்ள, உயர் பண்புகளைக் கொண்ட சிறந்த கல்விச் சமூகமொன்றை உருவாக்குதல் எனும் நோக்கத்தின் அடிப்படையில் இந்நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டன.
- 01.04 – கிழக்குப் பல்கலைக்கழகம் – அஷ்–ஷைக் எம். அர்கம் நூராமித்
- 01.05 – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் – அஷ்–ஷைக் நுஸ்ரத்
- 01.08 – கிழக்குப் பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகம் – அஷ்–ஷைக் நுஸ்ரத்
- 01.10 – சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிலையம் – அஷ்–ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி
- 01.15 – வயம்ப பல்கலைக்கழகம் – அஷ்–ஷைக் எம். ரிபாஹ் ஹஸன்
- 01.23 – ஊவா–வெல்லஸ பல்கலைக்கழகம் – அஷ்–ஷைக் எம்.எஸ்.எம். நாழிம்
- 01.31 – பேராதெனிய பல்கலைக்கழகம் – அஷ்–ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி
இந்நிகழ்ச்சிகள் யாவும் ZOOM தொழிநுட்பம் வாயிலாக நடாத்தப்பட்டதோடு Youtube மூலமாகவும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.
– ACJU Media –