தலைமையகப் பணிகளில் ஸதகாவினூடாக இணைந்து கொள்ள ஜம்இய்யா தனது அங்கத்தவர்களை குறிப்பாகவும், ஆலிம்களை பொதுவாகவும் அன்போடு அழைக்கின்றது

Acju/finance/2023/68

2023.06.21 (1444.12.02)

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

 

இலங்கை வாழ் முஸ்லிம்களின் சமய, சமூக விவகாரங்களில் நூற்றாண்டுக்கு மேலாக தன்னலம் பாராது உழைத்து வரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது அங்கத்தவர்களுக்கு அதனது அடிப்படைச் செலவுகளில் பங்கெடுத்து காலத்தால் அழியாத நன்மைகளிலும் நலவுகளிலும் பங்குதாரர்கள் ஆவதற்கான அரியதொரு வாய்ப்பை வழங்குகிறது.

ஜம்இய்யாவின் முக்கிய பணிகள்

 முஸ்லிம்களில் அனைத்துத் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மார்க்க விவகாரங்களில் தெளிவுகளையும், வழிகாட்டல்களையும், மார்க்கத் தீர்ப்புக்களையும் வழங்குதல்.

 ஆன்மிக, ஒழுக்க, பண்பாடு சார்ந்து மக்களை நெறிப்படுத்துதல்.

 இஸ்லாமிய இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் ஒளிமயமான எதிர்காலத்தைக் கவனத்திற்கொண்டு ஆன்மிகம், கல்வி, தொழில் சார்ந்த நிகழ்ச்சிகளை நடாத்துவதோடு உளவள ஆலோசனைகளையும் வழங்குதல்.

 சிறார்கள் அல்குர்ஆனை ஓதவும், அடிப்படை மார்க்கக் கல்வியைக் கற்றுக்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

 இஸ்லாமிய வரையறைக்குள் நின்று பிறமத சகோதரர்களுடன் சகவாழ்வைக் கட்டியெழுப்பத் தேவையான முயற்சிகளை முன்னெடுத்தல்.

 பிறமத சகோதரர்களிடம் காணப்படும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான சந்தேகங்களையும் தப்பபிப்பிராயங்களையும் களையும் நோக்குடன் பல்லின சமூகத் தலைவர்களையும் மதகுருமார்களையும் சந்தித்து தேவையான தெளிவுகளை வழங்குதல்.

 இந்நாட்டில் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்வதில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சட்டத்தரணிகளுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

 இஸ்லாமிய சமூகத்துக்குத் தேவையான நூல்கள், கையேடுகள், அறிக்கைகள், மொழிபெயர்ப்புகளை மும்மொழிகளிலும் வெளியிடல்.

ஜம்இய்யாவின் பணிகளைப் பொறுத்தவரையில் உலமாக்கள் விவகாரம், முஸ்லிம்கள் விவகாரம், பிரஜைகள் விவகாரம், செயலகத்தின் உள் நிர்வாகம் என்று 04 பிரதான பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதோடு முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 51 நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், 56 பத்வாக் குழு உறுப்பினர்கள் மேலும் உப குழுக்களில் பல உலமாக்கள் அல்லாஹ்வின் பொருத்தத்தை மாத்திரம் நாடி தமது உடலாலும் பொருளாலும் அர்ப்பணிப்புகளைச் செய்து வருவதுடன் 30 க்கும் மேற்பட்ட முழுநேர பணியாளர்கள் தொடர்ச்சியாக இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸதகா ஜாரியாவாக அமையும் இச்சமூகப் பணிகளைச் செய்வதற்கான ஜம்இய்யாவின் அன்றாட செலவுகளில் ஒவ்வொரு அங்கத்தவர்களும் வருடாந்தம் ஐயாயிரம் (5000.00) ரூபாவைச் செலுத்தி நன்மைகளில் பங்கெடுப்பதற்கான புதியதொரு திட்டத்தை ஜம்இய்யா 2023 ஆம் ஆண்டு துல்ஹிஜ்ஜா மாத்தின் சிறப்புமிக்க முதல் பத்தில் ஆரம்பித்து வைக்கின்றது அல்ஹம்துலில்லாஹ்.

எனவே தங்களது ஸதகாக்களை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஜம்இய்யாவின் கணக்கிலக்கங்களில் உங்களுக்கு வசதியான ஏதாவதொன்றில் வைப்புச் செய்து பற்றுச் சீட்டை 0777121767 என்ற வட்ஸப் இலக்கத்திற்கு அனுப்பிவைக்கவும்.

அல்லாஹு தஆலா நம்மனைவருக்கும் ஸதகா போன்ற நற்கருமங்களில் ஈடுபட்டு அவனது பொருத்தத்தை பெற்றுக்கொள்ள நல்லருள் புரிவானாக!

 

Commercial Bank   
All Ceylon Jamiyyathul Ulama
AC NO 1901005001
Commercial Bank
IBU Branch
Swift Code : CCEYLKLX

 

Amana Bank
All Ceylon Jamiyyathul Ulama
AC NO 0010112110015
Amana Bank
Main Branch Colpetty
Swift Code : AMNALKLX

 

Bank of Ceylon
All Ceylon Jamiyyathul Ulama
AC NO 0088538556
Bank of Ceylon
Islamic Banking Unit Branch
Swift Code BCEYLKL

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *