தொழுகைப் பகுதியில் விரிக்கப்படும் தரை விரிப்பு (Carpet) தொடர்பான மார்க்க விளக்கம்

ACJU/FTW/2024/27-559/ORG-01
2024.07.08 (1446.01.01)

 

கேள்வி: தொழுகைப் பகுதியில் விரிக்கப்படும் தரை விரிப்பு (Carpet) தொடர்பான வரம்புகள் (Limitations) யாவை? Blank Carpet ஆகவே இருக்க வேண்டுமா? Designs அனுமதி என்றால் அதனுடைய வரம்புகள் (Limitations) என்ன?

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தொழுகையில் உடல், உடை மற்றும் தொழும் இடம் ஆகிய அனைத்தும் தொழுகையை விட்டும் உள்ளத்தைத் திசைதிருப்பக் கூடியதாக இருக்கக்கூடாது. தொழும் பொழுது பிற சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடிய, பார்வைகளைத் திருப்பக்கூடிய, கவனத்தை மாற்றக்கூடிய அனைத்து விடயங்களும் (மக்ரூஹ்) வெறுக்கத்தக்கவைகளாகும்.

ஷாபிஈ மத்ஹபின் மிக முக்கிய இமாம்களில் ஒருவரான இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:

தொழுகையில் உள்ளச்சத்தை நீக்கக்கூடியவைகளின் மீதோ அல்லது உருவம் மற்றும் சிலுவைகள் வரையப்பட்டுள்ள துணிகளின் மீதோ, அவற்றை நோக்கியோ அல்லது அவற்றை அணிந்த நிலையிலோ தொழுவது (மக்ரூஹ்) வெறுக்கத்தக்க விடயமாகும். (அல்-மஜ்மூஃ) 1

ஹனபி, மாலிகி மற்றும் ஹன்பலி மத்ஹப்களைச் சேர்ந்த அறிஞர்களின் கருத்துக்களும் இதுவேயாகும். என்றாலும் ஹன்பலி மத்ஹபின் இன்னுமொரு கருத்தின்படி இவ்வாறு தொழுவது ஹராமாகும்.2

عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي خَمِيصَةٍ لَهَا أَعْلَامٌ، وَقَالَ: «شَغَلَتْنِي أَعْلَامُ هَذِهِ فَاذْهَبُوا بِهَا إِلَى أَبِي جَهْمٍ، وَأْتُونِي بِأَنْبِجَانِيَّةٍ» (صحيح مسلم – 556)

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். (தொழுது முடிந்ததும்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதன் வேலைப்பாடுகள் எனது கவனத்தை ஈர்த்து விட்டன. எனவே இந்த ஆடையை (எனக்கு அன்பளித்த) அபூ ஜஹ்மிடம் கொடுத்து விட்டு (அவரிடமிருந்து மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள். (நூல் : ஸஹீஹு முஸ்லிம் : 556)

ஆகவே, மஸ்ஜித்களில் தொழுகைக்காக விரிக்கப்படும் விரிப்புகளில் அலங்கார வேலைப்பாடுகள் உள்ள விரிப்புகளைத் தவிர்த்து, அலங்காரமற்ற விரிப்புகளைத் தெரிவு செய்து கொள்வது தொழுகையை உள்ளச்சத்துடன் நிறைவேற்ற ஏதுவாக இருக்கும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்!

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்

செயலாளர் – ஃபத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

 

அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி

தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

 

——————

 

[1] قال الإمام النووي : وأما الثوب الذي فيه صور أو صليب أو ما يلهي فتكره الصلاة فيه وإليه وعليه للحديث (المجموع)

[2] وَلَا يُكْرَهُ نَقْشُ الْمَسْجِدِ وَهُوَ الْمَذْكُورُ فِي الْجَامِعِ الصَّغِيرِ بِلَفْظٍ لَا بَأْسَ بِهِ وَقِيلَ يُكْرَهُ لِلْحَدِيثِ إنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ تَزْيِينَ الْمَسَاجِدِ وَقِيلَ مُسْتَحَبٌّ لِأَنَّهُ مِنْ عِمَارَتِهِ وَقَدْ مَدَحَ اللَّهُ فَاعِلَهَا بِقَوْلِهِ { إنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ } وَأَصْحَابُنَا قَالُوا بِالْجَوَازِ مِنْ غَيْرِ كَرَاهَةٍ وَلَا اسْتِحْبَابٍ لِأَنَّ مَسْجِدَ رَسُولِ اللَّهِ كَانَ مُسَقَّفًا مِنْ جَرِيدِ النَّخْلِ وَكَانَ يُكَفُّ إذَا جَاءَ الْمَطَرُ وَكَانَ كَذَلِكَ إلَى زَمَنِ عُثْمَانَ ثُمَّ رَفَعَهُ عُثْمَانُ وَبَنَاهُ وَبَسَطَ فِيهِ الْحَصَى كَمَا هُوَ الْيَوْمُ كَذَلِكَ وَمَحَلُّ الِاخْتِلَافِ فِي غَيْرِ نَقْشِ الْمِحْرَابِ أَمَّا نَقْشُهُ فَهُوَ مَكْرُوهٌ لِأَنَّهُ يُلْهِي الْمُصَلِّيَ كَمَا فِي فَتْحِ الْقَدِيرِ وَغَيْرِهِ قَالَ الْمُصَنِّفُ فِي الْكَافِي (وفى البحر الرائق شرح كنز الدقائق للحنفية)

ففي البيان والتحصيل لابن رشد رحمه الله: “وتحسين بناء المساجد وتحصينها مما يستحب، وإنما الذي يكره تزويقها بالذهب وشبهه، والكتب في قبلتها؛ لأن ذلك مما يشغل المصلين، ويلهيهم عن الصلاة”

وَ يُكْرَهُ اسْتِقْبَالُ مَا يُلْهِيهِ لِأَنَّهُ يَشْغَلُهُ عَنْ إكْمَالِ صَلَاتِهِ وَعَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي خَمِيصَةٍ لَهَا أَعْلَامٌ فَنَظَرَ إلَى أَعْلَامِهَا نَظْرَةً فَلَمَّا انْصَرَفَ قَالَ اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إلَى أَبِي جَهْمٍ وَآتُونِي بِأَنْبِجَانِيَّةِ أَبِي جَهْمٍ فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا عَنْ صَلَاتِي مُتَّفَقٌ عَلَيْهِ “كشف القناع عن متن الإقناع”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *