2024.07.07ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா குழுவினரால் அப்பிரதேசத்தில் உள்ள முஅல்லிம்கள், முஅல்லிமாக்கள் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கான வலுவூட்டல் செயலமர்வு காத்தான்குடி பிரதேச மண்டபமொன்றில் நடைபெற்றது.
இதில் அப்பிரதேசத்தினை சேர்ந்த முஅல்லிம்கள், முஅல்லிமாக்கள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகிகள் என சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்து பயன்பெற்றனர்.
இச்செயலமர்வில் வளவாளர்களாக ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத், அஷ்-ஷைக் பாஹிம், அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
– ACJU Media –