ஷைகுல் ஹதீஸ் அஷ்ஷைக் மௌலானா ஏ.ஈ.எம். அப்துர் ரஹ்மான் – மிஸ்பாஹி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

ACJU/NGS/2021/254
2021.11.14 (1443.04.08)

 

இந்தியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஆலிம்களில் ஒருவரான ஷைகுல் ஹதீஸ் அஷ்ஷைக் மௌலானா ஏ.ஈ.எம். அப்துர் ரஹ்மான் – மிஸ்பாஹி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. சிறந்த மார்க்க அறிஞரும், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவரும், தற்போதைய வழிகாட்டல் குழு உறுப்பினருமாகிய ஷைகுல் ஹதீஸ் அஷ்ஷைக் மௌலானா ஏ.ஈ.எம். அப்துர் ரஹ்மான் – மிஸ்பாஹி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கடந்த 2021.11.12 ஆம் திகதி இரவு வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார், லால்பேட்டையில் அமைந்துள்ள ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியின் மூத்த பேராசிரியரும் ஹதீஸ் கலையில் பாண்டியத்தியம் பெற்றவருமாவார்கள். ஆற்றல் மிகு கல்வி ஞானமும், ஆழமான புரிந்துணர்வும், ஹதீஸ் கலையில் ஆழ்ந்த அறிவும் கொண்ட அன்னார் மார்க்கப் பணிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்து சமூகற்திற்காக பல சேவைகளை மேற்கொண்டுள்ளார்கள். கடந்த 2015.03.05 ஆம் திகதி அன்னார் தமிழக ஜமாஅத்துல் உலமா தூதுக் குழுவுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு வருகைத்தந்து அதன் செயற்பாடுகளை பார்வையிட்டதோடு, ஜம்இய்யாவின் பணிகளை வரவேற்று பல முக்கிய விடயங்களைக் கலந்துரையாடியது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், தமிழக மற்றும் இந்திய மக்கள் என அன்னாருடன் தொடர்புபட்ட அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து இலங்கை உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, தவறுகளை மன்னித்து, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله

 

(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக.)

 

 

அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்i க ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *