2025 ஆகஸ்ட் 22ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் மலேசியாவில் அமைந்துள்ள சிட்டி-பல்கலைக்கழகத்தின் (CITY University Malaysia) பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில், ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் வருகை தந்திருந்த பிரதிநிதிகளுக்கு நூற்றாண்டை கடந்து பயணிக்கும் ஜம்இய்யா பற்றிய அறிமுகத்தினை வழங்கியதுடன் அதன் பணிகள், செயற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.
இதனையடுத்து சிட்டி-பல்கலைக்கழகத்தின் வர்த்தக பீடத்தின் உப தலைவர் கலாநிதி மொஹமட் ரஹீமி அவர்கள் அப்பல்கலைக்கழகத்தில் உள்ள பீடங்கள் மற்றும் கற்கை நெறிகள் குறித்து தெளிவுகளை வழங்கியதுடன் அரபுக் கல்லூரிகளில் பட்டம்பெற்று வெளியாகும் ஆலிம்களுக்கு அங்கு வழங்கப்படும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தும் விளக்கமளித்தார்.
இதன்போது வருகை தந்த பிரதிநிதிகளுக்கு ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட வெளியீடுகள் சிலவும் கையளிக்கப்பட்டன.
இச்சந்திப்பில், ஜம்இய்யா சார்பில் தலைவர் அவர்களுடன் உப தலைவர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். கலீல், ஆலிம்கள் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், ஊடகக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் மற்றும் ஜம்இய்யாவின் ஆளணியினரான அஷ்-ஷைக் சிராஜ், அல்-ஹாபிழ் கஸ்ஸாலி, அஷ்-ஷைக் நுஸ்ரத், அஷ்-ஷைக் பஸால், அஷ்-ஷைக் ஸல்மான், அஷ்-ஷைக் முஆஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.


– ACJU Media –



