Researched Fatwa
ஆரோக்கியத்துக்குக் கெடுதி தரும் பதார்த்தங்கள் கலந்த உணவுப் பொருட்களை உண்ணலாமா
Question

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஒருவர் மற்றவருக்கு நிறைவேற்றவேண்டிய கடமைகள் இருப்பது போன்று, ஒருவர் தனது உடம்புக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளும் உள்ளன என்று நபி ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
عبد الله بن عمرو رضي الله عنهما، أن النبي صلى الله عليه وسلم قال: إن لربك عليك حقا، وإن لبدنك عليك حقا، وإن لأهلك عليك حقا، وإن لزورك عليك حقا، فأعط كل ذي حق حقه.
உடம்புக்கு நிறைவேற்றவேண்டிய கடமைகளில் ஹலாலான, ஆரோக்கியமான உணவை உண்ணுவதும் ஒன்றாகும்.
அல்லாஹ{ தஆலா அல்-குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான்.
يٰٓاَيُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِى الْاَرْضِ حَلٰلًا طَيِّبًا وَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِؕ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ. البقرة : 168
மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், ஹலாலான, பரிசுத்தமானவற்றை உண்ணுங்கள்;. (அல் பகரா : 168)
பரிசுத்தமான உணவு என்பதற்கு அல்-குர்ஆன் விரிவுரையாளர்கள் சிலர் “உடம்புக்கும் புத்திக்கும் தீங்கு விளைவிக்காத உணவு” என்று விளக்கமளித்துள்ளார்கள்.
எனவே, குறிப்பிட்ட உணவொன்றை உண்ணுவதன் மூலம் உடம்புக்கு அல்லது புத்திக்கு தீங்கு ஏற்படும் என்று நம்பிக்கையான உணவு சார் நிபுணர்கள் கூறுமிடத்து அதைத் தவிர்த்தல் வேண்டும்.
இமாம் நவவி றஹிமஹ{ல்லாஹ் அவர்கள் “அல்-மஜ்மூஃ” எனும் தனது நூலில் “சில சமயங்களில் சில பெண்கள் உண்ணும் மண் பற்றிக் கூறும் போது “அது உடம்புக்கு பாதிப்பு ஏற்படுமிடத்து உண்ணுவது கூடாது” என்று கூறியுள்ளார்கள்.
لَا يَحِلُّ أَكْلُ مَا فِيهِ ضَرَرٌ مِنْ الطَّاهِرَاتِ كَالسَّمِّ الْقَاتِلِ وَالزُّجَاجِ وَالتُّرَابِ الَّذِي يؤذى البدن وهو هذا الَّذِي يَأْكُلُهُ بَعْضُ النِّسَاءِ وَبَعْضُ السُّفَهَاءِ وَكَذَلِكَ الْحَجَرُ الَّذِي يَضُرُّ أَكْلُهُ وَمَا أَشْبَهَ ذَلِكَ وَدَلِيلُهُ فِي الْكِتَابِ قَالَ إبْرَاهِيمُ الْمَرُّوذِيُّ وَرَدَتْ أَخْبَارٌ فِي النَّهْيِ عَنْ أَكْلِ الطِّينِ وَلَمْ يثبت شئ منها قال وينبغى أن نحكم بِالتَّحْرِيمِ إنْ ظَهَرَتْ الْمَضَرَّةُ فِيهِ وَقَدْ جَزَمَ الْمُصَنِّفُ وَآخَرُونَ بِتَحْرِيمِ أَكْلِ التُّرَابِ وَجَزَمَ بِهِ الْقَاضِي حُسَيْنٌ فِي بَابِ الرِّبَا قَالَ أَصْحَابُنَا وَيَجُوزُ شُرْبُ دَوَاءٍ فِيهِ قَلِيلُ سَمٍّ إذَا كَانَ الْغَالِبُ مِنْهُ السَّلَامَةَ وَاحْتِيجَ إلَيْهِ قَالَ إمَامُ الْحَرَمَيْنِ وَلَوْ تُصُوِّرَ شَخْصٌ لَا يَضُرُّهُ أكل السموم الطاهرة لم يحرم عليه إذا لا ضرر قال الريانى وَالنَّبَاتُ الَّذِي يُسْكِرُ وَلَيْسَ فِيهِ شِدَّةٌ مُطْرِبَةٌ يَحْرُمُ أَكْلُهُ وَلَا حَدَّ عَلَى آكِلِهِ قَالَ وَيَجُوزُ اسْتِعْمَالُهُ فِي الدَّوَاءِ وَإِنْ أَفْضَى إلَى السُّكْرِ مَا لَمْ يَكُنْ مِنْهُ بُدٌّ قَالَ وَمَا يُسْكِرُ مَعَ غَيْرِهِ وَلَا يُسْكِرُ بِنَفْسِهِ إنْ لَمْ يُنْتَفَعْ بِهِ فِي دَوَاءٍ وَغَيْرِهِ فَهُوَ حَرَامٌ وَإِنْ كَانَ يُنْتَفَعُ بِهِ فِي التَّدَاوِي حَلَّ التَّدَاوِي بِهِ وَاَللَّهُ أَعْلَمُ – (المجموع شرح المهذب )
இவ்வடிப்படையில், உணவுப் பொருட்களில் சேர்க்கப்படக்கூடிய நச்சுப் பொருட்கள் கலந்த இரசாயனத் திரவியங்கள் உடம்புக்குக் கேடு விளைவிக்கும் என்று நம்பிக்கையான உணவு சார் நிபுணர்கள் உறுதிப்படுத்துமிடத்து அதை உண்ணுவது கூடாது. அத்துடன், இது விடயத்தில் ஆதாரபூர்வமற்ற கருத்துக்களை நம்பாது, துறைசார்ந்தவர்களின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து ஒரு முடிவுக்கு வருவது அவசியமாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.