பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பிரார்த்திப்போம்

1441-07-02

2020-02-27

இந்நாட்களில் உலகின் பல பாகங்களிலும் பல்வேறு விதமான அனர்த்தங்கள் பரந்துகொண்டிருக்கின்றன. பயங்கரமான ஆட்கொல்லி நோயால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறே இந்தியாவில் ஏற்பட்டுள்ள இன வன்செயலால் பெரும்தொகையான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வரட்சியும் கடுமையாகவே இருப்பதால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலமைகளை மாற்றியமைக்க எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவால் மாத்திரமே முடியும் அவனிடமே நாம் இந்நிலைகளை மாற்றியமைக்க மன்றாட வேண்டியுள்ளது.

எனவே நாளை ஜும்ஆ கொத்பாவில் இந்த அசாதாரண நிலமைகள் நீங்கவும் வரட்சி நீங்கி செழிப்பு ஏற்படவும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள துரதிஷ்ட நிலமைகள் மாறவும் துஆக்களில் ஈடுபடுமாறு சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன