பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வாருங்கள்

02.05.2019

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வாருங்கள்

கடந்த 21.04.2019 அன்று நாட்டில் நடை பெற்ற மனிதபிமானமற்ற தாக்குதல்களால் நாட்டு மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டதை யாவரும் அறிவோம். இந்நிலை மாறி இயல்பு நிலைக்கு திரும்ப பிராத்தனைகளில் ஈடுபடுமாறு அனைத்து முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

 

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைகளின் போது முஸ்லிம்கள் அனைவரும் தம்மாலான உதவிகளை அனைத்து விதத்திலும் செய்து வந்துள்ளனர். அதே போன்று கடந்தவாரம் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி செய்வதற்காக 22.04.2019 ஆம் திகதி முதல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களிடம் நிதி சேகரித்து வருகின்றது.

 

எனவே ஒவ்வொரு மஸ்ஜித் நிருவாகிகளும் எதிர் வரும் இரண்டு ஜுமுஆ தினங்களிலும் பணங்களை சேகரித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பின்வரும் கணக்கிலக்கத்திற்கு வைப்பிலிடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.

 

இந்நிதி சேகரிப்புத் திட்டத்தை அழகிய முறையில் முன்னெடுக்க எமது அனைத்து கிளைகளும் மற்றும் நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் மஸ்ஜித் நிருவாகிகளுக்கு உதவியாக இருக்குமாறும் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

 

 

All Ceylon Jamiyyathul Ulama
AC NO 1901005000
Commercial Bank
IBU – Branch
Swift Code – CCEYLKLX

 

All Ceylon Jamiyyathul Ulama
AC NO 0010112110014
Amana Bank
Main Branch
Swift Code – AMNALKLX

 

அஷ்-ஷைக் எச். உமர்தீன்

செயலாளர், பிரச்சாரக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன