அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமையக ஆலிம்களால் காத்தான்குடி பிரதேச ஜுமுஆ பள்ளிவாயல்களில் குத்பா பிரசங்கங்கள் நிகழ்த்தப்பட்டன

2025.06.13ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமையகத்தினால் காத்தான்குடி பிரதேசத்தினை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் அன்றைய வெள்ளிக்கிழமை தினம் அப்பிரதேசத்தில் உள்ள ஜுமுஆ பள்ளிவாயல்களில் ஜம்இய்யாவின் ஆலிம்களால் குத்பா பிரசங்கங்களும் நிகழ்த்தப்பட்டன.

அதனடிப்படையில் அஸ்-ஸெய்யித் ஸெய்ன் மெளலானா ஜும்ஆப் பள்ளிவாயலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் குத்பா பிரசங்கம் நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து, தலைவர் அவர்கள் ஜம்இய்யாவின் வெளியீடுகளை அறிமுகப்படுத்தி வைத்ததுடன் அவற்றினை அன்பளிப்பாகவும் மஸ்ஜித் நிர்வாகிகளிடம் கையளித்தார்.

அதேவேளை, காத்தான்குடி அக்ஸா பள்ளிவாயலில் ஜம்இய்யாவின் ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப் அவர்களும், காங்கேயனோடை பத்ர் ஜுமுஆ பள்ளிவாயலில் ஜம்இய்யாவின் அரபுக் கல்லூரிகளுக்கான குழுவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் அவர்களும் குத்பா பிரசங்கங்களை மேற்கொண்டனர்.

மேலும், ஜம்இய்யாவின் ஃபத்வா குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் மபாஹிம் அவர்களினால் காத்தான்குடி பத்ரிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாயலிலும், இளைஞர் விவகாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் அவர்களினால் காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலிலும் குத்பா பிரசங்கங்கள் நிகழ்த்தப்பட்டன.

– ACJU News –

Related Posts

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பில் ஜம்இய்யா தடையாக உள்ளது என தெரிவித்தமையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன