Researched Fatwa
பெண்களின் பாவனைக்கான தங்க நகைகளில் ஸக்காத் கடமை
Question
Fatwa
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
பெண்களின் சாதாரண பாவனைக்காக உள்;ள தங்க நகைகளில் ஸக்காத் கடமையாகமாட்டாது. இதனை பின்வரும் நபிமொழிகள் உறுதி செய்கின்றன.
‘ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் தனது சகோதரரின் பெண் மக்களுக்கு (அநாதைகள்) தங்க நகைகளை அணிவிப்பார்கள். எனினும் அவைகளுக்காக ஸக்காத்தை நிறைவேற்ற மாட்டார்கள்’. (நூல்: முவத்தா மாலிக்).
‘அஸ்மாஃ (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் தனது பெண் மக்களுக்கு ஐம்பதாயிரம் பெறுமதியான தங்க நகைகளை அணிவிப்பார்கள். எனினும் அவைகளுக்காக ஸக்காத்தை நிறைவேற்ற மாட்டார்கள்’. (நூல்: தாரகுத்னீ).
இவ்விரண்டு நபிமொழிகளும், பெண்களின் ஆகுமான பாவனைக்குரிய தங்க நகைகளில் ஸக்காத் கடமையாக மாட்டாது என்ற கருத்தை உறுதி செய்கின்றன.
இக்கருத்தையே அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா), மாலிக், ஷாஃபிஈ, அஹ்மத் (ரஹிமஹுமுல்லாஹ்) போன்றவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஒரு பெண்ணின் பாவனைக்குரிய வழமையான அளவை விட மேலதிகமான தங்க நகைகளுக்கு ஸக்காத் கொடுக்க வேண்டும். ஊர் வழமையான அளவு என்பது, பிரதேசம், காலம், நபர் போன்ற வித்தியாசங்களுக்கு உட்பட்டதாகும்.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

