வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரியுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது

ACJU/SOC/2022/08

2022.12.27 (1444.06.02)

அனைத்து விதமான சோதனைகளிலிருந்தும் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா, எம்மனைவரையும் பாதுகாத்தருள்வானாக!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் நமது நாடும் நாட்டு மக்களும் அதிகமான இழப்புக்களைச் சந்தித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. இந்நிலையில் கடந்த 2022-12-24 ஆம் திகதியன்று பெய்த கடும் மழையால் அக்குறணை நகரத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான கடைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் ஏற்பட்ட சேதம் பல நூறு கோடிகளைத் தாண்டியுள்ளதாக அறிய முடிகிறது.

அக்குறணை வாழ் மக்களைப் பொறுத்தவரை, நாட்டில் ஏற்பட்ட அனைத்துவிதமான நெருக்கடிகளின் போதும் ஜம்இய்யாவுடன் இணைந்து, உதவிக்கரம் நீட்டி வந்தவர்கள். இனமத பேதமின்றி நாட்டின் நாலா புறத்திலுள்ளவர்களுக்கும் பெருந்தொகையான, பெறுமதியான உதவிகளைச் செய்து வந்தவர்கள் என்பதை ஜம்இய்யா நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர்களின் நிலைமைகள் சீரடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறது.

இன்று அந்த மக்கள் வரலாறு காணாத பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளதால் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலுள்ள அனைவரும் தம்மாலான நிதி உதவிகளை அவர்களுக்கு வழங்கி, இப்பொருளாதார இழப்பிலிருந்து வெகுசீக்கிரம் அவர்கள் மீண்டு வர உதவுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் தயவாய் வேண்டிக் கொள்கின்றது. அத்துடன் ஜம்இய்யாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகள் இந்த விடயத்தில் முக்கிய கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றது.

உங்களது நிதி உதவிகளை வழங்க விரும்புவர்கள் பின்வரும் வழிகளில் வழங்கலாம் :

01. அக்குரணை அஸ்னா மத்திய பள்ளிவாசலில் அல்லது அக்குறணை ஜம்இய்யத்துல் உலமா காரியாலயத்தில் ஒப்படைக்கலாம். அல்லது பின்வரும் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு பற்றுச் சீட்டினை 0777 467171 என்ற வட்சப் இலக்கத்திற்கு அனுப்பிவைக்கவும்.

AKURANA JAMIYYATHUL ULAMA  –  Disaster Relief Fund

0100115399001 Amana Bank – Akurana Branch

 

02. மேலும்,கண்டி தெய்யன்னவெல சுதும்பொல ஆகிய பகுதிகளில் சுமார் 300 வீடுகளும் அதிலுள்ள பொருட்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது. எனவே, அவர்களுக்கான உதவிகளை, கீழ்வரும் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு உதவுமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.

Bank Account Details: Katukelle Jumma Masjid

Amana Bank, Kandy Branch

0010033850002

 

03. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையக காரியாலயத்தில் ஒப்படைக்கலாம். அல்லது பின்வரும் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு பற்றுச் சீட்டினை 0777121767 என்ற வட்சப் இலக்கத்திற்கு அக்குரணைக்குரியது என குறிப்பிட்டு அனுப்பிவைக்கவும்.

 

All Ceylon Jamiyyathul  Ulama

AC NO 1901005000

Commercial Bank – IBU Branch

 

All Ceylon Jamiyyathul Ulama

AC NO 0010112110014

Amana Bank – Main Branch

 

மேலதிக தொடர்புகளுக்கு – அக்குரணை 0777467171, 0773841409, 0772492609, 077807070, 0767444327

தலைமையகம்: 0117490490 – 0777571876

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *