ரமழான் மாதம் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இது ஷஃபான் மாதத்தை அடுத்து வரக்கூடியதாகும்.
ரமழான் மாதம் பற்றி
ரமழானுடைய மாதம் மிகவும் சிறப்பான, மகத்தான ஒரு மாதமாகும். ஏனைய மாதங்களை விட தனித்துவமிக்கதாகும்.
அல் குர்ஆன் இறக்கப்பட்ட மாதம்:
‘ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது.’
(அத்தியாயம்: அல் பகரஹ், வசனம்: 185)
லைலதுல் கத்ரை உள்ளடக்கிய மாதம்:
ஹழ்ரத் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்ளூ ‘ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: ஸஹீஹுல் புகாரி 2017)
சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்ற மாதம்:
ஹழ்ரத் அபூ ஹுரைரஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: ‘ரமழான் மாதம் வந்துவிட்டால், சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, மேலும் (நரக) நெருப்பின் வாயில்கள் மூடப்படுகின்றன, மேலும் ஷைத்தான்கள் சங்கிலியால் பிணைக்கப்படுகிறார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: ஸஹீஹுல் புகாரி 3277)
நரக விடுதலை அளிக்கப்படும் மாதம்:
ஹழ்ரத் அபூ ஹுரைரஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: ‘ரமழான் மாதத்தின் முதல் இரவில் ஷைதான்களும் ஜின்களும் சங்கிலியால் பிணைக்கப்படுகிறார்கள். (நரக) நெருப்பின் வாயில்கள் மூடப்படுகின்றன. அவற்றில் எந்த வாயிலும் திறக்கப்படுவதில்லை. சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் எந்த வாயிலும் மூடப்படுவதில்லை. மேலும் ஒரு அழைப்பாளர் அழைக்கிறார்: ‘ஓ நல்லதைத் தேடுபவரே அருகில் வருவீராகா!’ மேலும் ‘தீமையை நாடுபவனே! நிறுத்திக் கொள்வாயாக! அல்லாஹ்வுக்கு நரக நெருப்பிலிருந்து விடுவிக்கப்படுபவர்கள் இருக்கின்றார்கள். அது ஒவ்வொரு இரவுமாகும் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: ஸுனனுத் திர்மிதீ – 682)
ரமழான் மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்
01. பத்ருடைய நிகழ்வு இடம்பெற்றமை – ஹிஜ்ரி 02 ஆம் ஆண்டு
(நூல்: அல்பிதாயஹ் வன்நிஹாயஹ், பாகம்: 03)
02. ஸகாத்துல் ஃபித்ர் கடமையாக்கப்பட்டமை – ஹிஜ்ரி 02 ஆம் ஆண்டு
(நூல்: அஸ்னல் மதாலிப், பாகம்: 04)
03. ஹஸன் இப்னு அலீ ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் பிறப்பு இடம்பெற்றமை – ஹிஜ்ரி 03 ஆம் ஆண்டு
(நூல்: அத்தபகாத்துல் குப்ரா, பாகம்: 01)
04. அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தமை – ஹிஜ்ரி 08 ஆம் ஆண்டு
(நூல்: அல்பிதாயஹ் வன்நிஹாயஹ், பாகம்: 04)
05. ஃபத்ஹ் மக்கஹ் (மக்கா வெற்றி) இடம்பெற்றமை – ஹிஜ்ரி 08 ஆண்டு
(நூல்: தாரீகுத் தப்ரி, பாகம்: 03)
06. ஹழ்ரத் பிலால் இப்னு ரபாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கஃபாவில் முதல் தடவையாக அதான் கூறியமை – ஹிஜ்ரி 08 ஆம் ஆண்டு
(நூல்: அல்பிதாயஹ் வன்நிஹாயஹ், பாகம்: 04)
வணக்கவழிபாடுகள் பற்றி:
ரமழான் மாதத்துக்கென பிரத்தியேகமான வணக்கவழிபாடுகள் காணப்படுகின்றன.
ரமழான் மாதத்தின் நோன்பு:
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும்.
ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்ளூ இஸ்லாம் ஐந்து (தூண்கள்)மீது நிறுவப்பட்டுள்ளது: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியளிப்பது, தொழுகையைக் கடைப்பிடிப்பது, ஸகாத் வழங்குவது, ஹஜ் செய்வவது மற்றும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது (ஆகிய ஐந்தும்) என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: ஸஹீஹுல் புகாரி, 08)
அல் குர்ஆன் ஓதுதல் மற்றும் செவிமடுத்தல்:
ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவி;கின்றார்கள்ளூ ‘ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.’
(நூல்: ஸஹீஹுல் புகாரி, 06)
இரவு வணக்கம் (தராவீஹ், தஹஜ்ஜுத், வித்ர்):
ஹழ்ரத் அபூ ஹுரைரஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்ளூ ‘நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: ஸஹீஹுல் புகாரி, 37)
தானதர்மம்:
ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவி;கின்றார்கள்ளூ ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்’
(நூல்: ஸஹீஹுல் புகாரி, 06)
நோன்பாளியின் துஆ:
ஹழ்ரத் அபூ ஹுரைரஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்ளூ ‘பிரார்த்தனை நிராகரிக்கப்படாத மூன்று பேர் உள்ளனர்: நோன்பாளி நோன்பு திறக்கும் வரை, நேர்மையான தலைவர் மற்றும் அநீதியிலைக்கப்பட்ட நபரின் பிரார்த்தனை அல்லாஹ் அதை மேகங்களுக்கு மேலாக உயர்த்தி, அதற்கு வானத்தின் வாயில்களைத் திறக்கிறான். மேலும் அல்லாஹு தஆலா கூறுகின்றான்: ‘என் கண்ணியத்தின் மீது சத்தியமாக சிறிது காலத்திற்குப் பிறகேனும் நான் நிச்சயமாக உங்களுக்கு உதவுவேன் என அல்லாஹு தஆலா கூறுகின்றான் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்.
(நூல்: ஸுனனுத் திர்மிதீ – 3598)
உம்ரா:
ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழியல்;லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்ளூ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் ஹஜ்ஜை முடித்துத் திரும்பியபோது உம்மு ஸினான் அல் அன்ஸாரியா என்ற பெண்மணியிடம், ‘நீர் ஹஜ்ஜுக்கு வர என்ன தடை?’ என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, ‘என் கணவரே காரணம்; அவருக்கு தண்ணீர் இறைக்கும் இரண்டு ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் ஏறி அவர் ஹஜ்ஜுக்குச் சென்றார்; மற்றொன்று எங்களுக்குரிய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது (இதுவே காரணம்)’ என்று கூறினார். ‘ரமழானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: ஸஹீஹுல் புகாரி, 1863)
நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தல்:
ஹழ்ரத் ஸைத் பின் காலித் அல் ஜுஹனீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்ளூ ‘யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு’ என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: ஸுனனுத் திர்மிதீ – 807)
தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதல்:
தராவீஹ் தொழுகைக்ப்பின்னர் வித்ர் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது முஸ்தஹப்பாகும்.
(நூல்: அல் மஜ்மூஃ, பாகம்: 05)
பிந்திய அரைப் பகுதியில் வித்ர் தொழுகையில் குனூத் ஓதுதல்:
ரமழான் மாதத்தின் பிந்திய அரைப் பகுதியில் வித்ர் தொழுகையின் இருதி ரக்அத்தில் ருகூவுக்குப்பின்னர் குனூத் ஓதுவது ஸுன்னத்தாகும்.
(நூல்: அல் மஜ்மூஃ, பாகம்: 04)
இறுதிப் பத்தில் இஃதிகாஃப் இருத்தல்:
ஹழ்ரத் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்ளூ ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்.’
(நூல்: ஸஹீஹுல் புகாரி, 2026)
லைலதுல் கத்ர் எனும்இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடல்:
ஹழ்ரத் அபூ ஹுரைரஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்ளூ ‘லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார்நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: ஸஹீஹுல் புகாரி, 1901)
PDF Download Link: https://drive.google.com/file/d/1OFlcgb4DXnMFAhjd0g06yOuLcvc_HUQO/view?usp=sharing