அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து

02.09.2017 (10.12.1438)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கிறது.

மகிழ்ச்சிப் பிரவாகத்தால் இலங்கை முஸ்லிம்கள் தக்பீர் முழங்கும் தியாகத்திருநாள் இன்றாகும். ஓரிறைக் கொள்கையை எடுத்துக் கூறுவதற்காக நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் செய்த தியாகங்கள் உலகம் உள்ளவரை நினைவுபடுத்தப்படும். இவை மனித சமூகத்துக்கு சிறந்த முன்மாதிரிகளாகும். அதனையே நாமும் இத்தினத்தில் நினைவு படுத்துகின்றோம்.

“உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்கு திடமாக இவர்களில் (இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடமும் அவரோடு இருந்தவர்களிடமும்) அழகிய முன்மாதிரியிருக்கிறது” – (60:06) என்ற அல் குர்ஆன் வசனத்தை நினைவில் நிறுத்தி தியாக சிந்தையோடும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் உலகில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் உலக முஸ்லிம்கள் பொதுவாகவும் இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாகவும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.

தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!  ஈத் முபாரக்!

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன